Saturday, 17 November 2018

யதிராஜ விம்ஶதி


பேரருளாளன் பெருந்தேவித்தாயார் திருவடிகளே ஶரணம்.

ஆழ்வாரெம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்.

श्रीयतिराजविंशतिः


श्रीमते रामानुजाय नमः

यः स्तुतिं यतिपतिप्रसादिनीं व्याजहार यतिराजविंशतिम् ।
तं प्रपन्नजनचातकाम्बुदं नौमि सौम्यवरयोगिपुङ्गवम् ॥

श्री माधवाङ्घ्रिजलज द्वयनित्यसेवा प्रेमाविलाशय पराङ्कुश पादभक्तम् ।
कामादिदोषहर मात्मपदाश्रितानां रामानुजंयतिपतिं प्रणमामि मूर्ध्ना ॥ १॥

श्रीरङ्गराज चरणाम्बुजराजहम्सं श्रीमत्पराङ्कुश पादाम्बुज भृङ्गराजम् ।
श्रीभट्टनाथ परकाल मुखाब्जमित्रं श्रीवत्सचिह्नशरणं यतिराजमीडे ॥ २॥

वाचा यतीन्द्र मनसा वपुषा च युष्मत्पादारविन्दयुगलं भजतां गुरूणाम् ।
कूराधिनाथ कुरुकेशमुखाद्य पुंसां पादानुचिन्तनपरः सततं भवेयम् ॥ ३॥

नित्यं यतीन्द्र तव दिव्यवपुस्मृतौ सक्तं मनो भवतु वाग्गुणकीर्तनेऽसौ ।
कृत्यञ्च दास्यकरणं तु करद्वयस्य वृत्त्यन्तरेऽस्तु विमुखं करणत्रयञ्च ॥ ४॥

अष्टाक्षराख्य मनुराजपदत्रयार्थनिष्ठां ममात्र वितराद्य यतीन्द्र नाथ ।
शिष्टाग्रगण्यजनसेव्य भवत्पदाब्जे हृष्टाऽस्तु नित्यमनुभूय ममास्य बुद्धिः ॥ ५॥

अल्पाऽपि मे न भवदीयपदाब्ज भक्तिः शब्दादिभोगरुचिरन्वह मेधते हा ।
मत्पापमेव हि निदानममुष्य नान्यत्तद्वारयार्य यतिराज दयैकसिन्धो ॥ ६॥

वृत्त्या पशुर्नरवपुस्त्वहमीद्रुशोऽपि श्रुत्यादि सिद्धनिखिलमात्मगुणाश्रयोऽयम् ।
इत्यादरेण कृतिनोऽपि मिथः प्रवक्तुम् अद्यापि वञ्चनपरोऽत्र यतीन्द्र वर्ते ॥ ७॥

दुःखावहोऽहमनिशं तव दुष्टचेष्टः शब्दादिभोगनिरतश्शरणागताख्यः ।
त्वत्पाद भक्त इव शिष्टजनौघमध्ये मिथ्या चरामि यतिराज ततोऽस्मि मूर्खः ॥ ८॥

नित्यं त्वहं परिभवामि गुरुं च मन्त्रं तद्देवतामपि न किञ्चिदहो बिभेमि ।
इत्थं शठोऽप्यशठवद्भवदीय सङ्घे धृष्टश्चरामि यतिराज ततोऽस्मि मूर्खः ॥ ९॥

हा हन्त हन्त मनसा क्रियया च वाचा योऽहञ्चरामि सततं त्रिविधापचारान् ।
सोऽहं तवाऽप्रियकरः प्रियकृद्वदेव कालं नयामि यतिराज ततोऽस्मि मूर्खः ॥ १०॥

पापे कृते यदि भवन्ति भयानुतापलज्जाः पुनः करणमस्य कथं घटेत ।
मोहेन मे न भवतीह भयादिलेशस्तस्मात्पुनः पुनरघम् यतिराज कुर्वे ॥ ११॥

अन्तर्बहिस्सकलवस्तुषु सन्तमीशम्-अन्धः पुरस्स्थितमिवाहमवीक्षमाणः ।
कन्दर्पवश्यहृदयस्सततं भवामि हन्त त्वदग्रगमनस्य यतीन्द्र नार्हः ॥ १२॥

तापत्रयीजनितदुःखनिपातिनोऽपि देहस्थितौ मम रुचिस्तु न तन्निवृत्तौ ।
एतस्य कारणमहो मम पापमेव नाथ! त्वमेव हर तद्यतिराज! शीघ्रम् ॥ १३॥

वाचामगोचर महागुण देशिकाग्र्य कूराधिनाथ कथिताऽखिलनैच्यपात्रम् ।
एषोहमेव न पुनर्जगतीदृशस्तद्रामानुजार्य करुणैव तु मद्गतिस्ते ॥ १४॥

शुद्धात्मयामुनगुरूत्तम कूरनाथ भट्टाख्यदेशिकवरोक्तसमस्तनैच्यम् ।
अद्याऽस्त्यसङ्कुचितमेव मयीह लोके तस्माद्यतीन्द्र करुणैव तु मद्गतिस्ते ॥ १५॥

शब्दादिभोगविषया रुचिरस्मदीया नष्टा भवत्विह भवद्दयया यतीन्द्र ।
त्वद्दासदासगणनाचरमावधौ यस्तद्दासतैकरसताऽविरता ममास्तु ॥ १६॥

श्रुत्यग्रवेद्यनिजदिव्यगुणस्वरूपः प्रत्यक्षतामुपगतस्त्विह रङ्गराजः ।
वश्यस्सदा भवति ते यतिराज तस्मात्-शक्तस्स्वकीयजनपापविमोचने त्वम् ॥ १७॥

कालत्रयेऽपि करणत्रयनिरमिताति पापक्रियस्य शरणम् भगवत्क्षमैव ।
सा च त्वयैव कमलारमणेऽर्थिता यत्-क्षेमस्स एव हि यतीन्द्र! भवच्छ्रितानाम् ॥ १८॥

