Monday, 19 November 2018

விது₃ர நீதி - அத்₄யாயம் - 34


விது₃ர நீதி

முப்பத்து நான்காவது அத்யாயம்

ப்ரஜாகரபர்வம் (தொடர்ச்சி)

(திருதராஷ்டிரன் துரியோதனாதியரின் மேன்மைக்கு ஸாதனத்தைக்கேட்க, விதுரர் பலநீதிகளைக்கூறி பாண்டவர்களுக்கு ராஜ்யம் கொடுப்பதே முக்கியஸாதனமென்றது)

धृतराष्ट्र उवाच। 5-34-0x (3450)
जाग्रतो दह्यमानस्य यत्कार्यमनुपश्यसि।
तद्ब्रूहि त्वं हि नस्तात धर्मार्थकुशलः शुचिः ॥ 5-34-1 (32837)
திருதிராஷ்டிரன், “நித்திரையில்லாதவனும், கவலையினால் எரிக்கப்படுகிறவனுமான எனக்கு எந்தக் காரியத்தை ஆலோசித்தறிகிறாயோ அதனைச் சொல்லு. நீயோ நம்மவர்களில் தர்மார்த்தங்களில் ஸமர்த்தனும், சுசியுள்ளவனுமாயிருக்கிறாய்.”

तस्माद्यथावद्विदुर प्रशाधि प्रज्ञापूर्वं सर्वमजातशत्रोः।
यन्मन्यसे पथ्यमदीनसत्व श्रेयस्करं ब्रूहि तद्वै कुरूणाम् ॥ 5-34-2 (32838)
உதாரமான மனத்தையுடையவனே! விதுரா! ஆகையால், அஜாதஸத்துருவுக்கு நன்மையான எல்லாவற்றையும் உள்ளபடி நன்கு உணர்ந்து சொல்லக்கடவாய். கௌரவர்களுக்கு நன்மையைக் கொடுப்பதாக எதை நினைக்கிறாயோ அதைச் சொல்லு.”

पापाशङ्की पापमेवानुपश्यन् पृच्छामि त्वां व्याकुलेनात्मनाहम् ।
कजे तन्मे ब्रूहि तत्पं यथावन्मनीषितं सर्वमजातशत्रोः ॥ 5-34-3 (32839)
கெடுதலைச் ஶங்கிக்கிறவனான நான் கெடுதலைப் பார்ப்பவனாகி வியாகுலமான மனத்துடன் உன்னை வினவுகிறேன். அறிவு தளராதவனே! ஆகையால், அஜாதசத்ருவுக்கு இஷ்டமான எல்லா உண்மையையும் உள்ளபடி சொல்என்று கேட்டான்.

विदुर उवाच। 5-34-4x (3451)
शुभं वा यदि वा पापं द्वेष्यं वा यदि वा प्रियम्।
नापृष्टः कस्यचिद्ब्रूयाद्यः स नेच्छेत्पराभवम् ॥ 5-34-4 (32840)
விதுரர், “அவமானத்தை விரும்பாதவன் சுபத்தையோ அல்லது பாவத்தையோ, துவேஷத்துக்குரிய காரியத்தையோ, அல்லது பிரியத்தையோ, கேளாமல் ஒருவனுக்கும் சொல்லக்கூடாது.

तस्माद्वक्ष्यामि ते राजन्हितं यत्स्यान्कुरून्प्रति।
वचः श्रेयस्करं धर्म्यं ब्रुवतस्तन्निबोध मे ॥ 5-34-5 (32841)
அரசரே! ஆகையால் (நீர் கேட்டபடியால்) கௌரவர்களுக்கு நன்மையும், உறுதியைச் செய்வதும், தர்மத்திலிருந்து விலகாததுமான வார்த்தையை உமக்குச் சொல்லுகிறேன். சொல்லுகிற என்னிடமிருந்து அதைத் தெரிந்து கொள்ளும்.

मिथ्योपेतानि कर्माणि सिध्येयुर्यानि भारत।
अनुपायप्रयुक्तानि मास्म तेषु मनः कृथाः ॥ 5-34-6 (32842)
! பாரதரே! கபடத்துடன் கூடினவையும், கெட்ட உபாயங்களால் செய்யப்பட்டவையும், கைகூடுகின்றவையுமான கார்யங்களில் மனத்தைச் செலுத்தாதீர்.

तथैव योगविहितं यत्तु कर्म न सिध्यति।
उपाययुक्तं मेधावी न तत्र ग्लपयेन्मनः ॥ 5-34-7 (32843)
மேதாவியானவன் அப்படியே யுக்தியினால் செய்யப்பட்டவையும், உபாயங்களுடன் கூடினவையும், பயனை அளியாதவையுமான செய்கைகளில் மனத்தை ஶ்ரமப்படுத்தக்கூடாது.

अनुबन्धानवेक्षेत सानुबन्धेषु कर्मसु।
संप्रधार्य च कुर्वीत सहसा न समाचरेत् ॥ 5-34-8 (32844)
பயனுடன் கூடின கர்மங்களிளேயே பயங்களைப் பார்க்கவேண்டும்; நிஶ்சயித்துச் செய்யவேண்டும், படபடப்பாய்ச் செய்யக்கூடாது.

अनुबन्धं च संप्रेक्ष्य विपाकं चैव कर्मणाम्।
उत्थानमात्मनश्चैव धीरः कुर्वीत वा न वा ॥ 5-34-9 (32845)
தீரனானவன் கர்மங்களினுடைய பலனையும், விபரீத பலனையும் தன்னுடைய வளர்ச்சியையும் நன்றாக அறிந்தே செய்யவேண்டும். அல்லது, செய்யாமலிருக்க வேண்டும்.

य प्रमाणं न जानाति स्थाने वृद्धौ तथा क्षये।
कोशे जनपदे दण्डे न स राज्येऽवतिष्ठते ॥ 5-34-10 (32846)
கோட்டை முதலான இருப்பிடத்திலும் வளர்ச்சியிலும் குறைவிலும் பொக்கிஷத்திலும் பட்டணத்திலும் சேனையிலும் பிரமாணத்தை (அளவு=எல்லை) யறியாதவன் ராஜ்யத்தில் நிலைக்கிறதில்லை.

