Monday 19 November 2018

விதுர நீதி - அத்யாயம்-33


ஸ்ரீமஹாபாரதம் உத்யோகபர்வம்

முப்பத்துமூன்றாவது அத்யாயம்


ப்ரஜாகர உபபர்வம்


விதுர நீதி

(திருதிராஷ்டிரன் கவலையால் நித்திரையற்று இரவில் விதுரரை அழைத்துத் துரியோதனாதியர் ஸுகமாகவாழ உபாயங் கேட்டதும், விதுரர் நீதிகளைக்கூறிப் பாண்டவர்களுக்கு ராஜ்யங்கொடுப்பதே உபாயமென்றதும்)

1) [वैशम्पायन उवाच]
      द्वा:स्थं प्राह महाप्राज्ञॊ धृतराष्ट्रॊ महीपतिः ।
     विदुरं द्रष्टुमिच्छामि तमिहानय मा चिरम् ॥
பேரறிவுடையவனும் அரசனுமான திருதரஷ்டிரன் வாயிற்காப்போனை நோக்கி, “விதுரனைப் பார்க்க விரும்புகிறேன். அவனை இவ்விடம் அழைத்துவா. தாமதம் வேண்டாம்என்று சொன்னான்.

2) प्रहितॊ धृतराष्ट्रेण दूतः क्षत्तारमब्रवीत ।
   ईश्वरस्त्वां महाराजॊ महाप्राज्ञ दिदृक्षति ॥
திருதராஷ்டிரனால் அனுப்பப்பட்ட தூதன் விதுரரை நோக்கி, “பேரறிவாளரே! ஐஶ்வர்யம் பொருந்திய நமது மஹாராஜர் உம்மைப் பார்க்க விரும்புகிறார்என்று சொன்னான்.

3) एवमुक्तस्तु विदुरः प्राप्य राजनिवेशनम् ।
   अब्रवीद् धृतराष्ट्राय द्वा:स्थं मां प्रतिवेदय ॥
இவ்விதம் சொல்லியதைக் கேட்ட விதுரரோ ராஜமாளிகையை அடைந்து வாயில்காப்பவனை நோக்கி, “திருதராஷ்டிரனிடம் என் வரவைத் தெரிவிஎன்று சொன்னார்.

द्वा:स्य उवाच-
4) विदुरॊऽयम अनुप्राप्तॊ राजेन्द्र तव शासनात ।
   दरष्टुम इच्छति ते पादौ किं करॊतु परशाधि माम ॥
வாயிற்காவலனும் திருதராஷ்டிரனிடத்தில், “ ராஜஶ்ரேஷ்டரே! உம்முடைய கட்டளைப்படி, இதோ விதுரர் கூடவே வந்துவிட்டார். உம்முடைய பாதங்களைத் தரிசிக்க விரும்புகிறார். என்னசெய்யவேண்டும்? எனக்குக் கட்டளையிடும்என்று சொன்னான்.

धृतराष्ट्र उवाच-
5) परवेशय महाप्राज्ञं विदुरं दीर्घदर्शिनम ।
   अहं हि विदुरस्यास्य नाकाल्यॊ जातु दर्शने ॥
திருதராஷ்டிரன், (வாயிற்காவலனை நோக்கி) “பேரறிவாளனும், தீர்க்கமான ஆலோசனையுள்ளவனுமான விதுரனை உள்ளேவிடு; நானோ இந்தவிதுரனுக்கு ஒருபொழுதும் பார்க்கத்தகாதவனல்லேன்என்று சொன்னான்.

द्वा:स्य उवाच-
6) परविशान्तः पुरं कषत्तर महाराजस्य धीमतः ।
   न हि ते दर्शने ऽकाल्यॊ जातु राजा बरवीति माम ॥
(உடனே) காவற்காரன் விதுரனிடத்தில்! க்ஷத்தாவே! புத்திமானான மகாராஜருடைய அந்தப்புரத்தில் போம். அரசர் உமக்கு ஒருபொழுதும் காணக்கூடாதவரல்லரென்றும் என்னிடம் சொன்னார்என்று கூறினான்.

वैशम्पायन उवाच
7)    ततः परविश्य विदुरॊ धृतराष्ट्र निवेशनम |
      अब्रवीत पराञ्जलिर वाक्यं चिन्तयानं नराधिपम ||
உடனே விதுரரும் திருதராஷ்டிரனுடைய அரண்மனையில் பிரவேசித்து, கவலையுற்றிருக்கும் அரசனை நோக்கி அஞ்சலி செய்துகொண்டு, பின்வருமாறு கூறினார்.

8) विदुरॊ ऽहं महाप्राज्ञ संप्राप्तस तव शासनात |
   यदि किं चन कर्तव्यम अयम अस्मि परशाधि माम ||
! மிக்க அறிவுடையவரே! உம்முடைய கட்டளையினால், நான் விதுரன் இதோ வந்திருக்கிறேன். ஏதாவது செய்யவேண்டுவது இருக்குமானால் என்னைக் கட்டளையிடும்என்று சொன்னார்.

धृतराष्ट्र उवाच-
9) संजयॊ विदुर पराप्तॊ गर्हयित्वा च मां गतः |
   अजातशत्रॊः शवॊ वाक्यं सभामध्ये स वक्ष्यति ||
        திருதராஷ்டிரன், ‘! விதுரா! ஸஞ்சயன் வந்துவிட்டான். என்னைத் தூஷித்துவிட்டும் போய்விட்டான். அவன் யுதிஷ்டிரனுடைய வார்த்தையை நாளை ஸபையின் நடுவில் சொல்லுவான்.

10) तस्याद्य कुरुवीरस्य न विज्ञातं वचॊ मया |
     तन मे दहति गात्राणि तद अकार्षीत परजागरम ||
கௌரவர்களில் சிறந்தவனான அந்த யுதிஷ்டிரன் சொன்ன வார்த்தையானது இப்பொழுது எனக்குத் தெரியவில்லை. அது என் அங்கங்களை எரிக்கின்றது. அது மிகவும் [1]ஜாகரத்தைச் செய்துவிட்டது.

11) जाग्रतॊ दह्यमानस्य शरेयॊ यद इह पश्यसि |
    तद बरूहि तवं हि नस तात धर्मार्थकुशलॊ हय असि ||
அப்பா! ஜாகரனத்தோடு கூடினவனும் எரிக்கப்படுகிறவனுமான எனக்கு எதை நன்மையென்று ஆலோசிக்கிறாயோ அதை நீ சொல்லு. நீ நம்முடைய தர்மார்த்தங்களில் ஸமர்த்தனல்லனோ?

12) यतः पराप्तः संजयः पाण्डवेभ्यॊ; न मे यथावन मनसः परशान्तिः |
    सवेन्द्रियाण्य अप्रकृतिं गतानि; किं वक्ष्यतीत्य एव हि मे ऽदय चिन्ता ||
எப்பொழுது ஸஞ்சயன் பாண்டவர்களிடமிருந்து வந்தானோ அதுமுதலாக என் மனத்திற்கு வழக்கம்போலச் சாந்தியானது இல்லை. எல்லா இந்திரியங்களும் ஸ்வபாவம் மாறிவிட்டன. என்ன சொல்லப்போகிறானோவென்று இப்பொழுதே எனக்குப் பெரிய கவலை உண்டாகிவிட்டது.
13) तन्ते ब्रहि विदुर त्वं यतावन्मनीषितं सर्वमजातशत्रो: |
    यथा नस्तात हितं भवेच्व प्रजाश्च सर्वा: सुखिता भवेयु: ||
ஆகையால், ! விதுர! நீ அஜாதசத்துருவினுடைய எல்லா அபிப்பிராயத்தையும் உண்மையாகச் சொல்லு. அப்பா! எவ்விதம் எனக்கு நன்மை உண்டாகுமோ, எல்லாப் பிரஜைகளும் ஸுகத்தை அடையுமோ அவ்விதத்தையும் சொல்லுஎன்று சொன்னான்.

विदुर उवाच
14) अभियुक्तं बलवता दुर्बलं हीनसाधनम |
    हृतस्वं कामिनं चॊरम आविशन्ति परजागराः ||
        விதுரர், ‘! அரசரே! வலிமையில்லாதவனும் யுத்தஸாதனங்கள் குறைந்தவனுமாயிருக்கையில் வலிய பகைவனால் எதிர்க்கப்பட்டவனையும், பொருளைப் பறிகொடுத்தவனையும், காமியையும், திருடனையும் ஜாகரணமானது வந்தடைகிறது.

15) कच्चिदेतैर्महादॊषैर्न सपृष्टॊऽसि नराधिप |
    कच्चिच्च परवित्तेषु गृध्यन विपरितप्यसे ||
இந்தப் பெரிய தோஷங்களாலே நீர் பரிசிக்கப்படாமலிருக்கிறீரா? பிறருடைய தனங்களில் ஆசைகொண்டு பரிதாபத்தை அடையாமலிருக்கிறீரா?’ என்று கேட்டார்.

धृतराष्ट्र उवाच-
16) क्ष्रोतुमिच्छामि ते धर्म्यं परं नैःश्रेयसं वचः |
    अस्मिन राजर्षिवंशे हि तवमेकः प्राज्ञसम्मतः ||
திருதராஷ்டிரன், ‘தர்மத்திலிருந்து விலகாததும் சிறந்ததும் க்ஷேமத்தைச் செய்கிறதுமான உன்னுடைய வார்த்தையைக் கேட்க விரும்புகிறேன். இந்த ராஜரிஷி வம்சத்தில் நீ ஒருவனே விவேகிகளுக்கு ஸம்மதனானவனல்லனோஎன்று சொன்னான்.