श्रीमन् यतीन्द्र! तवदिव्यपदाब्जसेवां श्रीशैलनाथकरुणापरिणामदत्ताम् ।
तामन्वहं मम विवर्धय नाथ तस्याः कामं विरुद्धमखिलं च निवर्तयत्वम् ॥ १९॥

विज्ञापनं यदिदमद्य तु मामकीनम्-अङ्गीकुरुष्व यतिराज! दयाम्बुराशे ।
अज्ञोऽयमात्मगुणलेशविवर्जितश्च तस्मादनन्यशरणो भवतीति मत्वा ॥ २०॥

इति यतिकुलधुर्यमेधमानैः श्रुतिमधुरैरुदितै प्रहर्षयन्तम् ।
वरवरमुनिमेव चिन्तयन्ती मतिरियमेति निरत्ययं प्रसादम् ॥ २१॥

इति श्रीयतिराजवीम्शतिः सम्पूर्णा ।




ஶ்ரீ யதிராஜ விம்ஶதி: ॥

ஶ்ரீமதே ராமாநுஜாய நம: ।
ய: ஸ்துதிம் யதிபதிப்ரஸாதி³நீம் வ்யாஜஹார யதிராஜவிம்ஶதிம் ।
தம் ப்ரபந்நஜநசாதகாம்பு³³ம் நௌமி ஸௌம்யவரயோகி³புங்க³வம் ॥

ஶ்ரீ மாதவாங்க்ரி ஜலஜ த்³வய நித்யஸேவா-
ப்ரேமாவிலாஶயபராங்குஶபாத³க்தம் ।
காமாதி³தோ³ஷஹரமாத்மபதா³ஶ்ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா ॥ 1

ஶ்ரீரங்க³ராஜசரணாம்பு³ஜராஜஹம்ஸம்
ஶ்ரீமத்பராங்குஶபாதா³ம்பு³ஜப்ருʼங்க³ராஜம் ।
ஶ்ரீபட்டநாத² பரகாலமுகா²ப்³ஜமித்ரம்
ஶ்ரீவத்ஸசிஹ்நஶரணம் யதிராஜமீடே³2

வாசா யதீந்த்³ர மநஸா வபுஷா ச யுஷ்மத்-
பாதா³ரவிந்த³யுக³ளம் பஜதாம் கு³ரூணாம் ।
கூராதிநாத² குருகேஶமுகா²த்³ய பும்ஸாம்
பாதா³நுசிந்தநபர: ஸததம் பவேயம் ॥ 3

நித்யம் யதீந்த்³ர தவ தி³வ்யவபு:ஸ்ம்ருʼதௌ மே
ஸக்தம் மநோ பவதுவாக்³கு³ணகீர்தநேஸௌ ।
க்ருʼத்யஞ்ச தா³ஸ்யகரணம் து கரத்³வயஸ்ய
வ்ருʼத்த்யந்தரேஸ்து விமுக²ம் கரணத்ரயஞ்ச ॥ 4

அஷ்டாக்ஷராக்²யமநுராஜபத³த்ரயார்த²-
நிஷ்டா²ம் மமாத்ர விதராத்³ய யதீந்த்³ரநாத²
ஶிஷ்டாக்³ரக³ண்யஜநஸேவ்யபவத்பதா³ப்³ஜே
ஹ்ருʼஷ்டாஸ்து நித்யமநுபூய மமாஸ்ய பு³த்³தி:5

அல்பாபி மே ந பவதீ³யபதா³ப்³ஜபக்தி:
ஶப்³தா³தி³போ³ருசிரந்வஹமேததேஹா ।
மத்பாபமேவ ஹி நிதா³நமமுஷ்ய நாந்யத்-
தத்³வாரயார்ய யதிராஜ த³யைகஸிந்தோ6

வ்ருʼத்த்யா பஶுர்நரவபுஸ்த்வஹமீத்³ருஶோபி
ஶ்ருʼத்யாதி³ஸித்³நிகி²லமாத்மகு³ணாஶ்ரயோயம்
இத்யாத³ரேண க்ருʼதிநோபி மித:² ப்ரவக்தும்-
அத்³யாபி வஞ்சநபரோத்ர யதீந்த்³ர வர்தே ॥ 7

து:³கா²வஹோஹமநிஶம் தவ து³ஷ்டசேஷ்ட:
ஶப்³தா³தி³போ³நிரதஶ்ஶரணாக³தாக்²ய: ।
த்வத்பாத³க்த இவ ஶிஷ்டஜநௌகமத்யே
மித்²யா சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க:²8

நித்யம் த்வஹம் பரிபவாமி கு³ரும் ச மந்த்ரம்
தத்³தே³வதாமபி ந கிஞ்சித³ஹோ பி³பேமி ।
இத்த²ம் ஶடோ²ப்யஶட²வத்³வதீ³ய ஸங்கே
ஹ்ருʼஷ்டஶ்சராமி யதிராஜ ததோஸ்மி மூர்க:²9

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோஹஞ்சராமி ஸததம் த்ரிவிதாபசாராந் ।
ஸோஹம் தவாப்ரியகர: ப்ரியக்ருʼத்³வதே³வம்
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்க:²10

பாபே க்ருʼதே யதி³வந்தி பயாநுதாப-
லஜ்ஜா: புந: கரணமஸ்ய கத²ம் கடேத ।
மோஹேந மே ந பவதீஹ பயாதி³லேஶ-
ஸ்தஸ்மாத்புந: புநரகம் யதிராஜ குர்வே ॥ 11

அந்தர்ப³ஹிஸ்ஸகலவஸ்துஷு ஸந்தமீஶம்-
அந்த: புரஸ்ஸ்தி²தமிவாஹமவீக்ஷமாண: ।
கந்த³ர்பவஶ்யஹ்ருʼ³யஸ்ஸததம் பவாமி
ஹந்த த்வத³க்³ரக³மநஸ்ய யதீந்த்³ர நார்ஹ: ॥ 12

தாபத்ரயீஜநிதது:³²நிபாதிநோபி
தே³ஹஸ்தி²தௌ மம ருசிஸ்து ந தந்நிவ்ருʼத்தௌ ।
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத² த்வமேவ ஹர தத்³யதிராஜ ஶீக்ரம் ॥ 13