यस्त्वेतानि प्रमाणानि यथोक्तान्यनुपश्यति।
युक्तो धर्मार्थयोर्ज्ञाने स राज्यमधिगच्छति ॥ 5-34-11 (32847)
எவன் இவைகளைப் பிரமாணங்களைச் சொல்லப்பட்டபடி அறிகிறானோ, தர்மார்த்தங் களிலும் ஞானத்திலும் முயற்சியுள்ளவனான அவன் ராஜ்யத்தை அடைகிறான்.
न राज्यं प्राप्तमित्येव वर्तितव्यमसांप्रतम्।
श्रियं ह्यविनयो हन्ति जरा रूपमिवोत्तमम् ॥ 5-34-12 (32848)
ராஜ்யம் கிடைத்தேவிட்டதென்று தகாதபடி இருக்கக்கூடாது. முதுமையானது உத்தமமான ரூபத்தைக் கெடுப்பதுபோல அடங்காமை செல்வத்தைக் கெடுத்துவிடும்.

भक्ष्योत्तमप्रतिच्छन्नं मत्स्यो बडिशमायसम्।
अन्नाभिलाषी ग्रसते नानुबन्धमवेक्षते ॥ 5-34-13 (32849)
ஆகாரத்தில் விருப்பமுள்ள மீனானது சிறந்தவுணவால் மறைக்கப்பட்ட இரும்புத்தூண்டிலை விழுங்குகிறது; பின்பு நேரிடும் விபரீதமான பயனை அறிகிறதில்லை.

यच्छक्यं ग्रसितुं ग्रस्यं ग्रस्तं परिणमेच्च यत्।
हितं च परिणामे यत्तदाद्यं भूतिमिच्छता ॥ 5-34-14 (32850)
பக்ஷிக்கமுடிவதும், பக்ஷிக்கத்தக்கதும், பக்ஷிக்கப்பட்டு ஜரிக்கிறதும், ஜரிக்கும்போது ஹிதமாயிருப்பதுமானதை க்ஷேமத்தை விரும்புகிறவன் சாப்பிடவேண்டும்.

वनस्पतेरपक्वानि फलानि प्रचिनोति यः।
स नाप्नोति रसं तेभ्यो बीजं चास्य विनश्यति ॥ 5-34-15 (32851)
மரத்திலிருந்து பக்குவமாகாத பழங்களைப் பறிக்கிறவன் அவைகளிலிருந்து ரஸத்தை அடையமாட்டான். அந்த மரத்தினுடைய விதையும் நசித்துவிடுகிறது.

यस्तु पक्वमुपादत्ते काले परिणतं फलम्।
फलाद्रसं स लभते बीजाच्चैव फलं पुनः ॥ 5-34-16 (32852)
முதிர்ந்து பக்குவமான ஸமயத்தில் பழத்தைப் பறிக்கிறவனோ அதிலிருந்து ரஸத்தை அடைகிறான்; விதையினால் மறுபடியுமே பலத்தை அடைகிறான்.

यथा मधु समादत्ते रक्षन्पुष्पाणि षट्पदः।
तद्वदर्थान्मनुष्येभ्य आदद्यादविहिंसया ॥ 5-34-17 (32853)
வண்டுகள் புஷ்பங்களைக் கெடுக்காமல் மதுவைக்கவர்வதுபோல மனிதர்களிடமிருந்து நலியாமல் தனங்களைக் கிரஹிக்க வேண்டும்.

पुष्पं पुष्पं विचिन्वीत मूलच्छेदं न कारयेत् ।
मालाकार इवारामे न यथाङ्गारकारकः ॥ 5-34-18 (32854)
மாலை கட்டுகிறவன் பூந்தோட்டத்தில் செய்வதுபோலப் [1]புஷ்பிக்கப் புஷ்பிக்கப் பறிக்கவேண்டும். கரியைச் சேர்க்கிறவன்போல மூலத்தை நாசஞ்செய்யக்கூடாது.

किं नु मे स्यादिदं कृत्वा किं नु मे स्यादकुर्वतः।
इति कर्माणि सञ्चिन्त्य कुर्याद्वा पुरुषो न वा ॥ 5-34-19 (32855)
மனிதனானவன், ‘இதைச் செய்தால் எனக்கு என்ன உண்டாகும்? இதைச் செய்யாவிட்டால் என்ன உண்டாகும்?’ என்று நன்றாக ஆராய்ந்து கர்மாக்களைச் செய்ய வேண்டும். அப்படியில்லாவிடில் செய்யக்கூடாது.

अनारभ्या भवन्त्यर्थाः केचिन्नित्यं यथाऽगताः ।
कृतः पुरुषकारोऽहि भवेद्येषु निरर्थकः ॥ 5-34-20 (32856)
(ஏனென்றால்) எந்தக் காரியங்களில் செய்யப்பட்ட மனித முயற்சியானது பிரயோஜனமில்லாததாகி விடுமோ அவ்விதம் எப்பொழுதும் ஆரம்பிக்க முடியாதவைகளும் அடையப்படாதவைகளுமாகச் சில கார்யங்கள் ஏற்படுகின்றன.

अनर्थे चैव निरतमर्थे चैव पराङ्भुखम्।
न तं भर्तारमिच्छन्ति षण्ढं पतिमिव स्त्रियः ॥ 5-34-21 (32857)
அனர்த்தத்திலேயே பற்றுள்ளவனும், அர்த்தத்தில் பராங்முகமாயிருக்கிறவனை நபும்ஸகனான பதியை ஸ்த்ரீகள் விரும்பாததுபோல ஜனங்கள் போஷகனாக விரும்புகிறதில்லை.