विदुर उवाच
17) राजा लक्षणसम्पन्नस्त्रैलोवयस्याधिपो भवेत्‍ |
    प्रेष्यस्ते प्रेषितश्चैव धृतराष्ट्र युधिष्टिर: ||
18)     विपरीततरश्च त्वं भागधेये न सम्मत: |
          अर्चिषां प्रक्षयाच्चैव धर्मात्मा धर्मकोविद: ||
விதுரர், ‘! திருதராஷ்டிரரே! ஜனங்களை ரஞ்சிப்பிக்கிறவனும் ராஜலக்ஷணங்கள் பொருந்தியவனுமான யுதிஷ்டிரன் மூன்று உலகத்திற்கும் அதிபதியாவான். உமக்கு [2]ஏவலாளியாயிருக்கிற அவன் (வனத்திற்கு) அனுப்பவேபட்டான். மிக்கவிபரீதரும் பார்க்கும்தன்மை இல்லாதவருமான நீர் ராஜ்யபாகத்தை அடையும் விஷயத்தில் ஒப்புக்கொள்ளப்படவில்லை.

19)    आनृशंस्यादनुक्रोशाद्धर्मात्सत्यात्पराक्रमात्‍ |
          गुरुत्वात्त्वयि सम्प्रेश्य बसून्क्लेशांस्तितिक्षते ||
தர்மசித்தமுடையவனும், தர்மத்தை அறிந்தவனுமான யுதிஷ்டிரன், குரூரத்தன்மையில்லாததினாலும் தயாளுவானதாலும் தர்மத்தாலும் ஸத்தியத்தாலும் பராக்கிரமத்தாலும் உம்மிடம் குருவென்னும் எண்ணத்தினாலும் நன்றாக ஆலோசித்துப் பலகிலேசங்களைப் பொறுக்கிறான்.

20)    दुर्योधने सौबले च कर्णे दुश्शासने तथा |
          एतेष्वैश्वर्यमाधाय कथं त्वं भूतिमिच्छसि ||
துரியோதனன், சகுனி, கர்ணன், துச்சாஸனன் ஆகிய இவர்களிடம் ராஜாதிகாரத்தை வைத்துவிட்டு நீர் எப்படி ஸம்பத்தை விரும்புகிறீர்?

21)     आत्मञानं समारम्भस्तितिक्षा धर्मनित्यता |
          यमर्यान्नापकर्षन्ति स वै पण्दित उच्यते ||
ஆத்மஜ்ஞானம், சரியானமுயற்சி, பொறுமை, தர்மத்தையே நித்தியமாயுடையவனாயிருத்தல் இவைகள் எவனைப் புருஷார்த்தத்தி லிருந்தும் நழுவச் செய்யவில்லையோ அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

22)     एकस्माद्वृक्षाध्यज्ञपात्राणि राजन्स्त्रुक्च द्रौणी पेठनीपीडने च ।
          एतस्माद्राजन्ब्रुवतो मे निबोध एकस्माद्वै जायतेऽसच्च सच्च ॥
! அரசரே! ஒரே மரத்திலிருந்து ஸருக்கு, த்ரோணீ, பேடநீ, பீடணமென்கிற யாகபாத்திரங்கள் உண்டாகின்றன. மன்னரே! நான் சொல்லுகிற இந்தவார்த்தையினாலே தெரிந்து கொள்ளும். ஒரே வஸ்துவிலிருந்தும் நல்லதும் கெட்டதும் உண்டாகின்றன.

23) निषेवते परशस्तानि निन्दितानि न सेवते |
    अनास्तिकः शरद्दधान एतत पण्डित लक्षणम ||
பண்டிதன் ஶ்லாக்கியமான காரியங்களைச் செய்வான்; நிந்திக்கப்பட்டவைகளைச் செய்யமாட்டான், நாஸ்திகத்தன்மையில்லாதவனும் ஶ்ரத்தையுள்ளவனுமாயிருப்பான். இது பண்டிதனுடைய லக்ஷணம்.

24)    करॊधॊ हर्षश्च दर्पश्च ह्री स्तंभो मान्यमानिता ।
          यमर्थान्नापकर्षन्ति स वै पण्डित उच्यते ॥
கோபம், ஸந்தோஷம், மதம், லஜ்ஜை, வனக்கமில்லாமை, நான் பூஜ்யனென்கிற எண்ணம் இவைகள் எவனைப் புருஷார்த்தத்திலிருந்து நழுவச் செய்யவில்லையோ அவன் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

25)    यस्य कृत्यं न जानन्ति मन्त्रं वा मन्त्रिते परे ।
          कृतमेवास्य जानन्ति स वै पण्डित उच्यते ॥
எவனுடைய காரியத்தையோ, ரஹஸ்யமாகச் செய்யப்பட்ட ஆலோசனையையோ, பிறர் அறியாமல் அவன் செய்த பிறகே அறிகிறார்களோ அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

26)       यस्य कृत्यं न विघ्नन्ति शीतमुष्णं भयं रतिः ।
समृद्धिरसमृद्धिर्वा स वै पण्डित उच्यते ॥
எவனுடைய காரியத்தைக் குளிரோ, வெப்பமோ, அச்சமோ, விளையாட்டோ, செல்வமோ, வறுமையோ தடைப்படுத்தவில்லையோ அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

27)    यस्य संसारिणी प्रज्ञा धर्मार्थावनुवर्तते ।
          कामादर्थं वृणीते यः स वै पण्डित उच्यते ॥
பரவுகிறதான எவனுடைய பிரஜ்ஞையானது தர்மார்த்தங்களை அநுஸரித்திருக்கிறதோ, எவன் இம்மை, மறுமைகளின் நிமித்தம் பொருலைத் தேடுகிறானோ, அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

28)       यथाशक्ति चिकीर्षन्ति यथाशक्ति च कुर्वते ।
न किञ्चिदवमन्यन्ते नरा: पण्डितबुध्दय:
தேர்ந்த அறிவுள்ள மனிதர்கள் சக்திக்குத்தக்கபடி செய்யவும் செய்கிறார்கள், ஒன்றையும் (அவமதிப்பதில்லை).

29)    क्षिप्रं विजानाति चिरं शृणॊति; विज्ञाय चार्थं भजते न कामात ।
नासंपृष्टॊ वयपयुङ्क्ते परार्थे; तत प्रज्ञानं प्रथमं पण्डितस्य ॥
பண்டிதன் சீக்கிரம் அறிகிறான்; வெகுகாலம் கேட்கிறான்; விஷயத்தைத் தெரிந்துகொண்டு அடைகிறான், ஆசையால் அடைகிறதில்லை. பிறனுடைய விஷயத்தில் கேட்கப்படாமல் சொல்லுகிறதில்லை. அது பண்டிதனுடைய முதன்மையான லக்ஷணம்.

30)    नाप्राप्यमभिवाञ्छन्ति नष्टं नेच्छन्ति शॊचितुम ।
          आपत्सु च न मुह्यन्ति नराः पण्डितबुद्धयः ॥
தேர்ந்த அறிவுள்ள மனிதர்கள் அடையமுடியாததை விரும்புகிறதில்லை. கெட்டுப்போனதை நினைத்துத் துக்கப்படுவதில்லை. ஆபத்துக்காலங்களிலும் மயங்குகிறதில்லை.

31)    निश्चित्य यः प्रक्रमते नान्तर्वसति कर्मणः ।
          अवन्ध्यकालॊ वश्यात्मा स वै पण्डित उच्यते ॥
எவன் உறுதிசெய்துகொண்டு ஆரம்பித்துக் காரியத்தின் மத்தியில் விட்டுவிடுகிறதில்லையோ, காலத்தை வீணாகப் போக்காதவனும் மனத்தை வசப்படுத்தியவனுமான அவனே பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

32)    आर्यकर्मणि राज्यन्ते भूतिकर्माणि कुर्वते ।
          हितं च नाभ्यसूयन्ति पण्डिता भरतर्षभ ॥
! பரதஶ்ரேஷ்டரே! பண்டிதர்கள் சிறந்தகாரியத்தில் விருப்பங் கொள்ளுகிறார்கள், ஸம்பத்திற்குரிய கர்மங்களைச் செய்கிறார்கள்; நன்மையான காரியத்தில் வெறுப்பு அடைகிறதில்லை.

33)    न हृष्यत्यात्मसंमाने नावमानेन तप्यते ।
गाङ्गॊह्रद इवाक्षॊभ्यॊ यस्य पण्डित उच्यते ॥
எவன் தன்னைக் கௌரவித்தபொழுது ஸந்தோஷிக்கவில்லையோ, அவமானத்தால் தாபத்தை அடைகிறதுமில்லையோ கங்கையின் மடுவைப்போலக் கலக்க முடியாதவனாயிருக் கிறானோ, அவன் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

34)    तत्त्वज्ञः सर्वभूतानां यॊगज्ञः सर्वकर्मणाम्
          उपायज्ञॊ मनुष्याणां नरः पण्डित उच्यते ॥
எல்லாப் பிராணிகளுடைய தன்மையையும் அறிந்தவனும், எல்லாக் கர்மங்களுடைய முறையையும் அறிந்தவனும் உபாயத்தை அறிந்தவனுமான மனிதன், மனிதர்களுள் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

36)    प्रवृत्तवाक् चित्रकथ ऊहवान् परतिभानवान ।
आशु गरन्थस्य वक्ता यस्य पण्डित उच्यते ॥
தடையில்லாத வாக்குடையவனும், விசித்திரமாகப் பேசுகிறவனும், ஊஹமுடையவனும், காலோசிதமாகத் தோன்றும் புத்தியையுடையவனும், சீக்கிரமாகக் கிரந்தத்தைச் சொல்லுகிறவனுமாயிருப்பவன் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

37)    श्रुतं प्रज्ञानुगं यस्य परज्ञा चैव श्रुतानुगा ।
असंभिन्नार्यमर्यादः पण्डिताख्यां लभेत सः ॥
எவனுடைய சாஸ்த்ராப்பியாஸமானது தன்னுடைய கொள்கையை ஒத்திருக்கிறதோ, கொள்கையும் சாஸ்த்ராப்பியாஸத்தை ஒத்தேயிருக்கிறாதோ, எவன் ஆர்யர்களுடைய முறையை மீறாமலிருக்கிறானோ, அவன் பண்டிதனென்கிற பெயரை அடைகிறான்.