வாசாமகோ³சர மஹாகு³ண தே³ஶிகாக்³ர்ய
கூராதிநாத² கதி²தாகி²லநைச்யபாத்ரம் ।
ஏஷோஹமேவ ந புநர்ஜக³தீத்³ருʼஶஸ்தத்³-
ராமாநுஜார்ய கருணைவ து மத்³³திஸ்தே ॥ 14


ஶுத்³தாத்மயாமுநகு³ரூத்தம கூரநாத²
ட்டாக்²யதே³ஶிகவரோக்தஸமஸ்தநைச்யம் ।
அத்³யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மாத்³யதீந்த்³ர கருணைவ து மத்³³திஸ்தே ॥ 15

ஶப்³தா³தி³போ³விஷயா ருசிரஸ்மதீ³யா
நஷ்டா பவத்விஹ பவத்³³யயா யதீந்த்³ர ।
த்வத்³தா³ஸதா³ஸக³ணநாசரமாவதௌ ய-
ஸ்தத்³தா³ஸதைகரஸதாவிரதா மமாஸ்து ॥ 16

ஶ்ருத்யக்³ரவேத்³யநிஜதி³வ்யகு³ணஸ்வரூப:
ப்ரத்யக்ஷதாமுபக³தஸ்த்விஹ ரங்க³ராஜ: ।
வஶ்யஸ்ஸதா³வதி தே யதிராஜ தஸ்மாத்-
²க்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் ॥ 17

காலத்ரயேபி கரணத்ரயநிரமிதாதி-
பாபக்ரியஸ்ய ஶரணம் ப³வத்க்ஷமைவ ।
ஸா ச த்வயைவ கமலாரமணேர்தி²தா யத்-
க்ஷேம: ஸ ஏவ ஹி யதீந்த்³ர பவத்ச்²ரிதாநாம் ॥ 18

ஶ்ரீமந் யதீந்த்³ர தவதி³வ்யபதா³ப்³ஜஸேவாம்
ஶ்ரீஶைலநாத²கருணாபரிணாமத³த்தாம் ।
தாமந்வஹம் மம விவர்தய நாத² தஸ்யா:
காமம் விருத்³மகி²லம் ச நிவர்தயத்வம் ॥ 19

விஜ்ஞாபநம் யதி³³மத்³ய து மாமகீநம்-
அங்கீ³குருஷ்வ யதிராஜ த³யாம்பு³ராஶே ।
அஜ்ஞோயமாத்மகு³ணலேஶவிவர்ஜிதஶ்ச
தஸ்மாத³நந்யஶரணோ பவதீதி மத்வா ॥ 20

இதி யதிகுலதுர்யமேதமாநை: ஶ்ருதிமதுரைருதி³தை ப்ரஹர்ஷயந்தம் ।
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாத³ம் ॥ 21

இதி ஶ்ரீயதிராஜவிம்ஶதி: ஸம்பூர்ணம்




ஶ்ரீமதே ராமாநுஜாய நமঃ ।

ஶ்ரீயதிராஜவிம்ஶதி


பதவுரை - ஶ்ரீகாஞ்சீ ஸ்வாமி
கருத்துரைபுத்தூர் ஶ்ரீ..வே.ரகுராமன் ஸ்வாமி

ஸ்துதிம் யதிபதிப்ரஸாிநீம் வ்யாஜஹார யதிராஜவிம்ஶதிம் ।
தம் ப்ரபந்நஜநசாதகாம்ம் நௌமி ஸௌம்யவரயோிபுங்வம் ॥

ய: - யாவரொரு மணவாளமாமுனிகள், யதிபதிப்ரஸாதி³நீம் எம்பெருமானாருடைய திருவுள்ளத்தை உகப்பிக்குமதான, யதிராஜவிம்ஶதிம் ஸ்துதிம் யதிராஜவிம்ஶதி யென்கிற தோத்திரத்தை, வ்யாஜஹாரஅருளிச்செய்தாரோ, ப்ரபந்நஜந சாதக அம்பு³³ம் ப்ரபந்நர்களாகிற சாதகபக்ஷிகளுக்குக் கார்முகில் போன்றவரான, தம்  ஸௌம்யவரயோகி³புங்க³வம்அந்த மணவாளமாமுனிகளை, நௌமிதுதிக்கிறேன்.

ஶ்ரீமாவாங்்ரிஜலஜ ்வயநித்யஸேவா-
ப்ரேமாவிலாஶயபராங்குஶபாদভக்தம் ।
காமாி◌ேদাஷஹரமாத்மபாஶ்ரிதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்்நா ॥ 1
       
ஶ்ரீமாதவ அங்க்ரி ஜலஜத்³வய நித்யஸேவா ப்ரேம ஆவில ஆஶய பராங்குஶ பாத³ க்தம் அழகுபொலிந்த எம்பெருமானது திருவடித்தாமரையிணைகளை நிச்சலும் தொழுகையினாலுண்டான ப்ரேமத்தினால் கலங்கின திருவுள்ளமுடையவரான நம்மாழ்வாருடைய திருவடிகளிலே அன்பு பூண்டவரும், ஆத்ம பத³ ஆஶ்ரிதாநாம்தமது திருவடிகளைப் பணிந்தவர்களுக்கு, காமாதி³ தோ³ஷஹரம்காமம் முதலிய குற்றங்களைக் களைந்தொழிப்பவரும், யதிபதிம் யதிகளுக்குத் தலைவருமான,  ராமாநுஜம்எம்பெருமானாரை, மூர்த்நா ப்ரணமாமி தலையால் வணங்குகின்றேன்.

இதில் முதல் ஶ்லோகத்தால், தொடங்கிய ஸ்தோத்ரம் நன்கு நிறைவேறும் பொருட்டு ஆசார்யாபிவாதநரூபமான மங்களம் செய்யப்படுகிறது. முதல் ஶ்லோகத்தில் எம்பெருமானாருடைய ஜ்ஞாநபூர்த்தியும், இரண்டாவது ஶ்லோகத்தில் அவருடைய அநுஷ்டாநபூர்த்தியும் பேசப்படுகிறது.
முதல் ஶ்லோகத்தில் திருவின்மணாளனான எம்பெருமனுடைய திருவடித்தாமரை யிணையில் செய்யத்தக்க நித்யகைங்கர்யத்தில் உள்ள ப்ரேமத்தினாலே கலங்கின திருவுள்ளத்தையுடையவரான நம்மாழ்வாருடைய திருவடிகளில் மிகுந்த பக்தியை யுடையவரும், தமது திருவடிகளை அடைந்தவர்களுடைய காமம் முதளான தோஷங்களைப் போக்கடிப்பவரும், யதிகளின் தலைவருமான எம்பெருமானாரைத் தலையால் வணங்குகிறேன் என்கிறார்.