प्रसादो निष्फलो यस्य क्रोधश्चापि निरर्थकः।
न तं भर्तारमिच्छन्ति षण्ढं पतिमिव स्त्रियः ॥ 5-34-22 (32858)
எவனுடைய மகிழ்ச்சியும் கோபமும் பயனில்லாதவையோ அவனை ஸ்த்ரீகள் நபும்ஸகனான பதியை விரும்பாததுபோல ஜனங்கள் போஷகனாக விரும்புகிறதில்லை.

कांश्चिदर्थान्नरः प्राज्ञो लघुमूलान्महाफलान् ।
क्षिप्रमारभते कर्तुं न दीर्घयति तादृशान् ॥ 5-34-23 (32859)
அறிவுள்ளவனான மனிதன் சிறு முயற்சியுடையவைகளும் பெரிய பயனுள்ளவைகளு மான சிலகாரியங்களைச் செய்யச் சீக்கிரம் ஆரம்பிக்கிறான்; அப்படிப்பட்டவைகளைத் தாமதிக்கச் செய்கிறதில்லை.


ऋजु पश्यति यः सर्वं चक्षुषा नु पिबन्निव ।
आसीनमपि तूष्णीकमनुरज्यन्ति तं प्रजाः ॥ 5-34-24 (32860)
எல்லாவற்றையும் நேத்திரத்தினால் ருஜுவாகப் பார்க்கிறவன் சும்மா (ஒன்றும் செய்யாதவனாக) இருந்தாலும் அவனை மனிதர்கள் விரும்புகிறார்கள்.

सुपुष्पितः स्यादफलः फलितः स्याद्दुरारुहः ।
अपक्वः पक्वसङ्काशो न तु शीर्येत कर्हिचित् ॥ 5-34-25 (32861)
நல்ல புஷ்பங்களுள்ளதாக விருந்தும் பழங்களில்லாததாக விருக்க வேண்டும்; பழங்களுள்ளதாக் விருந்தும் ஏறமுடியாததாயிருக்க வேண்டும். பக்குவமாகாததாக விருந்தும் பக்குவமானதுபோல விருக்கவேண்டும். ஆனால், ஒருபொழுதும் உதிரலாகாது.[2]

चक्षुषा मनसा वाचा कर्मणा च चतुर्विधम्।
प्रसादयति यो लोकं तं लोकोऽनुप्रसीदति ॥ 5-34-26 (32862)
நேத்திரத்தினாலும் மனத்தினாலும் வாக்கினாலும் செய்கையினாலும் எவன் உலகத்தை நான்குவிதமாக மனமகிழச்செய்கிறானோ அவனிடம் உலகம் மகிழ்கிறது.

यस्मात्रस्यन्ति भूतानि मृगव्याधान्मृगा इव।
सागरान्तामपि महीं लब्ध्वा स परिहीयते ॥ 5-34-27 (32863)
மான்பிடிக்கும் வேடனிடமிருந்து மான்கள் பயப்படுவதுபோல் எவனிடமிருந்து பிராணிகள் பயப்படுகின்றனவோ அவன் ஸமுத்திரம் வரையிலுள்ள பூமியை யடைந்தாலும் குறைவை யடைவான்.

पितृपैतामहं राज्यं प्राप्यापि स्वेन कर्मणा।
वायुरभ्रमिवासाद्य भ्रंशयत्यनये स्थितः ॥ 5-34-28 (32864)
அநீதியுடன் கூடியவன் தகப்பன், பாட்டன் வழியாய் வந்த ராஜ்யத்தை யடைந்தாலும் தன்செய்கையால், வாயுவானது மேகத்தை அடைந்து அதனைநழுவச்செய்வதுபோல் ராஜ்யத்தை அடைந்தாலும் நழுவச் செய்கிறான்.

धर्ममाचरतो राज्ञः सद्भिश्चरितमादितः।
वसुधा वसुसंपूर्णा वर्धते भूतिवर्धनी ॥ 5-34-29 (32865)
ஸத்துக்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மத்தை ஆதிமுதற்கொண்டு அனுஷ்டித்து வருகிற அரசனுடைய பூமியானது, தனங்களால் நிரம்பியதும் ஐஶ்வர்யத்தைப் பெருக்குகின்றதுமாக விருத்தியடைகிறது.

अथ संत्यजतो धर्ममधर्मं चानुतिष्ठतः।
प्रतिसंवेष्टते भूमिरग्नौ चर्माहितं यथा। 5-34-30 (32866)
அப்படியில்லாமல், தர்மத்தை விட்டவனும் அதர்மத்தை அநுஷ்டிக்கிறவனுமான அரசனுடைய பூமியானது, அக்னியில் போடப்பட்ட தோல்போலக் குறைவை அடைகிறது.

य एव यत्नः क्रियते परराष्ट्रविमर्दने।
स एव यत्नः कर्तव्यः स्वराष्ट्रपरिपालने । 5-34-31 (32867)
சத்ருவினுடைய ராஜ்யத்தை நாசம்செய்வதில் செய்யப்படுகிற முயற்சியே தன்ராஜ்யத்தின் பரிபாலனத்திலும் செய்யத்தக்கது.

धर्मेण राज्यं विन्देत धर्मेण परिपालयेत्।
धर्ममूलां श्रियं प्राप्य न जहाति न हीयते ॥ 5-34-32 (32868)
தர்மமாக றஜ்யத்தை அடையவேண்டும், தர்மமாகப் பரிபாலிக்கவேண்டும்; தர்மமூலமான செல்வத்தை அடைந்தால், அது நழுவாது. அவன் குறைவையும் அடையமாட்டான்.

अप्युन्मत्तात्प्रलपतो बालाच्च परिजल्पतः।
सर्वतः सारमादद्यादश्मभ्य इव काञ्चनम् ॥ 5-34-33 (32869)
புலம்புகிறவனான பித்தனிடமிருந்தும், மாறிமாறிப் பேசுகிற குழந்தையினிடமிருந்தும் எல்லாவற்றிலிருந்தும் கற்பாறைகளிலிருந்து பொன்னைக் கிரஹிப்பதுபோல ஸாரத்தைக் கிரஹிக்கவேண்டும்.