38)    अर्थ महान्तमासाद्य विध्यामैश्वर्यमेव च ।
विचरत्यसमुन्नध्दो यस्य पण्दित उच्यते ॥
எவன் அதிகமான தனத்தையும், கல்வியையும், அதிகாரத்தையும் அடைந்தும், கர்வமில்லாதவனாக ஸஞ்சரிக்கிறானோ அவன் பண்டிதனாகச் சொல்லப்படுகிறான்.

38)    अश्रुतश्च समुन्नद्धॊ दरिद्रश च महामनाः ।
अर्थांश्चाकर्मणा प्रेप्सुर्मूढ इत्युच्यते बुधैः ॥
சாஸ்த்ரத்தை அப்யஸியாதவனாயிருந்தும் கர்வங்கொண்டவனும், தரித்திரனாயிருந்தும் ஔதார்யமுடையவனும், இழிவான கார்யத்தினால் செல்வத்தை அடைய விரும்புகிறவனுமானவன் பண்டிதர்களாலே மூடனாகச் சொல்லப்படுகின்றனன். 

39)    स्वमर्थं यः परित्यज्य परार्थमनुतिष्ठति ।
मिथ्याचरति मित्रार्थे यश च मूढः स उच्यते ॥
எவன் தன்னுடைய கார்யத்தை விட்டுவிட்டுப் பிறனுடைய காரியத்தைச் செய்கிறானோ, மித்திரன் விஷயத்தில் கபடமாக நடக்கிறானோ அவன் மூடனாகச் சொல்லப்படுகிறான்.

40)    अकामां कामयति यः कामयानां परित्यजेत्
बलवन्तं च यॊ द्वेष्टि तमाहुर्मूढचेतसम ॥
எவன் தன்னிடம் விருப்பமில்லாதவர்களை விரும்புகிறானோ, (தன்னை) விரும்புகிறவர்களை விட்டுவிடுகிறானோ, வலியவனைப் பகைத்துக்கொள்ளுகிறானோ அவனை மூடபுத்தியுடை யவனாகச் சொல்லுகிறார்கள்.

41)    अमित्रं कुरुते मित्रं मित्रं दवेष्टि हिनस्ति च ।
कर्म चारभते दुष्टं तमाहुर्मूढचेतसम्
எவன் பகைவனை மித்திரனாகச் செய்கிறானோ, நண்பனைப் பகைத்து அவனுக்குத் துன்பமும் செய்கிறானோ, தீயசெயலையும் செய்யத்தொடங்குகின்றானோ அவனை மூட புத்தியுடையவனாகச் சொல்லுகிறார்கள்.

42)    संसारयति कृत्यानि सर्वत्र विचिकित्सते ।
चिरं करॊति क्षिप्रार्थे स मूढॊ भरतर्षभ ॥
! பரதஶ்ரேஷ்டரே! எவன் காரியங்களைப் பெருகச் செய்கிறானோ, எல்லாக் காரியத்திலும் ஸந்தேஹிக்கிறானோ, சீக்கிரம் செய்யவேண்டிய காரியத்தில் தாமதத்தைச் செய்கிறானோ அவன் மூடன்.

43)    श्राध्दं पितृभ्यो न ददाति दैवतानि नार्चिति ।
          सुहृन्मित्रं न लभते तमाहुर्मूदचेतसम्
எவன் பித்ருக்களுக்கு ஶ்ரார்த்தத்தைச் செய்கிறதில்லையோ, தேவதைகளைப் பூஜிக்கிறதில்லையோ, நல்லமனமுடைய மித்திரனை அடைகிறதில்லையோ, அவனை மூடபுத்தியுள்ளவனாகச் சொல்லுகிறார்கள்.

44)    अनाहूतः परविशति अपृष्टॊ बहु भाषते ।
अविश्वस्ते विश्वसिति मूढचेता नराधमः ॥
மூடபுத்தியுடைய கெட்டமனிதன் அழைக்கப்படாமல் பிரவேசிக்கிறான்; கேட்கப்படாமலே, அதிகமாகச் சொல்லுகிறான், (தன்னிடம்) நம்பிக்கையில்லா தவனிடம் நம்பிக்கை வைக்கிறான்.

45)    परं क्षिपति दॊषेण वर्तमानः स्ववयं तथा ।
यश्च क्रुध्दयत्यनिशान: स च मूढतमॊ नरः ॥
எந்த மனிதன் தான் அவ்விதமிருந்துகொண்டு பிறனைத் தோஷத்தினால் நிந்திக்கிறானோ, சக்தியில்லாதவனாயிருந்து கொண்டு கோபிக்கிறானோ அவன் மிகவும்மூடன்.
46)    आत्मनॊ बलमज्ञाय धर्मार्थपरिवर्जितम ।
अलभ्यमिच्छन्नैष्कर्म्यान मूढबुद्धिरिहॊच्यते ॥
தன் பலத்தை யறியாமல், தர்மார்த்தங்களில்லாததும் அடையமுடியாததுமான விஷயத்தை முயற்சியில்லாமலே விரும்புகிறவன் இவ்வுலகில் மூடபுத்தியுடையவ னாகச் சொல்லப்படுகிறான்.

47)    अशिष्यं शास्ति यॊ राजन्यश्च शिष्यम् न शास्ति च ।
          कदर्यं भजते यश्च तमाहुर्मूढचेतसम्
! அரசரே! எவன் உபதேசிக்கக்கூடாதவனுக்கு உபதேசிக்கிறானோ, உபதேசிக்க வேண்டியவனுக்கு உபதேசிக்கவில்லையோ, லோபியை உபாஸிக்கிறானோ, அவனை மூடபுத்தியுடையவனாகச் சொல்லுகிறார்கள்.

48)    एकस्सम्पन्नमश्नाति वस्ते वासश्च शॊभनम्
यॊऽसंविभज्य भृत्येभ्यः कॊ नृशंसतरस्ततः ॥
அடுத்தவர்களுக்குப் பங்கிட்டுக்கொடாமல் எவன் சிறந்த உணவுப்பொருளை ஒருவனாகப் புஜிக்கிறானோ, சிறந்த வஸ்திரத்தையும் ஒருவனாகவே உடுக்கிறானோ அவனைக் காட்டிலும் மிகவும் கொடியவன் எவன் இருக்கிறான்?

49)    एकः पापानि कुरुते फलं भुङ्क्ते महाजनः ।
          भॊक्तारॊ विप्रमुच्यन्ते कर्ता दॊषेण लिप्यते ॥
[3]ஒருவன் பாவங்களைச் செய்கிறான்; ஜனங்களுடைய ஸமூஹமானது பயனை அநுபவிக்கிறது. பயனை அனுபவிக்கிறவர்கள் விடுபடுகிறார்கள். செய்தவன் தோஷத்தால் பற்றப்படுகிறான்.

50)    एकं हन्यान्न वा हन्यादिषुर्मुक्तॊ धनुष्मता ।
          बुद्धिर्बुद्धिमतॊत्सृष्टा हन्याद्राष्ट्रं सराजकम्
வில்லாளியால் விடப்பட்ட பாணமானது ஒருவனைக் கொல்லும்; அல்லது, கொல்லாமலுமிருக்கும். புத்திமானாலே பிரயோகிக்கப்பட்ட புத்தியானது அரசனோடு ராஜ்யத்தையும் அழிக்கும்.

51)    एकया द्वे विनिश्चित्य त्रिंश्चतुर्भिर्वशे कुरु ।
          पञ्च जित्वा विदित्वा षट सप्त हित्वा सुखी भव ॥
ஒரு புத்தியினாலே காரியாகாரியங்களிரண்டையும் நிச்சயித்து (சத்துரு மித்திரன் உதாஸீனன்) மூன்று பேர்களையும் (ஸாம தான பேத தண்டங்களாகிய) நான்குகளாலும் வசம் பண்ணக்கடவீர். (இந்த்ரியங்கள்) ஐந்தையும் ஜயித்து, (ஸந்தி, விக்கிரகம், யாநம், ஆஸநம், த்வைதம், ஆஶ்ரயம் என்ற) ஆறினையும் அறிந்து (ஸ்த்ரீ, சூதாட்டம், வேட்டை, மதுபானம், கடுஞ்சொல், கடுந்தண்டனை, தனத்தை வீணாக்குதல் இவ்) ஏழையும் தள்ளி ஸுகத்தை அடைவீராக.