ஶ்ரீரங்ராஜ சரணாம்ுஜ ராஜஹம்ஸம்
ஶ்ரீமத்பராங்குஶ பாாம்ுஜ ভৃங்ராஜம் ।
ஶ்ரீட்டநாபரகால மு்ஜமித்ரம்
ஶ்ரீவத்ஸசிஹ்ந ஶரணம் யதிராஜமீ◌ேড ॥ 2

ஶ்ரீரங்க³ராஜ சரண அம்பு³ஜ ராஜஹம்ஸம் - ஶ்ரீரங்கநாதனுடைய திருவடியாகிற தாமரையிலே ராஜஹம்ஸம் போன்று ஊன்றியிருப்பவரும், ஶ்ரீமத் பராங்குஶ பதா³ம்பு³ஜ ப்ருʼங்க³ராஜம்நம்மாழ்வாருடைய அழகிய திருவடித் தாமரைகளிலே வண்டுபோல் அமர்ந்திருப்பவரும், ஶ்ரீபட்டநாத² பரகாலமுக² அப்³ஜமித்ரம்பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் முதலான ஆழ்வார்களாகிற தாமரைப் பூக்களை விகாஸப் படுத்துவதில் ஸூர்யன் போன்றவரும், ஶ்ரீவத்ஸ சிஹ்ந ஶரணம் கூரத்தாழ்வானுக்குத் தஞ்சமாயிருப்பவரும் (அல்லது) கூரத்தாழ்வானைத் திருவடிகளாக வுடையவருமான, யதிராஜம் எம்பெருமானாரை, ஈடே³ - துதிக்கின்றேன்.

இரண்டாவது ஶ்லோகத்தில் பெரியபெருமாளுடைய திருவடித்தாமரைகளில் விளையாடும் உயர்ந்த அன்னப்பறவைபோன்றவரும், நம்மாழ்வாருடைய திருவடித் தாமரைகளில் பொருந்திய வண்டு போன்றவரும், பெரியாழ்வார் மற்றும் பரகாலரான திருமங்கையாழ்வார் ஆகியோரின் முகத்தாமரையை மலரச்செய்யும் ஸூர்யன் போன்றவரும், ஆழ்வானுக்கு உபாயமாக விருப்பவருமான யதிராஜரைத் தொழுகிறேன் என்கிறார். மேலே மூன்று ஶ்லோகங்களாலே ப்ராப்யப்ரார்த்தனை செய்கிறார்.

வாசா யதீந்்ர மநஸா வபுஷா ச யுஷ்மத்-
பாாரவிந்யுலம் ஜதாம் ுரூணாம் ।
கூராிநாகுருகேஶமு்ய பும்ஸாம்
பாாநுசிந்தநபரஸததம் வேயம் ॥ 3

ஹே யதீந்த்³ர! எம்பெருமானாரே!, வாசா மநஸா வபுஷா ச மநோவாக்காயங்க ளாகிற த்ரிகரணங்களாலும், யுஷ்மத் பாதா³ரவிந்த³ யுக³ளம் தேவரீருடைய திருவடித் தாமரையிணையை, ப⁴ஜதாம் ஸேவிப்பவர்களும், கு³ரூணாம் ஆசார்யபீடத்தை யலங்கரிப்பவர்களுமான, கூராதி⁴நாத² குருகேஶ முக² ஆத்³ய பும்ஸாம்கூரத்தாழ்வான் திருக்குருகைப்பிரான் பிள்ளான் முதலான தலைவர்களினுடைய, பாத³ அநுசிந்தந பர: - திருவடிகளையே சிந்திப்பவனாக, ஸததம் ப⁴வேயம் எப்போதும் இருக்கக்கடவேன்.

மூன்றாவது ஶ்லோகத்தில் மனம் மொழி மெய் என்கிற மூன்று கரணங்களாலும் உடையவர் திருவடிகளையே உபாயமாகக் கொண்டிருக்கும் ஆழ்வான், பிள்ளான் முதலான ஆசார்யர்களை இடைவிடாமல் சிந்திக்கக் கடவேன் என்கிறார்.


நித்யம் யதீந்்ர! தவ ிவ்ய வபுஸ்மதௌ மே
ஸக்தம் மநோ வதுவாுணகீர்தநேஸௌ ।
த்யஞ்ச ாஸ்யகரணம் து கர்வயஸ்ய
த்த்யந்தரேஸ்து விமும் கரணத்ரயஞ்ச ॥ 4

யதீந்த்³ எம்பெருமானாரே!, மே மந: - அடியேனுடைய நெஞ்சானது, நித்யம் எப்போதும், தவ தி³வ்யவபுஸ் ஸ்ம்ருʼதௌ தேவரீருடைய திவ்யமங்கள விக்ரஹ த்யானத்திலேயே, ஸக்தம் பவதுஆஸக்தமாகக் கடவது; அஸௌ மே வாக்³ - எனது இந்த வாக்கானது, தவ கு³ண கீர்தநே ஸக்தா பவதுதேவரீருடைய திருக்குணங்களைப் பற்றிப் பேசுவதிலேயே ஊன்றியிருக்கக் கடவது; கரத்³வயஸ்யஇரண்டு கைகளினுடைய, க்ருʼத்யம்செயலானது, தவ தா³ஸ்ய கரணம் பவது தேவரீருக்கு அடிமை செய்வதுதானேயாகக் கடவது; (இவ்வாறாக) கரணத்ரயம் சமநோவாக்காயங்களாகிற மூன்று கரணங்களும், வ்ருʼத்த்யந்தரே விமுக²ம் அஸ்துஇதர வியாபாரங்களை அடியோடு நோக்காதிருக்கக் கடவன.
நான்காவது ஶ்லோகத்தில் தம்முடைய கரணங்கள் மூன்றும் எப்போதும் எம்பெருமானாரிடத்திலேயே ஈடுபட்டிருக்கவேண்டும் என்கிறார். அடியேனுடைய மநஸ்ஸானது எப்பொழுதும் தேவரீருடைய திவ்யமங்களவிக்ரஹத்தை த்யானிப்பதிலேயே ஊன்றியிருக்கவேணும்; வாக்கானது தேவரீரது குணங்களைப் பேசுவதிலேயே ஈடுபட்டிருக்கவேணும்; கைகளிரண்டின் செயல்பாடானது தேவரீருக்கு அடிமை செய்வதிலேயேயாக வேணும். முக்கரணங்களும் மற்றெதிலும் ஈடுபடாதிருக் கக் கடவன.