सुव्याहृतानि महतां सुकृतानि ततस्ततः।
सञ्चिन्वन्धीर आसीत शिलाहारि शिलं यथा ॥ 5-34-34 (32870)
உஞ்சவிருத்தியால் ஆகாரம்செய்கிறவன் கொஞ்சம்கொஞ்சமாகக் கிரஹிப்பதுபோல் மஹான்களுடைய நல்லவசனங்களையும் நல்ல கர்மங்களையும் தீரனானவன் அங்கங்கிருந்து ஸம்பாதிக்கிறவனாக இருக்க வேண்டும்.

गन्धेन गावः पश्यन्ति वेदैः पश्यन्ति ब्राह्मणाः ।
चारैः पश्यन्ति राजानश्चक्षुर्भ्यामितरे जनाः ॥ 5-34-35 (32871)
பசுக்கள் கந்தத்தால் பார்க்கின்றன. பிராமணர்கள் வேதங்களால் பார்க்கிறார்கள். அரசர்கள் சாரர்களால் பார்க்கிறார்கள். மற்றஜனங்கள் நேத்திரங்களால் பார்க்கிறார்கள்.

भूयांसं लभते क्लेशं या गौर्भवति दुर्दुहा ।
अथ या सुदुघा राजन्नैव तां वितुदन्त्यपि ॥ 5-34-36 (32872)
அரசரே! எந்தப் பசுவானது பால்கறக்க இணங்குகிறதில்லையோ அது அதிகமான துன்பத்தை அடைகிறது. அப்படியில்லாமல், எது லேசாகக் கறக்கின்றதோ அதைத் துன்பப்படுத்துவதே யில்லை.

यदतप्तं प्रणमति न तत्सन्तापमर्हति।
यच्च स्वयं नतं दारु न तत्संनामयेद्बुधः ॥ 5-34-37 (32873)
எது காய்ச்சாமளே வளைகிறதோ, அது காய்ச்சப்படுகிறதில்லை. எந்த மரம் தானாகவே வளைந்திருக்கிறதோ அதனை அறிந்தவன் வளைக்கமாட்டான்.

एतयोपमया धीरः सन्नमेत बलीयसे।
इन्द्राय स प्रणमते नमते यो बलीयसे ॥ 5-34-38 (32874)
இந்த உபமானத்தினாலே தீரனானவன் பலவானை வணங்கவேண்டும். பலவானை வணங்குகிறவன் இந்த்ரனை வனங்குகிறவனாவான்.

पर्जन्यनाथाः पशवो राजानो मन्त्रिबान्धवाः।
पतयो बान्धवाः स्त्रीणां ब्राह्मणा वेदबान्धवाः ॥ 5-34-39 (32875)
பசுக்கள் (வர்ஷதேவதையான) பர்ஜன்யனை நாதனாகவுடையவைகள். அரசர்கள் மந்த்ரிகளை உறவினர்களகவுடையவர்கள். ஸ்த்ரீகளுக்குப் பதிகள் பந்துக்கள். பிராமணர்கள் வேதங்களைப் பந்துக்களாக வுடையவர்கள்.

सत्येन रक्ष्यते धर्मो विद्या योगेन रक्ष्यते ।
मृजया रक्ष्यते रूपं कुलं वृत्तेन रक्ष्यते ॥ 5-34-40 (32876)
தர்மமானது ஸத்தியத்தால் காக்கப்படுகிறது. வித்தையானது அப்பியாஸத்தால் காக்கப்படுகிறது. ரூபமானது சுத்தம் செய்வதால் ரக்ஷிக்கப்படுகிறது. குலமானது நல்ல நடையால் ரக்ஷிக்கப்படுகிறது.

मानेन रक्ष्यते धान्यमश्वान्रक्षेदनुक्रमात्।
अभीक्ष्णदर्शनाद्गावः स्त्रियो रक्ष्याः कुचेलतः ॥ 5-34-41 (32877)
அளவினால் தான்யம் ரக்ஷிக்கப்படுகிறது. குஹிரைகளை தேஹப்பயிற்சி முதலியவற்றால் காக்கவேண்டும். அடிக்கடி பார்ப்பதினால் கோக்களை ரக்ஷிக்கவேண்டும். மட்டமான வஸ்த்ரத்தினாலாவது ஸ்த்ரீகள் ரக்ஷிக்கத்தக்கவர்கள்.


न कुलं वृत्तहीनस्य प्रमाणमिति मे मतिः।
अन्तेष्वपि हि जातानां वृत्तमेव विशिष्यते ॥ 5-34-42 (32878)
நடையால் இழிவானவனுக்குக் குலமானது பிரமாணமாகிறதில்லையென்பது என் எண்ணம். கீழ்க்குலத்தில் பிறந்தவர்களானாலும், அவர்களுடைய நன்னடையானது குலத்தைக் காட்டிலும் அதிகமாகிறதல்லவா?

य ईर्षुः परवित्तेषु रूपे वीर्ये कुलान्वये ।
सुखसौभाग्यसत्कारे तस्य व्याधिरनन्तकः ॥ 5-34-43 (32879)
எவன் பிறர்களுடைய தனம், ரூபம், வீர்யம், குலம், ஸந்ததி, ஸுகம், நல்ல பாக்கியம், பூஜை இவைகளில் பொறாமையுடையவனாயிருக்கிறானோ அவனுக்கு வியாதியானது முடிவற்றது.

अकार्यकरणाद्भीतः कार्याणां च विवर्जनात्।
अकाले मन्त्रभेदाच्च येन माद्येन्न तत्पिबेत् ॥ 5-34-44 (32880)
அகாரியங்களைச் செய்வதிலும், காரியங்களை விடுவதிலும், அகாலத்தில் விபரீதமான ஆலோசனையிலும் பயந்தவன்[3] மதத்தைக் கொடுக்கிற வஸ்துவைப் பானம் செய்யக்கூடாது.