52)    एकं विषरसॊ हन्ति शस्त्रेणैकश्च वध्यते ।
सराष्ट्रं सप्रजं हन्ति राजानं मन्त्रविप्लवः ॥
விஷத்தின் ரஸமானது ஒருவனைக் கொல்லுகிறது. ஆயுதத்தால் ஒருவன் கொல்லப்படுகிறான். தவறான ஆலோசனையானது ராஜ்யத்தோடும் பிரஜைகளோடும் அரசனைக் கொல்லும்.

53)    एकः सवादु न भुञ्जीत एकश्चार्थान्न चिन्तयेत्
एकॊ न गच्छेदध्वानं नैकः सुप्तेषु जागृयात्
ருசியான பதார்த்தத்தை ஒருவனாகப் புஜிக்கக்கூடாது. ஒருவனாக விஷயங்களை ஆலோசிக்கக் கூடாது. ஒருவனாக வழி போகக் கூடாது. தூங்குகிறவர்களின் நடுவே ஒருவனாக விழித்திருக்கக்கூடாது.

54)    एकमेवाद्वितीयं तध्यद्राजन्नावबुध्यसे ।
सत्यं स्वर्गस्य सॊपानं पारावारस्य नौर इव ॥
! அந்த எந்த ஒன்றை நீர் அறியவில்லையோ அது இரண்டற்று ஒன்றாக இருக்கிறது. அந்த ஸத்தியமானது, ஸமுத்திரத்திற்கு ஓடம்போல, ஸ்வர்க்கத்திற்குப் படியாயிருக்கிறது.

55)    एकः क्षमावतां दॊषॊ दवितीयॊ नॊपपध्यते ।
यदेनं क्षमया युक्तमशक्तं मन्यते जनः ॥
பொறுமையுள்ளவர்களுக்குப் பொறுமையுள்ளவனான இவனை ஜனங்கள் ஶக்தியில்லாதவனாக நினைக்கிறார்களென்கிற ஒன்றே தோஷம். இரண்டாவது தோஷம் அடையப்படுகிறதில்லை.

56)    सोऽस्य दोषो न मन्तव्य: क्षमा हि परमं बलम्
          क्षमा गुणो ह्यशक्तानां शक्तानां भूषणं तथा ॥
அவனுக்கு அது தோஷமாகக் கருதத்தக்கதன்று. பொறுமையானது பெரிய பலமன்றோ?
ஶக்தியில்லாதவர்களுக்குப் பொறுமையானது குணமாகிறது. ஶக்தியுள்ளவர்களுக்கும் பொறுமை அலங்காரம்.

57)    क्षमा वशीकृतिर्लोके क्षमया किं न साध्यते ।
          शान्तिखड्गः करे यस्य किं करिष्यति दुर्जन:  
உலகத்தில் பொறுமையானது வசப்படுத்துவதாகும். பொறுமையால் எதுதான் ஸாதிக்கப்படுகிறதில்லை? எவனுடைய கையில் ஶாந்தியாகிற கத்தியிருக்கிறதோ அவனைத் துர்ஜனன் என்ன செய்வான்? 

58)    अतृणे पतितो वह्निः स्वयमेवोपशाम्यति ।
          अक्षमावान्परं दोषैरात्मानं चैव योजयेत्
கூளமில்லாத இடத்தில் விழுந்த தீயானது தானே அவிகிறது. பொறுமையில்லாதவன் தன்னையுமே மிக்க தோஷங்களோடு சேர்ப்பிப்பான்.

59)    एकॊ धर्मः परं श्रेयः क्षमैका शान्तिरुत्तमा ।
विध्यैका परमा तृप्तिरहिंसैका सुखावहा ॥

தர்மம் ஒன்றே சிறந்ததான நன்மை. பொறுமை ஒன்றே உத்தமமான ஶாந்தி. வித்தை ஒன்றே மேலான த்ருப்தி. அஹிம்ஸை ஒன்றே ஸுகத்தைக் கொடுக்கிறது.

60)    दवाविमौ ग्रसते भूमिस्सर्पॊ बिलशयानिव ।
          राजानं चाविरॊद्धारं ब्राह्मणं चाप्रवासिनम ॥
(சத்துருக்களிடம்) விரோதத்தைச் செலுத்தாத அரசன், தீர்த்தயாத்திரைக்குப் போகாத பிராமணன் இவ்விருவர்களையும், ஸர்ப்பமானது எலிகளைத் தின்பதுபோல, பூமியானது தின்றுவிடுகிறது.

61)    द्वे कर्मणी नरः कुर्वन्नस्मिन् लॊके विरॊचते ।
अब्रुवन् परुषं किज्चिदसतॊ नार्चयंस्तथा ॥
கடுமையாக ஒருவார்த்தையும் சொல்லாமலிருப்பதும், அஸத்துக்களைப் பூஜியாம லிருப்பதுமாகிய இவ்விரண்டு காரியங்களையும் செய்கிற மனிதன் இவ்வுலகத்தில் விளக்கமடைகிறான்.

62)    द्वाविमौ पुरुषव्याघ्र परप्रत्ययकारिणौ ।
स्त्रिय: कामितकामिन्यॊ मूर्खा: पूजितपूजकः ॥
! ஆண்மையிற் சிறந்தவரே! இச்சிக்கப்பட்டவைகளையே இச்சிக்கின்ற ஸ்த்ரீகளும், பூஜிக்கப்பட்டவர்களையே பூஜிக்கின்ற மூடர்களுமாகிய இவ்விருவரும் பிறரிடம் நம்பிக்கையை வைக்கின்றவர்கள்.

63)    द्वाविमौ कण्टकौ तीक्ष्णौ शरीरपरिशॊषणौ ।
यश्चाधनः कामयते यश्च कुप्यत्यनीश्वरः ॥
தனமில்லாதவனுடைய விருப்பமும், ஶக்தியில்லாதவனுடைய கோபமும், கூர்மையானவைகளும், ஶரீரத்தை யுலரச் செய்கின்றவைகலூமான முள்ளுகள்.

64)    द्वावेव न विराजेते विपरीतेन कर्मणा ।
          गृहस्थश्च निरारम्भ: कार्यवांश्चैव भिक्षुक:
முயற்சியில்லாத கிருஹஸ்தனும், காரியங்களோடு கூடிய ஸந்யாஸியுமாகிய இருவர்களுமே மாறுபட்ட செய்கைகளாலே விளக்கமடைகிறதில்லை.

65)    द्वाविमौ पुरुषौ राजन् स्वर्गस्योपरि तिष्ठतः ।
प्रभुश्च क्षमया युक्तॊ दरिद्रश्च प्रदानवान्
! அரசரே! ஶக்தியுள்ளவனாயிருந்தும் பொறுமையுடன் கூடினவனும், தரித்திரனா யிருந்தும் தானம் செய்கிறவனும் ஆகிய இவ்விரண்டு மனிதர்களும் ஸ்வர்க்கத்தின் மேலே யிருக்கிறார்கள்.

66)    न्यायागतस्य द्रव्यस्य बोद्धव्यौ द्वावतिक्रमौ ।
          अपात्रे प्रतिपत्तिश्च पात्रे चाप्रतिपादनम्
நியாயமாக வந்த பொருளுக்கு அபாத்திரத்தில் கொடையும், ஸத்பாத்திரத்தில் கொடாமையுமாகிய இரண்டும் தவறுதல்களாக அறியத்தக்கவைகள்.

67)    द्वावभ्यसि निवेष्टव्यौ गले बध्वा दृढां शिलाम् ।
धनवन्तमदातारं दरिद्रं चातपस्विनम् ॥
தானம் செய்யாத தனவானும், தவம் செய்யாத தரித்திரனுமாகிய இருவரையும் கழுத்தில் பாரமான கல்லைக் கட்டி ஜலத்தில் ஆழ்த்தவேண்டும்.

68)    द्वाविमौ पुरुषव्याघ्र सूर्यमण्डलभेदिनौ।
परिव्राड्योगयुक्तश्च रणे चाभिमुखो हतः ॥
! புருஷஶ்ரேஷ்டரே! யோகத்துடன்கூடின யதியும், போரில் எதிர்முகனாக நின்று கொல்லப்பட்டவனுமாகிய இவ்விருவர்களும் (ஸ்வர்க்கத்திற்கு வழியான) ஸூர்யமண்டலத்தைப் பிளக்கின்றார்கள்.

69)    त्रयो न्याया मनुष्याणां श्रूयन्ते भरतर्षभ ।
कनीयान्मध्यमः श्रेष्ठ इति वेदविदो विदुः ॥ 5-33-69 (32774)
! பரதஶ்ரேஷ்டரே! மனிதர்களுக்கு [4]உத்தமம், மத்திமம், அதமமென்று மூன்று நியாயங்கள் கேட்கப்படுகின்றன. இவ்விதம் வேதவித்துக்கள் அறிகின்றார்கள்.

70)    त्रिविधाः पुरुषा राजन्नुत्तमाधममध्यमाः ।
नियोजयेद्यथावत्तांस्त्रिविधेष्वेव कर्मसु ॥ 5-33-70 (32775)
! அரசரே! மனிதர்கள் உத்தமர், மத்தியமர், அதமரென மூன்று வகையினராவர். அவர்களை முறைப்படி மூன்றுவிதமான கர்மங்களிலேயே சேர்ப்பிக்கவேண்டும்.

71)    त्रय एवाधना राजन्भार्या दासस्तथा सुतः।
यत्ते समधिगच्छन्ति यस्यैते तस्य तद्धनम् ॥
! அரசரே! மனைவி, வேலைக்காரன், மகன் ஆகிய மூவருமே (தமக்கெனத்) தனமில்ளாதவர்கள். அவர்கள் அடையும் பொருள் அவர்கள் யாரைச்சார்ந்தவரோ அவருடையதே.