அஷ்டாக்ஷரா்ய மநுராஜ பத்ரயார்থ-
நிஷ்ாம் மமாத்ர விதரா்ய யதீந்்ரநாথ ।
ஶிஷ்டா்ரண்ய ஜநஸேவ்ய வத்ப்ஜே
ஷ்டாஸ்து நித்யமநுூய மமாஸ்ய ிঃ ॥ 5

நாத² யதீந்த்³எமது குலத்தலைவரான எம்பெருமானாரே!, அஷ்டாக்ஷராக்²திருவஷ்டாக்ஷரமென்கிற, மநுராஜபெரிய திருமந்த்ரத்திலுள்ள, பத³த்ரயப்ரணவ, நம: பத, நாராயண பதங்களில் தேறின, அர்த² - அநந்யார்ஹ சேஷத்வம், அநந்ய சரணத்வம், அநந்ய போக்யத்வ மென்கிற அர்த்தங்களில், நிஷ்டா²ம்திடமான வுறுதியை, மமஅடியேனுக்கு, அத்ரஇவ்விருள்தரு மா ஞாலத்திலேயே, அத்³ருசி பிறந்த விப்போதே, விதரப்ரஸாதித்தருளவேணும். அஸ்ய மம பு³த்³தி⁴: - நீசனேன் நிறையொன்றுமிலேனான வென்னுடைய புத்தியானது, ஶிஷ்டாக்³ரக³ண்ய ஜநஸேவ்ய பவத்பதா³ப்³ஜேசிஷ்டர்களில் தலைவரான ஆழ்வான் ஆண்டான் போல்வார் தொழத் தகுந்த தேவரீருடைய திருவடித் தாமரைகளை, நித்யம் அநுபூஇடைவீடின்றி யநுபவித்து, ஹ்ருʼஷ்டா அஸ்து – (அவ்வநுபவத்தின் பலனான கைங்கர் யத்தையும் பெற்று) மகிழ்ந்திருக்கக் கடவது.

ஐந்தாவது ஶ்லோகத்திலே திருவஷ்டாக்ஷரம் என்னும் திருமந்த்ரத்தின் மூன்று பதங்களாலும் தேறின அநந்யார்ஹஶேஷத்வ அநந்யஶரணத்வ அநந்யபோக்யத்வங்க ளாகிற அர்த்தங்களிலே உறுதியும், ஶிஷ்டர்களில் தலைவரான ஆழ்வான் போல்வாரால் தொழத்தகுந்த தேவரீருடைய திருவடிகளில் இடைவிடாத அநுபவத்தையும் தந்தருளவேணும் என்கிறார்.
        இதற்கு மேல் ஏழு ஶ்லோகங்களாலே போக்கப்படவேண்டியதான அநிஷ்டத்தைக் கூறுகிறார்.

அல்பாபி மே ந ீய ப்ஜ க்தி
ி ◌ேভাগ ருசி ரந்வஹ மேதே ஹா ।
மத்பாபமேவ ஹி நிாநமமுஷ்ய நாந்யத்-
் வாரயார்ய யதிராஜ யைகஸிந்◌ேধা ॥ 6

³யா ஏக ஸிந்தோஅருட்கடலான, யதிராஜ ஆர்யஆசார்யசிகாமணியே!, மேஅடியேனுக்கு, வதீ³ய பதா³ப்³ஜ பக்தி: - தேவரீருடைய திருவடித் தாமரைகளிற் பதிந்த பக்தியானது, அல்ப அபி ந சிறிதளவுமில்லை; (அஃது இல்லாததும் தவிர), ஶப்³தா³தி³ போ³ ருசி: - ஶப்தாதி விஷய போகங்களில் ஊற்றமானது, அந்வஹம் ஏததேநாடோறும் வளர்ந்து செல்லாநின்றது; ஹா அந்தோ! (இதற்கென் செய்வேன்!), அமுஷ்ய நிதா³நம்இதற்கு அடிக்காரணம், மத்பாபம் ஏவ ஹி என்னுடைய பாபமேயன்றோ; அந்யத் ந – வேறொரு காரணமுமில்லை; தத்³ வாரய அந்த எனது பாபத்தைப் போக்கியருளவேணும்.

        ஆறாவது ஶ்லோகத்திலே தாம் ப்ராப்யத்தில் ருசியில்லாதிருக்கிறபடியையும், மற்ற விஷயங்களில் ருசியானது மேன்மேலும் வளருகிறபடியையும் கூறி, இவ்விரண்டிற்கும் காரணமான தனது பாபத்தைப் போக்கியருளவேண்டும் என்கிறார்.