विद्यामदो धनमदस्तृतीयोऽभिजनो मदः।
मदा एतेऽवलिप्तानामेत एव सतां दमाः ॥ 5-34-45 (32881)
வித்யாமதம், தனமதம், மூன்றாவதான குலமதம் ஆகிய இந்த மதங்கள் கர்வங்கொண்டவர்களுக்கு ஏற்படுகின்றன. இவைகளே ஸத்துக்களுக்குச் (சொல்லாலும் பொருளாலும்) மதத்திற்கு எதிரிடையான தமங்களாகின்றன.

असन्तोऽभ्यर्थिताः सद्भिः क्वचित्कार्ये कदाचन।
मन्यन्ते सन्तमात्मानमसन्तमपि विश्रुतम् ॥ 5-34-46 (32882)
ஒருகால், ஒருகாரிய நிமித்தம் ஸத்துக்களால் பிரார்த்திக்கப்பட்ட அஸத்துக்கள், அஸத்தென்று பிரஸித்தமாயிருந்தும் தம்மை ஸத்தாக நினைக்கிறார்கள்.

गतिरात्मवतां सन्तः सन्त एव सतां गतिः ।
असतां च गतिः सन्तो न त्वसन्तः सतां गतिः ॥ 5-34-47 (32883)
பிராணிகளுக்கு ஸத்துக்கள் கதி; ஸத்துக்களுக்கு ஸத்துக்களே கதி. அஸத்துக்களுக்கும் ஸத்துக்களே கதி. அஸத்துக்களோ ஸத்துக்களுக்குக் கதியல்லர்.

जिता सभा वस्त्रवता मिष्टाशा गोमता जिता।
अध्वा जितो यानवता सर्वं शीलवता जितम् ॥ 5-34-48 (32884)
நல்ல வஸ்திரமுள்ளவனாலே ஸபையானது ஜயிக்கப்பட்டதாகும். கோக்களுள்ளவனால் நல்ல ஆகாரத்திலாசையானது ஜயிக்கப்பட்டதாகும். வாகனமுள்ளவனால் வழியானது ஜயிக்கப்பட்டதாகும். சீலமுடையவனால் எல்லாம் ஜயிக்கப்பட்டதாகும்.

शीलं प्रधानं पुरुषे तद्यस्येह प्रणश्यति।
न तस्य जीवितेनार्थो न धनेन न बन्धुभिः ॥ 5-34-49 (32885)
மனிதனுக்கு ஶீலம் முக்கியம். அது எவனுக்கு இகத்தில் நசித்து விடுகிறதோ அவனுக்கு உயிரினாலும் தனத்தினாலும் பந்துக்களாலும் பயனில்லை.

आढ्यानां मांसपरमं मध्यानां गोरसोत्तरम्।
तैलोत्तरं दरिद्राणां भोजनं भरतर्षभ ॥ 5-34-50 (32886)
! பரதஶ்ரேஷ்டரே! தனவான்களுக்கு மாம்ஸத்தால் சிறந்ததும், நடுவாயுள்ளவர் களுக்கு ஆவின்பால், தயிர், நெய், மோர்களால் சிறந்ததும், தரித்திரர்களுக்குத் தைலத்தால் சிறந்ததுமாயிருக்கிற அன்னமானது ஏற்படுகிறது.

संपन्नतरमेवान्नं दरिद्रा भुञ्जते सदा।
श्रुत्स्वादुतां जनयति सा चाढ्येषु सुदुर्लभा ॥ 5-34-51 (32887)
தரித்திரர்கள் எப்பொழுதும் பாகமான அன்னத்தைப் உடனே புசிக்கிறர்கள். பசியானது அவர்களுக்கு உசியை உண்டு பண்ணுகிறது. தனவான்களுக்கு அந்தப் பசி எளிதில் கிடையாது.

प्रायेण श्रीमतां लोके भोक्तुं शक्तिर्न विद्यते।
जीर्यन्त्यपि हि काष्ठानि दरिद्राणां महीपते ॥ 5-34-52 (32888)
உலகத்தில் அனேகமாகத் தனவான்களுக்குப் புஜிப்பதற்குச் சக்தியிருக்கிறதில்லை. ! அரசரே! தரித்திரர்களுக்குக் காய்ந்தகட்டைகளும் ஜரிக்கின்றனவல்லவா?

अवृत्तिर्भयमन्त्यानां मध्यानां मरणाद्भयम् ।
उत्तमानां तु मर्त्यानामवमानात्परं भयम् ॥ 5-34-53 (32889)
கீழான் மனிதர்களுக்குப் பிழைப்பில்லாமல் போவதில் பயம், நடுவானவர்களுக்கு மரணத்தில் பயம், மேலான மனிதர்களுக்கு அவமானத்தில் மிக்க பயம்.

ऐश्वर्यमदपापिष्ठा मदाः पानमदादयः ।
ऐश्वर्यमदमत्तो हि नो पतित्वाऽवबुध्यते ॥ 5-34-54 (32890)
குடிமுதலான மதங்களுக்கெல்லாம் ஐஶ்வர்யமதமானது மிகவும் பாவமாயுள்ளது. பணக்கொழுப்பால் கொழுத்தவன் விழுந்தும் (தாழ்வையடைந்தும்) அறிகிறதில்லை யல்லவா?

इन्द्रियौरिन्द्रियार्थेषु वर्तमानैरनिग्रहैः ।
तैरयं ताप्यते लोको नक्षत्राणि ग्रहैरिव ॥ 5-34-55 (32891)
விஷயங்களில் ப்ரவ்ருத்திக்கின்றவைகளும் வசப்படாதவைகளுமான இந்த்ரியங்க ளாலே இந்த உலகமானது (சூரியன் முதலான) கிரஹங்களால் நக்ஷத்ரங்கள் தாபத்தையடைவதுபோலத் தாபத்தை யடைகிறது.