72)    हरणं च परस्वानां परदाराभिमर्शनम् ।
सुहृदश्च परित्यागस्त्रयो दोषाः क्षयावहाः ॥ 5-33-72 (32777)
பிறர்பொருளை அபஹரிப்பதும், பரதாரங்களைச் சேருவதும், அன்புள்ளவனைத் தள்ளுவதுமாக்ய மூன்று தோஷங்களும் நாசத்தைச் செய்யும்.

73)    त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।
कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्रयं त्यजेत् ॥ 5-33-73 (32778)
காமம், க்ரோதம், லோபம் என்னுமிவை நரகத்தின் மூன்றுவித வாயில்கள்; ஆத்மநாசத்திற்குக் காரணமானவை. ஆகையால், இவை மூன்றையும் தள்ளவேண்டும்.

वरप्रदानं राज्यं च पुत्रजन्म च भारत।
शत्रोश्च मोक्षणं कृच्छ्रात्रीणि चैकं च तत्समम् ॥ 5-33-74 (32779)
! பாரதரே! வரம்பெறுதல்[5], அரசனாதல், புத்திரனுண்டாதல், ஶ்ரமப்பட்டுச் சத்துருவிடமிருந்து[6] விடுபடுதல் (இந்த நான்கும்) ஸமமாயுள்ளவை.

भक्तं च भजमानं च तवास्मीति च वादिनम् ।
त्रीनेताञ्छरणं प्राप्तान्विषमेऽपि कन सन्त्यजेत् ॥ 5-33-75 (32780)
அடுத்தவன், அடுக்கிறவன், உம்மைச் சேர்ந்தவனாகிறேனென்று சொல்லுகிறவனாகிய சரணமடைந்த இம்மூவரையும் (தனக்குச்) சங்கடம் நீரிட்ட காலத்திலும் கைவிடக்கூடாது.

चत्वारि राज्ञा तु महाबलेन
वर्ज्यान्याहुः पण्डितस्तानि विद्यात्।
மிக்கபலசாலியான அரசனாலே நான்கு காரியங்கள் தள்ளத்தக்கவைகளென்று சொல்லுகிறார்கள். பண்டிதனானவன் அவைகளைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

अल्पप्रज्ञैः सह मन्त्रं न कुर्या-
न्न दीर्घसूत्रैरलसैश्चारणैश्च ॥ 5-33-76 (32781)
புல்லறிவினரோடும், விரைந்து செய்யவேண்டிய காரியத்தில் தாமதமான முயற்சியுள்ளவர்களோடும், சோம்பேறிகளோடும், [7]சாரணர்களோடும் ஆலோசனை செய்யக்கூடாது.

चतवारि ते तात गृहे वसन्तु श्रियाऽभिजुष्टस्य गृहस्थधर्मे।
वृद्धो ज्ञातिरवसन्नः कुलीनः सखा दरिद्रो भगिनी चानपत्या ॥ 5-33-77 (32782)
ஐயா! கிருஹஸ்த தர்மத்திலிருந்துகொண்டு செல்வத்துடன் கூடினவராயிருக்கிற உம்முடைய க்ருஹத்தில் [8]வயது முதிர்ந்த ஞாதியும், செல்வந்தளர்ந்துபோன குலீனனும், ஏழையான நண்பனும், புத்திரனில்லாத ஸஹோதரியும் ஆகிய நான்கு பேர்களும் வஸிக்கவேண்டும்.

चत्वार्याह महाराज साद्यस्कानि बृहस्पतिः।
पृच्छते त्रिदशेन्द्राय तानीमानि निबोध मे ॥ 5-33-78 (32783)
! மஹாராஜரே! ப்ருஹஸ்பதியானவர் (தம்மிடம்) வினவிய இந்திரனை நோக்கி நான்குகளை உடனே பலிப்பவைகளகச் சொன்னார். அவற்றை என்னிடமிருந்து தெரிந்து கொள்ளும்.

देवतानां च सङ्कल्पमनुभावं च धीमताम्।
विनयं कृतविद्यानां विनाशं पापकर्मणाम् ॥ 5-33-79 (32784)
தேவதைகளுடைய ஸங்கல்பம், புத்திமான்களுடைய மஹிமை, வித்யாப்யாஸம் செய்தவர்களுடைய விநயம், பாபிகளுடைய நாசகர்மம் ஆகிய இவை உடனே பலிப்பவை.

चत्वारि कर्माण्यभयंकराणि भयं प्रयच्छन्त्ययथाकृतानि ।
मानाग्निहोत्रमुत मानमौनं मानेनाधीतमुत मानयज्ञः ॥ 5-33-80 (32785)
அக்னிஹோத்ரம், மௌனம், அத்தியயனம், யஜ்ஞமென்கிற நான்கு கர்மங்களும் அபயத்தைச் செய்கின்றவை. இவையே வேறுவிதமாக கௌரவத்திற்காகச் செய்யப்பட்டால் பயத்தைக் கொடுக்கின்றன.

पञ्चाग्नयो मनुष्येण परिचर्याः प्रयत्नतः ।
पिता माताग्निरात्मा च गुरुश्च भरतर्षभ ॥ 5-33-81 (32786)
! பரதஶ்ரேஷ்டரே! பிதா, மாதா, அக்னி, ஆத்மா, குருவென்கிற ஐந்து அக்னிகள் மனிதனால் முயற்சியுடன் பணிவிடை செய்யப்படத்தக்கவைகள்.

पञ्चैव पूजयँल्लोके यशः प्राप्नोति केवलम् ।
देवान्पितॄन्मनुष्यांश्च भिक्षूनतिथिपञ्चमान् ॥ 5-33-82 (32787)
உலகத்தில் தேவர்கள், பித்ருக்கள், மனுஷ்யர்கள், யதிகள், அதிதிகள் ஆகிய ஐந்து வகையார்களையுமே பூஜிக்கிறவன் மிக்கபுகழை அடைகிறான்.

पञ्च त्वाऽनुगमिष्यन्ति यत्र यत्र गमिष्यसि ।
मित्राण्यमित्रा मध्यस्था उपजीव्योपजीविनः ॥ 5-33-83 (32788)
எங்கெங்கே போவீரோ அங்கங்கெல்லாம் மித்திரர்கள், சத்துருக்கள், மத்யஸ்தர்கள், ஆஶ்ரயிக்கப்படவேண்டிய பெரியோர்கள், ஆஶ்ரயித்தவர்கள் ஆகிய ஐந்துபேர்களும் உம்மைப் பின்தொடர்வார்கள்.

पञ्चेन्द्रियस्य मर्त्यस्य छिद्रं चेदेकमिन्द्रियम् ।
ततोऽस्य स्रवति प्रज्ञा दृतेः पात्रादिवोदकम् ॥ 5-33-84 (32789)
ஐந்து இந்த்ரியங்களுடைய மனிதனுடைய ஓர் இந்த்ரியமானது துவாரமாகுமேயானால் (=விஷயத்தில் பற்றுமேயானால்) அதன் வழியாக இவனுடைய அறிவானது தோலால் செய்யப்பட்ட (ஓட்டைப்) பாத்திரத்திலுருந்தும் ஜலம் நழுவுவதுபோல வெளியில் நழுவிவிடும்.

षड्दोषाः पुरुषेणेह हातव्या भूतिमिच्छता ।
निद्रा तन्द्री भयं क्रोध आलस्यं दीर्घसूत्रता । 5-33-85 (32790)
ஸம்பத்தை விரும்புகிற மனிதனாலே அதிக நித்திரை, சோம்பல், பயம், குரோதம், முயற்சியின்மை, விரைந்து செய்யாமை எங்கிற ஆறுதோஷங்களும் தள்ளத்தக்க வைகள்.

षडिमान्पुरुषो जह्याद्भिन्नां नावमिवार्णवे ।
अप्रवक्तारमाचार्यमनधीयानमृत्विजम् ॥ 5-33-86 (32791)
अरक्षितारं राजानं भार्यां चाप्रियवादिनीम् ।
ग्रामकामं च गोपालं वनकामं च नापितम् ॥ 5-33-87 (32792)
மனிதன் நன்றாகச் சொல்லாதவனான ஆசாரியனையும், அத்தியயனம் செய்யாத ரித்விக்கையும், ரக்ஷிக்காத அரசனையும், அப்பிரியமாகப் பேசுகிற மனைவியையும், கிராமத்தை விரும்புகிற இடையனையும், வனத்தை விரும்புகிற நாவிதனையும் (க்ஷௌரகனையும்), இவ்வாறு பேர்களையும் ஸமுத்திரத்தில் உடைந்த தோணியைத் தள்ளுவது போலத் தள்ளவேண்டும்.

षडेव तु गुणाः पुंसा न हातव्याः कदाचन ।
सत्यं दानमनालस्यमनसूया क्षमा धृतिः ॥ 5-33-88 (32793)
மனிதனாலே உண்மையுரைத்தல், சோம்பலில்லாமை, அஸூயையில்லாமை, பொறுமை, தைரியம் ஆகிய ஆறு குணங்களும் ஒருபொழுதும் விடத்தக்கவைகளல்ல.