த்த்யா பஶுர் நரவபுஸ் த்வஹமீ்ருஶோபி
த்யாிஸிநிிலமாத்ம ுணாஶ்ரயோயம் ।
இத்யாரேண கதிநோபி மிথঃ ப்ரவக்தும்-
்யாபி வஞ்சநபரோத்ர யதீந்்ர வர்தே ॥ 7

யதீந்த்³எம்பெருமானாரே!, அஹம் துஅடியேனோவென்றால், நரவபு: - மநுஷ்ய சரீரனாயிருந்தேனாகிலும், வ்ருʼத்த்யா பஶு: - செய்கையினால் பசுவோடொத்திரா நின்றேன்; ஈத்³ருஶ: அபிஇப்படிப்பட்டவனாயிருக்கச் செய்தேயும், அயம் ஶ்ருʼதி ஆதி³ ஸித்³நிகி²ல ஆத்ம கு³ண ஆஶ்ரய: இதி – “இவன் வேதம் முதலியவற்றில் தேறின ஸகல ஆத்ம குணங்களுக்கும் கொள்கலமானவன்என்று, க்ருʼதிந: அபி ஆத³ரேண மித²: ப்ரவக்தும்அபிஜ்ஞர்களையும் ஆதரவோடு பரஸ்பரம் பேசுவிக்கும்படி, அத்ர அத்³யாபிஇவ்வுலகில் இன்னமும், வஞ்சநபர: வர்த்தே வஞ்சிக்குமவனாயிரா நின்றேன்.

        ஏழாவது ஶ்லோகத்திலே அடியேன் ஶரீரத்தாலே மனிதனாகவிருந்தாலும், செயலாலே விலங்கைப் போன்றவன். இப்படியிருக்கச் செய்தேயும், ‘எல்லா ஆத்ம குணங்களுக்கும் கொள்கலமானவன் இவன்என்று பெரியோர்களும் பேசும்படியான வஞ்சகன் என்கிறார்.

ঃখாவஹோஹ மநிஶம் தவ ுஷ்டசேஷ்ட
ி◌ேভাগநிரதஶ் ஶரணாதா்யঃ ।
த்வத்பாদভக்த இவ ஶிஷ்டஜநௌ்யே
மி்யா சராமி யதிராஜ ததோஸ்மி மூர்খঃ ॥ 8

யதிராஜஎம்பெருமானாரே!, து³ஷ்ட சேஷ்ட: அஹம் - கெட்ட நடத்தைகளையுடை யேனான நான், ஶப்³தா³தி³ போ³நிரத: - ஶப்தாதி விஷய ப்ரவணனாய், ஶரணாக³த ஆக்²ய: - ப்ரபந்நனென்று பேர் சுமப்பவனாயிருந்துகொண்டு, தவ அநிஶம் து:³கா²வஹஎப்போதும் தேவரீருடைய திருவுள்ளத்தைப் புண்படுத்துமவனாய், ஶிஷ்டஜந ஓகமத்யேசிஷ்டர்களின் திரளினிடையே, த்வத்பாத³க்த: இவதேவரீருடைய திருவடிகளுக்கு அன்பன் போல, மித்²யா சராமிக்ருத்ரிமமாகத் திரியா நின்றேன்; தத: மூர்க:² அஸ்மிஆகையினால் மூர்க்கனாயிரா நின்றேன்.

எட்டாவது ஶ்லோகத்திலே அடியேன் கெட்டசெயல்களையே செய்பவனாய், ஶப்தம் முதலிய விஷயங்களின் அநுபவத்தில் ஈடுபட்ட மனத்தையுடையனாய், ஶரணாகதன் என்ற பெயரை மட்டும் சுமப்பவனாயிருந்துகொண்டு, எப்பொழுதும் தேவரீர் திருவுள்ளம் புண்படும்படி துக்கத்தை உண்டுபண்ணுமவனாய், தேவரீர் திருவடிகளில் ஈடுபட்டவன் போல் ஶிஷ்டர்களின் கோஷ்டியில் பொய்யாகத் திரிந்தேனாதலால் மூர்க்கனாகவிருக்கிறேன் என்கிறார்.

நித்யம் த்வஹம் பரிவாமி ுரும் ச மந்த்ரம்
்◌ேவதாமபி ந கிஞ்சிஹோ বি◌ேமி ।
இத்ம் ஶ◌ேঠাঽப்யஶீய ஸங்ঘে
ஷ்டஶ்சராமி யதிராஜ ததோஸ்மி மூர்খঃ ॥ 9

யதிராஜஎம்பெருமானாரே!, அஹம் துஅடியேனோவென்றால், கு³ரும் மந்த்ரம் தத்³ தே³வதாம் ச ஆசார்யனையும் மந்த்ரத்தையும் அதற்குள்ளீடான தேவதையையும், நித்யம் பரிபவாமி நித்யமும் பரிபவிக்கின்றேன், கிஞ்சித்³ அபி பி³பேமி ஈஷத்தும் அஞ்சுகிறேனில்லை; அஹோஅந்தோ!, இத்த²ம் ஶட² அபிஇங்ஙனம் போட்கனா யிருந்தேனாகிலும், அஶட²வத்³ - குருமந்த்ர தேவதா விஶ்வாஸ யுக்தன் போல, வதீ³ய ஸங்கே - தேவரீரடியார் திரளிலே, த்ருʼஷ்ட: சராமி துணிவுடையேனாய்த் திரிகின்றேன், தத: மூர்க²: அஸ்மி ஆதலால் மூர்க்கனாயிரா நின்றேன்.

ஒன்பதாவது ஶ்லோகத்திலே எந்நாளும் கொண்டாடத்தக்க ஆசார்யனையும், அவருபதேஶித்த மந்த்ரத்தையும், அம்மந்த்ரத்தின் பொருளான தேவதையையும் நித்யம் அவமதித்து சிறிதளவும் பயமில்லாமல், தேவரீர் திருவுள்ளத்திற்கு உகப்பானவற்றையே செய்பவன் போலே தேவரீருடைய அடியார்கள் திரளிலே புகுந்து, ‘இவர்களை வஞ்சித்து விட்டோமேஎன்று மகிழ்ச்சியோடு திரிகிறேன் என்கிறார்.