यो जितः पञ्चवर्गेण सहजेनात्मकर्षिणा ।
आपदस्तस्य वर्धन्ते शुक्लपक्ष इवोडुराट् ॥ 5-34-56 (32892)
கூடப்பிறந்ததும் மனத்தை வெளியிலிழுப்பதுமான ஐம்புலங்களின் கூட்டத்தால் வசம் செய்யப்பட்டவனுக்கு வளர்பிறையில் சந்திரன் வளர்வதுபோல ஆபத்துக்கள் வளர்கின்றன.

अविजित्य य आत्मानममात्यान्विजिगीषते ।
अमित्रान्वा जितामात्यः सोऽवशः परिहीयते ॥ 5-34-57 (32893)
எவன் தன்னை வசம் செய்யாமல் மந்த்ரிகளை வசம் செய்ய விரும்புகிறானோ, மந்த்ரிகளை வசம் செய்யாமல் சத்ருக்களைத் தான் வசம் செய்ய விரும்புகிறானோ, அவன் அவசனாயிருந்து குறைவையடைகிறான்.

आत्मानमेव प्रथमं द्वेष्यरूपेण योजयेत् ।
ततोऽमात्यानमित्रांश्च न मोघं विजिगीषते ॥ 5-34-58 (32894)
முதலில் (தன்னையே) துவேஷத்துடன் (வசம்செய்ய வேண்டியவர்களுடன்) சேர்க்க வேண்டும். பிறகு, மந்த்ரிகளையும் பகைவர்களையும் சேர்க்கவேண்டும். வீணாக (இதற்கு மாறாக) வசம் செய்யவிரும்பக்கூடாது.

वश्येन्द्रियं जितामात्यं धृतदण्डं विकारिषु ।
परीक्ष्यकारिणं धीरमत्यन्तं श्रीर्निषेवते ॥ 5-34-59 (32895)
இந்த்ரியங்களை வசம் செய்தவனும், மந்த்ரிகளை வசம் செய்தவனும், சத்துருக்கள் விஷயத்தில் சிக்ஷையைச் செய்பவனும், ஆலோசித்துச் செய்பவனும், தீரனுமாயிருப்பவனைச் செல்வமானது எப்பொழுதும் அடையும்.

रथः शरीरं पुरुषस्य राजन्नात्मा नियन्तेन्द्रियाण्यस्य चाश्वाः।
तैरप्रमत्तः कुशली सदश्वैर्दान्तैः सुखं याति रथीव धीरः ॥ 5-34-60 (32896)
! அரசரே! மனிதசரீரம் ரதம், புத்தி ஸாரதி, இவனுடைய இந்த்ரியங்கள் குதிரைகள். அடங்கினவைகளான அந்த நல்ல குதிரைகளால் ஜாக்கிரதையுள்ளவனும் ஸமர்த்தனுமாக இருப்பவன் தீரனான தேராளிபோல ஸுகமாகச் செல்லுகிறான்.

एतान्यनिगृहीतानि व्यापादयितुमप्यलम्।
अविधेया इवादान्ताः सरथं सारथिं हयम् ॥ 5-34-61 (32897)
சிக்ஷிக்கப்படாதவைகளான இவைகளே, அடக்கமில்லாதவைகளும் வசமாகாதவைகளுமான குதிரைகள்போல ரதத்தோடு ஸாரதியையும் குதிரையான தன்னையும் கொல்லுவதற்குப் போதும்.

अनर्थमर्थतः पश्यन्नर्थं चैवाप्यनर्थतः।
इन्द्रियैरजितैर्बालः सुदुःखं मन्यते सुखम् ॥ 5-34-62 (32898)
அறிவில்ளாதவன் அடங்காத இந்த்ரியங்களால் அனர்த்தத்தை அர்த்தமாகவும், அர்த்தத்தை அனர்த்தமாகவும் பார்க்கிறவனாகிப் பெரிய துக்கத்தை ஸுகமாக நினைக்கிறான்.

धर्मार्थौ यः परित्यज्य स्यादिन्द्रियवशानुगः ।
श्रीप्राणधनदारेभ्यः क्षिप्रं स परिहीयते ॥ 5-34-63 (32899)
எவன் தர்மார்த்தங்களை விட்டு இந்த்ரியங்களின் வசத்தை அடைந்தவனாகிறானோ அவன் அழகு, பிராணன், தனம், தாரங்கள் இவைகளிலிருந்து சீக்கிரம் குறைவை அடைகிறான்.

अर्थानामीश्वरो यः स्यादिन्द्रियाणामनीश्वरः।
इन्द्रियाणामनैश्वर्यादैश्वार्याद्भूश्यते हि सः ॥ 5-34-64 (32900)
எவன் தனத்திற்கு அதிபதியும், இந்த்ரியங்களுக்கு அதிபதியல்லாத வனுமாவானோ அவன் இந்திரியங்களுக்கு அதிபதியல்லாமைபற்றி ஐஶ்வர்யத்திலிருந்தும் நழுவுகிறா னல்லவா?

आत्मनात्मानमन्विच्छेन्मनोबुद्धीन्द्रियैर्यतैः ।
आत्मा ह्येवात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ॥ 5-34-65 (32901)
அடங்கினவைகளன மனம், புத்தி, புலன்கள் இவைகளாலே தானாகவே தன்னைத் தேட வேண்டும். ஆத்மாவுக்கு ஆத்மாவே பந்து அல்லவா? ஆத்மாவே ஆத்மாவுக்குச் சத்துரு.

बन्धुरात्मात्मनस्तस्य येनैवात्मात्मना जितः।
स एव नियतो बन्धुः स एव नियतो रिपुः ॥ 5-34-66 (32902)
எவனால்தன்னாலேயே தன்னுடைய ஆத்மா வசம் செய்யப்பட்டதோ, அவனுடைய ஆத்மாவுக்கு ஆத்மாவே (அவனே) பந்து. அந்த ஆத்மாவே நிலையான பந்து; அந்த ஆத்மாவே நிலையான சத்ரு.