अर्थागमो नित्यमरोगिता च प्रिया च भार्या प्रियवादिनी च ।
वश्यश्च पुत्रोऽर्थकरी च विद्या षड्जीवलोकस्य सुखानि राजन् ॥ 5-33-89 (32794)
! அரசரே! எந்நாளும்தனத்தின் வரவு, நோயற்றிருத்தல், அன்புடையவளும் பிரியமாகப் பேசுகிறவளுமான மனைவி, வசப்பட்டவனான புத்திரன், தனத்தைச் செய்கிற வித்தை இவை ஆறும் மனிதவர்க்கத்திற்கு ஸுகத்தைக் கொடுக்கின்றவைகள்.

षण्णामात्मनि नित्यानामैश्वर्यं योऽधिगच्छति ।
न स पापैः कुतोऽनर्थैर्युज्यते विजितेन्द्रियः ॥ 5-33-90 (32795)
மனத்தில் நித்யமாயிருக்கிற (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸரியம்) இவ்வாறினையும் அடக்குந் தன்மையை எவன் அடைகிறானோ, இந்த்ரியங்களை ஜயித்தவனான அவன் பாபங்களோடு கூடுகிறதில்லை. அவன் அனர்த்தங்களை என்ன காரணத்தால் அடைவான்?
षडिमे षट्सु जीवन्ति सप्तमो नोपलभ्यते ।
चोराः प्रमत्ते जीवन्ति व्याधितेषु चिकित्सकाः ॥ 5-33-91 (32796)
प्रमदाः कामयानेषु यजमानेषु याजकाः ।
राजा विवदमानेषु नित्यं मूर्खेषु पण्डिताः ॥ 5-33-92 (32797)
பின்வரும் ஆறுபேர்களும், ஆறுபேர்களிடத்தில் ஜீவிக்கிறார்கள். ஏழாமவன் அறியப்படவில்லை. (என்னவெனில்) திருடர்கள் அஜாக்கிரதையுள்ளவனிடமும், வைத்தியர்கள் நோயாளிகளிடமும், ஸ்திரீகள் காமிகளிடமும், யாகம்செய்விப்பவர்கள் யாகம் செய்பவர்களிடமும், அரசன் வழக்காளிகளிடமும், பண்டிதர்கள் மூடர்களிடமும் எப்பொழுதும் ஜீவிக்கிறார்கள்.

षडिमानि विनश्यन्ति मुहूर्तमनवेक्षणात् ।
गावः सेवा कृषिर्भार्या विद्या वृषलसङ्गतिः ॥ 5-33-93 (32798)
பசுக்கள், ஊழியம், வேளாண்மை, மனைவி, கல்வி, ஶூத்ரருடைய சேர்க்கை இவ்வாறும் ஒரு முகூர்த்தம் பாராவிட்டால் நசிக்கின்றன.

षडेते ह्यवमन्यन्ते नित्यं पूर्वोपकारिणम् ।
आचार्यं शिक्षिताः शिष्याः कृतदाराश्च मातरं ॥ 5-33-94 (32799)
नारीं विगतकामास्तु कृतार्थाश्च प्रयोजकम् ।
नावं निस्तीर्णकान्तारा नातुराश्च चिकित्सकं ॥ 5-33-95 (32800)
கற்பிக்கப்பட்ட சிஷ்யர்கள் ஆசாரியனையும், தாரத்தை அடைந்தவர்கள் மாதாவையும், காமம் நீங்கினவர்கள் நாரியையும், பயனை அடைந்தவர்கள் உதவி செய்தவனையும், கரையை அடைந்தவர்கள் தோணியையும், வியாதி நீங்கினவர்கள் வைத்தியனையுமாக (முன்முன்சொல்லப்பட்ட) இவ்வாறுபேர்களும் முன்னம் உபகரித்தவர்களான (பின்பின்சொல்லப்பட்ட) ஆறுபேர்களையும் அவமதிக்கின்றார்கள்.

आरोग्यमानृण्यमविप्रवासः सद्भिर्मनुष्यैः सह संप्रयोगः ।
स्वप्रत्यया वृत्तिरभीतवासः षट् जीवलोकस्य सुखानि राजन् ॥ 5-33-96 (32801)
! அரசரே! நோயின்மை, கடனில்லாமை, பரதேசவாஸமில்லாமை, ஸத்துக்களான மனுஷ்யர்களுடன் சேர்க்கை, [9]தன் புத்தியால் ஏற்பட்ட ஜீவனம், பயமில்லாதவாஸம் இவ்வாறும் ஜீவர்களுக்கு ஸுகஸாதனங்கள்.

ईर्षुर्धृणी नसन्तुष्टः क्रोधनो नित्यशङ्कितः ।
परभाग्योपजीवी च षडेते नित्यदुःखिताः ॥ 5-33-97 (32802)
பொறாமையுடையவனும், அருவருப்புள்ளவனும், திருப்தியில்லாதவனும், கோபிஷ்டனும், எப்பொழுதும் ஶங்கைப்படுகிறவனும், பிறனுடைய பாக்கியத்தை அடுத்துப் பிழைப்பவனுமான இவ்வாறு பேர்களும் எந்நாளும் துக்கமுள்ளவர்கள்.

सप्त दोषाः सदा राज्ञा हातव्या व्यसनोदयाः ।
प्रायशो यैर्विनश्यन्ति कृतमूला अपीश्वराः ॥ 5-33-98 (32803)
स्त्रियोऽक्षा मृगया पानं वाक्पारुष्यं च पञ्चमम् ।
महच्च दण्डपारुष्यमर्थदूषणमेव च ॥ 5-33-99 (32804)
வேரூன்றின அரசர்களையும் பெரும்பாலும் நாசத்தை அடையும்படி செய்கின்றவைகளும் வியஸனத்திற்குக் காரணமுமான ஸ்த்ரீகள், சூது, வேட்டை, பானம், கடுஞ்சொல், பெரிதும் கடிமையுமான சிக்ஷை, தனத்தை வீணாக்குதல் என்கிற ஏழு தோஷங்களும் எப்பொழுதும் அரசனால் தள்ளத்தக்கவைகள்.

अष्टौ पूर्वनिमित्तानि नरस्य विनशिष्यतः ।
ब्राह्मणान्प्रथमं द्वेष्टि ब्राह्मणैश्च विरुध्यते ॥ 5-33-100 (32805)
ब्राह्मणस्वानि चादत्ते ब्राह्मणांश्च जिघांसति ।
रमते निन्दया चैषां प्रशंसां नाभिनन्दति ॥ 5-33-101 (32806)
नैनान्स्मरति कृत्येषु याचितश्चाभ्यसूयति ।
एतान्दोषान्नरः प्राज्ञो बुद्ध्या बुध्वा विसर्जयेत् ॥ 5-33-102 (32807)
பிராமணர்களை (த்தானாக) முதலில் துவேஷிப்பதும், பிராமணர்களால் விரோதிக்கப்படுவதும், பிராமணர்களின் பொருளைக் கவர்வதும், பிராமணர்களைக் கொல்ல விரும்புவதும், அவர்களைத் தோஷிப்பதில் மகிழ்வதும், அவர்களைப் புகழ்வதில் மகிழாதிருப்பதும், செய்யவேண்டிய கார்யங்களில் அவர்களை நினையாதிருப்பதும், அவர்கள் யாசிக்கையில் அஸூயையடைவதுமான எட்டும் ஒரு மனிதன் அடைகிற நாசத்திற்கு முன்னுண்டகும் குறிகள். அறிவுடையவனான மனிதன் புத்தியால் இந்தத் தோஷங்களை அறிந்து நீக்க வேண்டும்.

अष्टाविमानि हर्षस्य नवनीतानि भारत ।
वर्तमानानि दृश्यन्ते तान्येव स्वसुखान्यपि ॥ 5-33-103 (32808)
समागमश्च सखिभिर्महांश्चैव धनागमः ।
पुत्रेण च परिष्वङ्गः सन्निपातश्च मैथुने ॥ 5-33-104 (32809)
समये च प्रियालापः स्वयूथ्येषु समुन्नतिः ।
अभिप्रेतस्य लाभश्च पूजा च जनसंसदि ॥ 5-33-105 (32810)
! பாரதரே! நண்பர்களுடன் சேர்க்கையும், அதிகமான தனலாபமும், புத்திரனுடைய ஆலிங்கனமும், அன்பு ஒத்த ஸ்திரீ புருஷர்களின் சேர்க்கையும், ஸமயத்தில் பிரியமான ஸல்லாபமும், தன்னுடைய கூட்டத்தார்களுள் மேன்மையும், இஷ்டமான வஸ்துவின் லாபமும், ஜனஸங்கத்தில் மரியாதையும், இவ்வெட்டும் ஸந்தோஷத்திற்கு வெண்ணெய் போன்றனவாகக் காணப்படுகின்றன. அவைகளே தனக்கு ஸுகத்தை அளிக்கின்றவைகளுமாயிருக்கின்றன.

अष्टौ गुमाः पुरुषं दीपयन्ति प्रज्ञा च कौल्यं च दमः श्रुतं च ।
पराक्रमश्चाबहुभाषिता च दानं यथाशक्ति कृतज्ञता च ॥ 5-33-106 (32811)
அறிவு, நற்குடிப்பிறப்பு, அடக்கம், கல்வி, பராக்கிரமம், மிதமான வார்த்தை, சக்திக்குத்தக்கபடி தானம், செய்ந்நன்றி யறிதல் (இந்த) எட்டுக்குணங்களும் மனிதனை விளங்கச் செய்கின்றன.