ஹா ஹந்த ஹந்த மநஸா க்ரியயா ச வாசா
யோஹஞ் சராமி ஸததம் த்ரிவிாபசாராந் ।
ஸோஹம் தவாப்ரியகரப்ரியகৃদ்வ◌ேவம்
காலம் நயாமி யதிராஜ ததோஸ்மி மூர்খঃ ॥ 10

யதிராஜஎம்பெருமானாரே!, : அஹம்யாவனொரு அடியேன், ஸததம்எப்போதும்,
மநஸா வாசா க்ரியயா ச மனமொழிமெய்களகிற முக்கரணங்களாலும், த்ரிவிதஅபசாராந்மூவகைப்பட்ட அபசாரங்களையும், சராமிசெய்கின்றேனோ, ஸ அஹம்அப்படிப்பட்ட நான், தவ அப்ரியகர: - தேவரீருக்கு அப்ரியங்களையே செய்து போருமவனாய்க் கொண்டு, ப்ரியக்ருʼத்³வத்³ - ப்ரியத்தையே செய்பவன்போல நின்று, ஏவம் காலம் நயாமிஇப்படியே காலத்தைக் கழிக்கின்றேன்; தத: மூர்க²: அஸ்மிஆதலால் மூர்க்கனாயிரா நின்றேன், ஹா ஹந்த ஹந்த என்ன கொடுமை!

பத்தாவது ஶ்லோகத்திலே மூன்று கரணங்களாலும் மூன்றுவிதமான அபசாரங்களைச் செய்துகொண்டு, தேவரீருக்கும் விருப்பமல்லாதவற்றையே செய்துகொண்டிருந்தாலும் தேவரீர் விரும்பக்கூடிய செயல்களையே செய்பவன் போல தேவரீருடைய அடியார்களை ஏமாற்றியதோடல்லாமல், தேவரீரையும் ஏமாற்றினேன் மூர்க்கனான அடியேன் என்கிறார்.

பாபே கதே யி வந்தி யாநுதாப-
லஜ்ஜாபுநகரணமஸ்ய கம் டேத ।
மோஹேந மே ந வதீஹ யாிலேஶஸ்
தஸ்மாத்புநபுநரம் யதிராஜ குர்வே ॥ 11

யதிராஜஎம்பெருமானாரே!, பாபே க்ருʼதே ஸதி³பாவம் செய்தால், ய அநுதாப லஜ்ஜா: - அச்சமும் அநுதாபமும் வெட்கமும், வந்தி யதி³உண்டாகுமேயானால், அஸ்ய புந: கரணம் கத²ம் கடேத மறுபடியும் பாவம் செய்கை எப்படி நேரிடும், மே - எனக்கோவென்றால், இஹஇந்த பாப கரணத்தில், மோஹேந அஜ்ஞாநத்தினால், யாதி³லேஶ: ந பவதிஅச்சமும் அநுதாபமும் வெட்கமுமாகிற விவை சிறிது முண்டாவதில்லை; தஸ்மாத்ஆதலால், அகம் புந: புந: குர்வேபாபத்தை அடுத்தடுத்துச் செய்து போராநின்றேன்.

பதினோராவது ஶ்லோகத்திலே பாபகார்யத்தைச் செய்தால் தண்டனை கிடைக்குமே என்ற பயமும், நான் இத்தகைய செயலைச் செய்யலாமோ வென்கிற அநுதாபமும், இப்படிப் பாபம்புரிந்த நாம் பெரியோர்களின் திருமுன்பே எப்படிச்செல்வது என்கிற வெட்கமும் ஏற்பட்டால் மறுபடியும் பாபமிழைக்க நேராது; ஆனால் அடியேனோவென்றால் அறியாமையால் பயம், அநுதாபம், வெட்கம் ஆகிய இவை சிறிதுமில்லாமல் மீண்டும் மீண்டும் பாவச்செயல்களையே செய்கிறேன் என்கிறார்.

அந்தர் ஹிஸ் ஸகலவஸ்துஷு ஸந்தமீஶம்-
அந்ধঃ புரஸ்ஸ்ிதமிவாஹமவீக்ஷமாணঃ ।
கந்ர்பவஶ்யஹৃদயஸ்ஸததம் வாமி
ஹந்த த்வদগ்ரமநஸ்ய யதீந்்ர நார்ஹঃ ॥ 12

யதீந்த்³எம்பெருமானாரே!, ஸகல வஸ்துஷுஎல்லாப் பொருள்களிலும், அந்த: ³ஹி: - உள்ளோடு புறம்போடு வாசியற எங்கும், ஸந்தம் ஈஶம்வியாபித்து நிற்கிற எம்பெருமானை, அந்த: புர: ஸ்தி²தம் இவபிறவிக்குருடன் முன்னேயிரா நின்ற பொருளைக் காணமாட்டாதவாறுபோல, அவீக்ஷமாண: அஹம்காணகில்லாதவனான அடியேன், ஸததம் கந்த³ர்ப்ப வஶ்ய ஹ்ருʼ³: வாமிஎப்போதும் காமபரவச மநஸ்கனாயிரா நின்றேன்; ஹந்தஅந்தோ! (ஆதலால்), த்வத்³ அக்³ர க³மநஸ்ய ந அர்ஹ: - தேவரீர் திருமுன்பே வருகைக்கும் அர்ஹதையுடையேனல்லேன்.

பன்னிரண்டாவது ஶ்லோகத்திலே பிறவிக்குருடன் கண்முன்னேயுள்ள பொருளைக் காணாதது போலே எல்லாப்பொருள்களின் உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்துள்ள எம்பெருமானைக் காணாதவனாய், காமபரவசனாய் (மற்ற பயங்களையே விரும்பும் மனத்தை யுடையவனாய்) இருக்கிறேனாதலால் தேவரீர் திருமுன்பே வருவதற்கும் தகுதியற்றவனாய் உள்ளேன் என்கிறார்.

தாபத்ரயீஜநித ঃখநிபாதிநோபி
◌ேஹஸ்ிதௌ மம ருசிஸ்து ந தந்நிவத்தௌ ।
ஏதஸ்ய காரணமஹோ மம பாபமேவ
நாத்வமேவ ஹர த்யதிராஜ ஶீ்ரம் ॥ 13

யதிராஜஎம்பெருமானாரே!, தாபத்ரயீ ஜநித து:³² நிபாதிந: அபிதாபத்ரயத்தாலு முண்டு பண்ணப்பட்ட துக்கங்களிலே வீழ்ந்து கிடக்கச் செய்தேயும், மமஎனக்கு, ருசிஸ் து அபிலாஷமோவென்றால், தே³ஹஸ்தி²தௌது:க்காஸ்பதமான சரீரத்தைப் பேணுமையிலேயாம்; தத் நிவ்ருʼத்தௌ நஅந்த தேஹத்தைத் தவிர்த்துக்கொள்வதில் ருசியுண்டாவதில்லை, ஏதஸ்ய காரணம் மம பாபமேவஇப்படிப்பட்ட நிலைமைக்குக் காரணம் எனது பாவமேயாம், அஹோ நாத² - அந்தோ!; ஸ்வாமிந்!, தத்³ த்வமேவ ஶீக்ரம் ஹர அந்த பாபத்தை தேவரீரே கடுகப் போக்கவேணும்.