क्षुद्राक्षेणेव जालेन झपावपिहितावुरू।
कामश्च राजन्क्रोधश्च तौ प्रज्ञानं विलुम्पतः ॥ 5-34-67 (32903)
! அரசரே! பலமில்லாத கண்களுள்ள வலையினால் மூடப்பட்ட இரண்டு பெரிய மீன்கள் அந்தவலையை அறுப்பதுபோலக் காமமும் குரோதமும், சிறந்த அறிவை நாசஞ் செய்கின்றன.

समवेक्ष्येह धर्मार्थौ संभारान्योऽधिगच्छति।
स वै संभृतसंभारः सततं सुखमेधते ॥ 5-34-68 (32904)
இவ்வுலகில் எவன் தர்மார்த்தங்களை நன்றகத் தெரிந்துகொண்டு (யுத்த) ஸாதனங்களை அடைகிறானோ, பூர்ணமான ஸாதனங்களுள்ள அவன் எப்பொழுதும் ஸுகமாக விருத்தி அடைகிறான்.

यः पञ्चाभ्यन्तराञ्शत्रूनविजित्य मनोमयान्।
जिगीषति रिपूनन्यान्रिपवोऽभिभवन्ति तम् ॥ 5-34-69 (32905)
எவன் உள்ளேயிருப்பவைகளும் மனத்தின் விகாரங்களுமான ஐம்புலங்களான பகைகளை வெல்லாமல் மற்றப்பகைகளை வெல்ல விரும்புகிறானோ அவனைப் பகைவர்கள் அவமதித்து விடுகிறார்கள்.

दृश्यन्ते हि महात्मानो बध्यमानाः स्वकर्मभिः।
इन्द्रियाणामनीशत्वाद्राजानो राज्यविभ्रमैः ॥ 5-34-70 (32906)
மஹாத்மாக்களான அரசர்கள் இராஜ்யத்திலுண்டான [4]மோகங்களாலே, இந்த்ரியங்கலை வசஞ் செய்யாததால், தங்கள் காமங்களால் நிர்ப்பந்திக்கப்பட்டவர் களாகக் காணப்படுகிறார்களல்லவா?

असंत्यागात्पापकृतामपापांस्तुल्यो दण्डः स्पृशते मिश्रभावात्।
शुष्केणार्द्रं दह्यते मिश्रभावात्तस्मात्पापैः सह सन्धिं न कुर्यात् ॥ 5-34-71 (32907)
பாவம் செய்கிறவர்களை விலக்காததினால் பாபமில்லாதவர்களுக்கும் சேர்க்கையினால் ஸமமான சிக்ஷை ஏற்படுகிறது. உலர்ந்த விறகுடன் சேர்ந்த ஈரவிறகும் எரிக்கப்படுகிறது. ஆகையால் பாவிகளுடன் சேர்க்கையை அடையக்கூடாது.

निजानुत्पततः शत्रून्पश्च पञ्चप्रयोजनान्।
यो मोहान्न निगृह्णाति तमापद्ग्रसते नरम् ॥ 5-34-72 (32908)
தன்னைச் சேர்ந்தவைகளும் கிளம்பினவைகளும் ஐந்து பயனுள்ளவைகளுமான ஐந்து பகைகளைத் தன்வசம்செய்யாத மனிதனை ஆபத்தானது விழுங்குகிறது.

अनसूयार्जवं शौचं सन्तोषः प्रियवादिता।
दमः सत्यमनायासो न भवन्ति दुरात्मनाम् ॥ 5-34-73 (32909)
அஸுயையில்லாமை, நேர்மை, சுசியாயிருத்தல், மகிழ்ச்சி, இன்சொல், அடக்கம், மெய்ம்மை, சஞ்சலமில்லாமை ஆகிய இவைகள் துஷ்டமனமுள்ளவர்களுக்கு உண்டாகமாட்டா.

आत्मज्ञानमानायासस्तितिक्षा धर्मनित्यता।
वाक्चैव गुप्ता दानं च नैतान्यन्त्येषु भारत ॥ 5-34-74 (32910)
! பாரதரே! ஆத்மஜ்ஞானம், அநாயாஸம், பொறுமை, தர்மத்தை நித்தியமாகக் கொள்ளுதல், அடக்கமான வார்த்தை, அடக்கமான தானம் ஆகிய இவைகள் கீழான மனிதர்களிடம் இரா.

आक्रोशपरिवादाभ्यां विहिंसन्त्यबुधा बुधान्।
वक्ता पापमुपादत्ते क्षममाणो विमुच्यते ॥ 5-34-75 (32911)
நிந்தைகளாலும் அபவாதங்களாலும், அறியாதவர்கள் பண்டிதர்களைத் துன்பம் செய்கிறார்கள். சொன்னவன் பாவத்தைக் கிரஹிக்கிறான். பொறுக்கிறவன் விடுபடுகிறான்.

हिंसा बलमसाधूनां राज्ञां दण्डविधिर्बलम् ।
शुश्रूपा तु वलं स्त्रीणां क्षमा गुणवतां बलम् ॥ 5-34-76 (32912)
தீயவர்களுக்குப் பிறரைப்பீடித்தல் பலம், அரசர்களுக்குச் சிக்ஷைசெய்வது பலம். மாதர்களுக்கு கணவர்பணிவிடை பலம். குணசாலிகளுக்குப் பொறுமை பலம்.

वाक्संयमो हि नृपते सुदुष्करतमो मतः।
अर्थवच्च विचित्रं च न शक्यं बहु भाषितुम् ॥ 5-34-77 (32913)
! அரசரே! வாக்கை அடக்குவது செய்ய மிக அரியதாக ஒப்புக்கொள்ளப்பட்டிருக் கிறது. அர்த்தமுடையதாகவும் விசித்திரமாகவும் அதிகமாகப் பேசுவதற்கு முடியாது.

अभ्यावहति कल्याणं विविधं वाक् सुभाषिता ।
सैव दुर्भाषिता राजन्ननर्थायोपपद्यते ॥ 5-34-78 (32914)
நலமாகச் சொல்லப்பட்ட வார்த்தையானது பலவிதமான நன்மையைக் கொடுக்கிறது. ! அரசரே! அந்தச்சொல்லே கெடுதியாகச் சொல்லப்பட்டால் கெடுதியின்பொருட்டு ஏற்படுகிறது.