नवद्वारमिदं वेश्म त्रिस्थूणं पञ्चसाक्षिकम् ।
क्षेत्रज्ञाधिष्ठितं विद्वान्यो वेद स परः कविः ॥ 5-33-107 (32812)
எந்த வித்வான் ஒன்பது துவாரமுடையதும் [10](இளை, பிங்களை, ஸுஷும்ணை யென்கிற) மூன்று தூண்களுள்ளதும் [11]இந்த்ரியங்களாகிற ஐந்து [12]ஸாக்ஷிகளையுடையதும் ஜீவனால் வஸிக்கப்பட்டதுமான இந்த(ச்சரீரமாகிற) க்ருஹத்தை அறிந்தானோ அவன் சிறந்த அறிவுள்ளவன்.

दश धर्मं न जानन्ति धृतराष्ट्र निबोध तान् ।
मत्तः प्रमत्त उन्मत्तः श्रान्तः क्रुद्धो बुभुक्षितः ॥ 5-33-108 (32813)
त्वरमाणश्च लुब्धश्च भीतः कामी च ते दश ।
तस्मादेतेषु भावेषु न प्रसञ्जेत पण्डितः ॥ 5-33-109 (32814)
! திருதராஷ்டிரரே! பத்துப்பேர்கள் தர்மத்தை அறிகிறதில்லை. அவர்களைத் தெரிந்து கொள்ளும். அவர்கள் மதங்கொண்டவன், அஜாக்கிரதையுடையவன், பித்தன், களைப்படைந்தவன், கோபத்தையடைந்தவன், பசித்தவன், அவஸரக்காரன், லோபி, பயந்தவன், காமி ஆகிய இப்பதின்மரும் ஆவர். ஆகையால் (பண்டிதனானவன் (மதமுதலான) இந்த விஷயங்களில் [13]விழக்கூடாது.

अत्रैवोदाहरन्तीममितिहासं पुरातनम् ।
पुत्रार्थमसुरेन्द्रेण गीतं चैव सुधन्वना ॥ 5-33-110 (32815)
இந்த விஷயத்திலேயே அஸுரஶ்ரேஷ்டனான ப்ரஹ்லாதனுக்கும் ஸுதந்வாவுக்கும் ப்ரஹ்லாத புத்ரன் விஷயமாக நடந்த வார்த்தையான பழமையான இந்த இதிஹாஸத்தைச் சொல்லுகிறார்கள்.

यः काममन्यू प्रजहाति राजा पात्रे प्रतिष्ठापयते धनं च।
विशेषविच्छ्रुतवान्क्षिप्रकारी तं सर्वलोकः कुरुते प्रमाणम् ॥ 5-33-111 (32816)
எந்த அரசன் காமக்ரோதங்களை முழுதும் தள்ளுகிறானோ (நல்ல) பாத்ரத்தில் தனத்தை அளிக்கிறானோ, விஶேஷங்களை அறிந்தவனும் ஶாஸ்த்ரங்களைக் கற்றவனும் (கார்யத்தை) விரைந்து செய்கிறவனுமாயிருக்கிறானோ அவனை எல்லா மனிதர்களும் [14]ப்ரமாணமாகச் செய்கிறார்கள். 

जानाति विश्वासयितुं मनुष्यान् विज्ञातदोषेषु दधाति दण्डम् ।
जानाति मात्रां च तथा क्षमां च तं तादृशं श्रीर्जुषते समग्रा ॥ 5-33-112 (32817)
எவன் மனுஷ்யர்களை விசுவாஸம் வரச்செய்வதற்கு அறிகிறானோ, சிக்ஷையின் அளவையும்[15], பொறுமையையும் அறிகிறானோ அவ்விதமான அவனை நிரம்பின செல்வம் அடைகிறது.

सुदुर्बलं नावजानाति कञ्चिद्युक्तो रिपुं सेवते बुद्धिपूर्वम् ।
न विग्रहं रोचयते बलस्थैः काले च यो विक्रमते स धीरः ॥ 5-33-113 (32818)
பகைவரின் தவறுதல்களைப் பார்ப்பதில் விழித்திருந்துகொண்டு புத்திபூர்வகமாகப் பகைவனை அடுக்கிறவனும், சிறிதும் பலமில்லாதவனாயிருக்கிற ஒரு பகைவனையும் அலக்ஷியம் செய்யாதவனும், பலசாலிகளோடு யுத்தத்தை விரும்பாதவனும், ஸமயத்தில் பராக்கிரமத்தை வெளிப்படுத்துகிறவனுமாயிருப்பவனே தீரன்.

प्राप्यापदं न व्यथते कदाचिदुद्योगमान्वच्छति चाप्रमत्तः ।
दुःखं च काले सहते महात्मा धुरन्धरस्तस्य जिताः सपत्नाः ॥ 5-33-114 (32819)
காரியத்தில் துரந்தரனும், ஆபத்தை அடைந்தபொழுதும் ஒருகாலும் துன்பத்தை அடையாதவனும், அஜாக்கிரதையில்லாமல் ப்ரவ்ருத்தியைத் தேடுகிறவனும், துக்கம் நேரிட்டபொழுது பொறுப்பவனுமாயிருக்கும் மஹாத்மாவால் பகைவர்கள் ஜயிக்கப்பட்ட வர்களாவார்கள்.

अनर्थकं विप्रवासं गृहेभ्यः पापैः सन्धिं परदाराभिमर्शम् ।
दम्भं स्तैन्यं पैशुनं मद्यमानं न सेवते यः स सुखी सदैव ॥ 5-33-115 (32820)
எவன் வீட்டைவிட்டுப் பயனில்லாமல் தேசாந்தரம் செல்வதையும், பாபிகளுடன் சேர்க்கையையும், பிறர் மனைவியைச் சேர்தலையும், டம்பத்தையும், திருட்டையும், கோள் சொல்லுவதையும், மதுபானத்தையும் செய்யவில்லையோ அவன் எப்பொழுதும் ஸுகியாயிருப்பான்.

न संरम्भेणारभते त्रिवर्गमाकारितः शंसति तत्त्वमेव ।
न मित्रार्थे रोचयते विवादं नापूजितः कुप्यति चाप्यमूढः ॥ 5-33-116 (32821)
மூடனல்லாதவன் தர்மார்த்தகாமங்களை படபடப்பாக ஆரம்பிக்கிறதில்லை; அழைத்துக் கேட்கப்பட்டால் உண்மையையே சொல்லுவான்; மித்திரன் விஷயத்தில் விவாதத்தை விரும்புகிறதில்லை. பூஜிக்கப்படாவிட்டாலும் கோபிக்கிறதில்லை.

न योऽभ्यसूयत्सयनुकम्पते च न दुर्बलः प्रातिभाव्यं करोति ।
नात्याह किंचित्क्षमते विवादं सर्वत्र तादृग्लभते प्रशंसाम् ॥ 5-33-117 (32822)
எவன் அஸூயை அடைகிறதில்லையோ, தயை செய்கிறானோ, பலமில்லாதவனா யிருக்கையில் விரோதத்தைச் செய்வதில்லையோ, ஒன்றையும் அதிகமாகச் சொல்லுகிறதில்லையோ, விவாதத்தை ஸஹிக்கிறானோ அப்படிப்பட்டவன் எங்கும் புகழ்ச்சியையடைகிறான்.

यो नोद्धतं कुरुते जातु वेषं न पौरुषेणापि विकत्थतेऽन्यान् ।
न मूर्च्छितः कटुकान्याह किंचित्प्रियं सदा तं कुरुते जनो हि ॥ 5-33-118 (32823)
எவன் ஒருபொழுதும் கர்வத்தைக் காட்டும் வேஷத்தைச் செய்துகொள்ளுகிற தில்லையோ, பௌருஷத்தால் பிறரிடம் தற்புகழ்ச்சி செய்துகொள்ளுகிறதில்லையோ, மிஞ்சினவனாகிச் சிறிதும் கடுமையான வார்த்தைகளைப் பேசுகிறதில்லையோ அவனை மனிதன் எப்பொழுதும் பிரியனாகச் செய்கிறானல்லவா?

न वैरमुद्दिपयति प्रशान्तं न दर्पमारोहति शान्तिमेति ।
न दुर्गतोऽस्मीति करोत्यकार्यं तमार्यशीलं परमाहुरार्याः ॥ 5-33-119 (32824)
அடங்கின வைரத்தை வளரச்செய்யாதவனும் கொழுப்பையடையாதவனும் பொறுமையை யடைந்தவனும் வறுமையடைந்திருக்கிறேனென்று அகாரியத்தைச் செய்யாதவனுமாயிருப்பவனை ஆரியர்கள் மிகவும் ஆரியர்களுடைய சீலமுடையவனாகச் சொல்லுகிறார்கள்.

न स्वे सुखे वै कुरुते प्रहर्षं नान्यस्य दुःखे भवति प्रहृष्टः ।
दत्त्वा न पश्चात्कुरुतेऽनुतापं स कथ्यते सत्पुरुषार्यशीलः ॥ 5-33-120 (32825)
தனக்கு ஸுகமுண்டானபொழுது ஸந்தோஷத்தையடையாதவனும், கொடுத்துவிட்டுப் பிறகு பச்சாதாபப்படாதவனுமாயிருப்பவன் ஸத்புருஷனாகவும் புகழத்தக்க ஒழுக்கமுடையவனாகவும் சொல்லப்படுகிறான்.