रोहते सायकैर्विद्धं वनं परशुना हतम्।
वाचा दुरुक्तं बीभत्सं न संरोहति वाक्क्षतम्॥ 5-34-79 (32915)
பாணங்களால் உண்டான புண்ணும், கோடாலியால் வெட்டப்பட்ட காடும், (மாறி) ஆறியும் துளிர்த்தும் விடுகின்றன. வாக்கினாலே கெடுதியாகச் சொல்லப்பட்ட நிந்தையாகிற சொற்புண்ணானது ஆறுகிறதில்லை.

कर्णिनालीकनाराचान्निर्हरन्ति शरीरतः।
वाक्छशल्यस्तु न निर्हर्तुं शक्यो हृदिशयो हि सः ॥ 5-34-80 (32916)
காதுபோன்ற பிடியுடைய காணியென்கிற பாணங்களையும் குண்டுகளையும் நாராசங்களையும் சரீரத்திலிருந்தும் பிடுங்கியெடுக்கிறார்கள். வாக்காகிற சல்லியமோ எடுக்கமுடிகிறதில்லை. அது இருதயத்தில் ஊன்றிப்போகிறதன்றோ?

वाक्सायका वदनान्निष्पतन्ति यैराहतः शोचति रात्र्यहानि।
परस्य नामर्मसु ते पतन्तितान्पण्डितो नावसृजेत्परेभ्यः ॥ 5-34-81 (32917)
எவைகளால் அடிக்கப்பட்டவன் இராப்பகல் துக்கிக்கிறானோ அந்தச் சொற்களாகிற அம்புகள் வாயிலிருந்தும் வெளியில் வருகின்றன. அவைகள் பிறனுடைய மர்மங்களைத் தவிர மற்றவிடங்களில் விழுகிறதில்லை. பண்டிதனானவன் அவைகளைப் பிறர்களின் பொருட்டு விடக்கூடாது.

यस्मै देवाः प्रयच्छन्ति पुरुषाय पराभवम्।
बुद्धिं तस्यापकर्षन्ति सोऽवाचीनानि पश्यति॥ 5-34-82 (32918)
தேவர்கள் எந்த மனிதன்பொருட்டு அவமானத்தைக் கொடுக்கிறார்களோ அவனுடைய புத்தியைக் குறைக்கின்றார்கள். அவன் கீழானகார்யங்களைப் பார்க்கிறான்.

बुद्धौ कलुषभूतायां विनाशे प्रत्युपस्थिते।
अनयो नयसङ्काशो हृदयान्नापसर्पति ॥ 5-34-83 (32919)
புத்திகலங்கி நாசம்நேரிட்ட ஸமயத்தில் அநீதியானது நீதிக்கு நிகராகி மனத்தைவிட்டு விலகுகிறதில்லை.

सेयं बुद्धिः परीता ते पुत्राणां भरतर्षभ ।
पाण्डवानां विरोधेन न चैनानवबुध्यसे ॥ 5-34-84 (32920)
! பரதஶ்ரேஷ்டரே! உம்முடைய புத்திரர்களுடைய அப்படிப்பட்ட இந்தப் புத்தியானது பாண்டவர்களிடம் விரோதத்தினால் வியாபிக்கப்பட்டிருக்கிறது. இவர்களை நீர் அறியவில்லை.

राजा लक्षणसंपन्नस्त्रैलोक्यस्यापि यो भवेत्।
शिष्यस्ते शासिता सोऽस्तु धृतराष्ट्र युधिष्ठिरः ॥ 5-34-85 (32921)
अतीव सर्वान्पुत्रांस्ते भागधेयपुरस्कृतः।
तेजसा प्रज्ञया चैव युक्तो धर्मर्थतत्त्ववित् ॥ 5-34-86 (32922)
अनुक्रोशादानृशंस्याद्योऽसौ धर्मभृतां वरः।
गौरवात्तव राजेन्द्र बहून्क्लेशांस्तितिक्षति ॥ ॥ 5-34-87
! திருதிராஷ்டிரரே! ராஜேந்திரரே! எல்லா லக்ஷணங்களும் பொருந்தினவனும், மூவுலகத்திற்கும் அரசனாகக் கூடியவனும், உம்முடைய எல்லாப் புத்திரர்களுக்கும் மேற்பட்டவனும், பாக்கியத்தால் கௌரவிக்கப்பட்டவனும், வல்லமையும் மிக்க அறிவுடையவனும், தர்மார்த்தங்களின் உண்மையை அறிந்தவனும், தர்மங்களை வஹிக்கின்றவர்களில் சிறந்தவனுமான இந்த யுதிஷ்டிரன், தயையினாலும், குரூரத்தன்மையில்லாமையினாலும், உம்மிடமிருக்கும் குருத்தன்மையினாலும், உம்மாலுண்டான பல கிலேசங்கலைப் பொறுக்கிறான். உமக்குச் சிஷ்யனான இந்த யுதிஷ்டிரன் அரசனாக இருக்கட்டும்என்று விதுரர் சொன்னார்.


[1] மாலை கட்டுகிறவன் பூந்தோட்டத்தில் புஷ்பிக்கப் புஷ்பிக்கப் பறிப்பதுபோலத் தனம் செழிக்கச் செழிக்கக் கிரஹிக்கவேண்டும். ஒரே தரமாய் உபத்ரவிக்கக் கூடாதென்பது கருத்து
[2] ஶாந்தி பர்வம்ஆபத்தர்மம் (பக்கம்-484)
[3]இவைகளில் பயப்படவேண்டும்என்றும், ‘மதிமயக்கத்தைத் தரக்கூடிய வஸ்துவைக் குடிக்கக் கூடாதுஎன்றும் பழையவுரை கூறுகின்றது.
[4] அரசாட்சியாலுண்டான மயக்கங்கள்.

No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...