देशाचारान्समयाञ्जातिधर्मान् बुभूषते यः स परावरज्ञः ।
स यत्र तत्राभिगतः सदैव महाजनस्याधिपत्यं करोति ॥ 5-33-121 (32826)
தேசாந்தரங்களையும், (அங்குள்ள) கொள்கைகளையும், ஜாதிகளின் தர்மங்களையும் அறிகிறவனும், ஏற்றத் தாழ்வறிந்தவனாயிருப்பவன் முன்னுக்கு வருகிறான். அவன் எங்கே போனாலும், அவ்விடத்தில் (ஜனங்களால்) அடையப்பட்டவனாகி (அந்த) ஜனக்கூட்டத்திற்கு அதிபதியாயிருத்தலை அடைகிறான்.

दम्भं मोहं मत्सरं पापकृत्यं राजद्विष्टं पैशुनं पूगवैरम् ।
मत्तोन्मत्तैर्दुर्जनैश्चापि वादं यः प्रज्ञावान्वर्जयेत्स प्रधानः ॥ 5-33-122 (32827)
டம்பத்தையும், மோஹத்தையும், மாத்ஸரியத்தையும், பாவச்செயலையும், ராஜத்வேஷத்தையும், கோள்சொல்வதையும், ஜனக்கூட்டங்களோடு பகைத்தலையும், மதங்கொண்டவர்களோடும் பித்தர்களோடும் துர்ஜனங்களோடும் பேச்சையும் தள்ளுகிற பேரறிவாளனே சிறந்தவன்.

दमं शौचं दैविकं मङ्गलानि प्रायश्चित्तान्विविधाँल्लोकवादान्।
एतानि यः कुरुते नैत्यकानि तस्योत्थानं देवता राधयन्ति ॥ 5-33-123 (32828)
எவன் அடக்கம், சுத்தி, தெய்வகர்மம், மங்களகாரியங்கள், பிராயஶ்சித்தங்கள், பலவிதமான உலக வ்யவஹாரங்கள் ஆகிய இவைகளை நித்தியமாகச் செய்கிறனோ அவனுக்குத் தேவதைகள் மேன்மேலும் விருத்தியைச் செய்கிறர்கள்.

समैर्विवाहं कुरुते न हीनैः समैः सख्यं व्यवहारं कथां च।
गुणैर्विशिष्टांश्च पुरो दधाति विपश्चितस्तस्य नयाः सुनीताः ॥ 5-33-124 (32829)
ஸமமாயுள்ளவர்களுடன் விவாஹத்தைச் செய்கிறவனும், இழிவானவர்களுடன் விவாஹத்தைச் செய்யாதவனும், ஸமானர்களோடு ஸ்நேஹத்தையும் (ஆகாரம் முதலான) வியவஹாரத்தையும் ஸம்பாஷணத்தையும் செய்கீறவனும், குணங்களால் சிறந்தவர்களைக் கௌரவிக்கிறவனுமான வித்வானுடைய நீதி நன்றாகச் செலுத்தப்பட்டதாகும்.

मितं भुङ्क्ते संविभज्याश्रितेभ्यो मितं स्वपित्यमितं कर्म कृत्वा।
ददात्यमित्रेष्वपि याचितः संस्तमात्मवन्तं प्रजहत्यनर्थाः ॥ 5-33-125 (32830)
(தன்னை) அடுத்தவர்களுக்குப் பகுத்துக் கொடுத்துவிட்டு மிதமாகப் புஜிக்கிறவனும், அளவற்ற காரியத்தைச் செய்துவிட்டும் மிதமாக நித்திரை செய்கிறவனும், யாசிக்கப்பட்டால் பகைவர்களுக்கும் தானம் செய்கிறவனும், நல்ல மனமுடையவனுமாயிருப்பவனை அனர்த்தங்கள் விட்டு விலகுகின்றன.

चिकीर्षितं विप्रकृतं च यस्य नान्ये जनाः कर्म जानन्ति किंचित्।
मन्त्रे गुप्ते सम्यगनुष्ठिते च नाल्पोऽप्यस्य च्यवते कश्चिदर्थः ॥ 5-33-126 (32831)
எவனுடைய செய்யவிரும்பப்பட்ட காரியத்தையும், மாறாகச் செய்யப்பட்ட காரியத்தையும், இதர ஜனங்கள் சிறிதும் அறிகிறதில்லையோ அவனுடைய ஆலோசனை ரஹஸ்யமாயும், நன்றாக அனுஷ்டிக்கப்பட்டதாயுமிருந்தால் (அவனுக்கு) ஒருகாரியமும் சிறிதும் நழுவுகிறதில்லை.

यः सर्वभूतप्रशमे निविष्टः सत्यो मृदुर्मानकृच्छुद्धभावः।
अतीव स ज्ञायते ज्ञातिमध्ये महामणिर्जात्य इव सप्रन्नः ॥ 5-33-127 (32832)
எல்லாப்ப் பிராணிகள் விஷயத்திலும் அமைதியில் பிரவேசித்தவனும், உண்மையுள்ளவனும், மிருதுஸ்வபாவமுள்ளவனும், (தக்கவர்களை) நன்கு மதிக்கிறவனும், சுத்தமான எண்ணமுடையவனுமாயிருக்கிறவன், ஞாதிகளின் நடுவில், நல்ல ஜாதியிலுண்டானதும் தெளிவுள்ளதுமான பெரிய ரத்தினம்போல அதிகமாக அறியப்படுகிறான்.

य आत्मनाऽपत्रपते भृशं नरः स सर्वलोकस्य गुरुर्भवत्युत ।
अनन्तजेजाः सुमनाः समाहितः स तेजसा सूर्य इवावभासते ॥ 5-33-128 (32833)
எந்த மனிதன் தானாகவே (அகார்யங்களில்) மிகவும் லஜ்ஜையடைகிறானோ அவன் எல்லா வுலகத்திற்கும் குருவாகிறான்; தவிரவும், அளவற்ற தேஜஸ்ஸுடையவனும் நல்ல மனமுடையவனும் சித்தம் நிலைபெற்றவனுமாகிறான். அவன் தேஜஸ்ஸினால் ஸூர்யன்போல் விளங்குகிறான்.

वने जाताः शापदग्धस्य राज्ञः पाण्डोः पुत्राः पञ्च पञ्चेन्द्रकल्पाः ।
त्वयैव बाला वर्धिताः शिक्षिताश्च तवादेशं पालयन्त्याम्बिकेय ॥ 5-33-129 (32834)
! அம்பிகையின் புத்திரரே! சாபத்தால் எரிக்கப்பட்டவரும் அரசருமான பாண்டுவின் புத்திரர்கள் ஐவரும் வனத்தில் பிறந்தார்கள், ஐந்து இந்திரர்களுக்கு நிகரானவர்களாயிருக்கிறர்கள். பாலர்களான அவர்கள் உம்மாலேயே வளர்க்கப்பட்டவர்களும் கற்பிக்கப்பட்டவர்களுமாக உம்முடைய கட்டளையைக் காத்து வருகிறர்கள்.

प्रदायैषामुचितं तातराज्यं सुखी पुत्रैः सहितो मोदमानः ।
न देवानां नापि च मानुषाणां भविष्यसि त्वं गर्हणीयो नरेन्द्र ॥ ॥ 5-33-130
! ஐயா! அவர்களுக்கு உசிதமான ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டுப் புத்திரர்களுடன் ஸுகியும் ஸந்தோஷிக்கிறவரும் ஆகக்கடவீர். ! அரசரே! (இப்படிச் செய்தால்) நீர் தேவர்களுக்கும் மனுஷ்யர்களுக்கும் நிந்திக்கத்தக்கவர் ஆகமாட்டீர்.” என்றார்.


[1] தூக்கமில்லாமை
[2]எல்லாராலும் விரும்பப்பட்டவன்என்பது பழையவுரை.
[3]ஒருவன் பாவமாகிய தீங்கைச்செய்கிறான். அத்தீங்கினால் வரும் துன்பத்தைப் பலர் அநுபவிக்கின்றனர். அத்தீங்கினால் கிடைத்த லாபத்தை அவனைச் சார்ந்த சிலர் அநுபவிக்கின்றனர். பாவப்பயன் அவர்களுக்கில்லை. செய்தவனே பாவத்தால் வரும் தண்டனையாகிய பயனை அடைகிறான்என்பது.
[4] ஸமாதானம், தானபேதங்கள், யுத்தம்
[5]வரப்ரதானம்என்பது மூலம். ‘வரங்கொடுப்பதுஎன்பது நேரான பொருள்.
[6]பகைவனாகிய யுதிஷ்டிரனைத் தன்கோத்ரத்தார்களைத் தான் கொல்லுவிப்பதினின்றும் விடுவிப்பதுஎன்பது பழைய வுரை.
[7] ஸ்தோத்ரம் செய்பவர்கள்.
[8]முதியவனான ஞாதி குலதர்மங்களை யுபதேசிப்பான், குலீனன் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைக் கற்பிப்பான், நண்பன் நன்மையைச் சொல்லுவான்; ஸஹோதரி பொருளைக் காப்பாற்றுவாள்என்பது பழைய வுரை.
[9]தன் புத்திக்கு நிச்சயமாகத் தோற்றுகிறபடியே நடத்தல்என்பது பழைய வுரை.
[10]வாதபித்தஶ்லேஷ்மங்கள்என்பது பழையவுரை.
[11]இந்த்ரியங்களின் விஷையங்களாகிறஎன்பது பழையவுரை.
[12] பார்க்கிறவர்கள்.
[13] ஸம்பந்திக்கக்கூடாது.
[14]அவனைப் பார்த்து நடக்க நிச்சயிக்கிறார்கள்என்பது கருத்து.
[15] குற்றவாளிகளாயினும் சிக்ஷிக்கத் தகாதவரைச் சிக்ஷியாமை.

No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...