உள்ளும் புறமும் ஸகல பதார்த்தங்களிலுமுறைகின்ற எம்பெருமானைக் காண்கிலீராகிலும் ஹேய விஷயங்களின் தோஷங்களை ப்ரத்யக்ஷமாகக் காண்கிறீரன்றோ; காணவே அவற்றில் ஜிஹாஸை பிறந்ததில்லையோ? என்ன; துன்பங்களையும் இன்பமாக நினைக்கும்படியன்றோ என்னுடைய நிலைமையுள்ளது? இதுக்கடி என்னுடைய ப்ரபல பாபமேயாயிற்று. அதைத் தேவரீர் தாமே களைந்தருள வேணுமென்று பிரார்த்திக்கிறார்.

பதிமூன்றாவது ஶ்லோகத்திலே மூன்றுவிதமான தாபங்களினால் ஏற்பட்ட துக்கத்திலே அழுந்தியிருந்தபோதிலும், அடியேனுக்கு துக்கத்திற்கு இருப்பிடமான ஶரீரத்தைப் பேணுவதிலேயே ஆசையானது வளர்ந்துவருகின்றது; ஶரீரத்தைப் போக்கிக்கொள்வதில் விருப்பமுண்டாகவில்லை. இதற்கு அடியேனது பாபமே காரணமாகையால் ஸ்வாமியான தேவரீரே விரைவில் அந்தப் பாபத்தைப் போக்கியருளவேணுமென்கிறார்.

வாசாம◌ேগাசர மஹாுண ◌ேஶிகா்ர்ய
கூராிநாிதாঽখிலநைச்யபாத்ரம் ।
ஏஷோஹமேவ ந புநர் ஜதீদৃஶஸ் த்-
ராமாநுஜார்ய கருணைவ து மதிஸ்தே ॥ 14

ஆர்ய ராமாநுஜஎம்பெருமானாரே!, வாசாம் அகோ³சர மஹாகு³ண தே³ஶிக அக்³ர்ய
கூராதிநாத² கதி²த அகி²ல நைச்ய பாத்ரம் வாய்க்கு நிலமல்லாத நற்குணங்களை யுடைய ஆசார்யஶ்ரேஷ்டரான கூரத்தாழ்வான் அநுஸந்தித்த ஸமஸ்த நைச்யங்க ளுக்கும் பாத்ரமாயிருப்பவன், ஜக³திஇவ்வுலகில், ஏஷ: அஹம் ஏவஇந்த அடியேன் ஒருவனேயாவன்; ஈத்³ருʼ: புந: இப்படிப்பட்ட தோஷத்தையுடையான் வேறொருவனில்லை, (ஆதலால்) தே கருணா துதேவரீருடைய திருவருளோவென்றால்,  மத்³³தி: ஏவஎன்னையே கதியாகவுடையது.

பதினான்காவது ஶ்லோகத்திலே வாயால் இவ்வளவென்று அளவிட்டுச் சொல்ல வொண்ணாத நற்குணங்களை உடையவராய், ஆசார்யர்களின் தலைவராயுள்ள கூரத்தாழ்வானால் அருளிச்செய்யப்பட்ட எல்லாத்தாழ்வுகளுக்கும் கொள்கலமாக விருப்பவன் இவ்வுலகில் அடியேன் ஒருவனேயன்றி வேறொருவரில்லையாதலாலே தேவரீருடைய க்ருபையே அடியேனுக்குப் புகலிடம் என்கிறார்.

ஶுாத்மயாமுந ுரூத்தம கூரநா
ட்டா்ய ◌ேஶிகவரோக்த ஸமஸ்தநைச்யம் ।
்யாஸ்த்யஸங்குசிதமேவ மயீஹ லோகே
தஸ்மா்யதீந்்ர கருணைவ து மதிஸ் தே ॥ 15

யதீந்த்³எம்பெருமானாரே!, ஶுத்³தாத்ம யாமுந கு³ரூத்தம கூரநாத² ட்டாக்²ய தே³ஶிக வர உக்த ஸமஸ்த நைச்யம்பரம பவித்திரரான ஆளவந்தார் ஆழ்வான் பட்டர் என்னுமிந்த ஆசார்ய சிகாமணிகள் அநுஸந்தித்துக் கொண்ட ஸகலவிதமான தாழ்வும், இஹ லோகேஇவ்வுலகின்கண், அத்³இக்காலத்தில், மயி ஏவஎன்னிடத்திலேயே, அஸங்குசிதம் அஸ்திகுறையுறாது நிரம்பியிருக்கின்றது, தஸ்மாத்³ - ஆதலால், தே கருணா ஏவ து மத்³³தி: - தேவரீருடைய திருவருளே எனக்குப் புகல் (அல்லது) தேவரீருடைய திருவருள் என்னையே புகலாகவுடையது.

பதினைந்தாவது ஶ்லோகத்திலே தூய்மையான மனத்தையுடையவர்களான ஆளவந்தாராலேயும், ஆசார்யகளில் தலைவரான ஆழ்வானாலேயும், ஆசார்ய ஶ்ரேஷ்டரான பராஶரபட்டராலேயும் தம்முடைய ஸ்தோத்ரங்களிலே சொல்லப்பட்ட எல்லாவிதமான தாழ்வுகளும் இவ்வுலகிலே இக்காலத்திலே அடியேனிடத்திலேயே குறைவில்லாமல் இருக்கின்றதாதலாலே அடியேனுக்குப் புகலிடம் தேவரீருடைய கருணையொழிய மற்றொன்றில்லை என்கிறார்.

ி◌ேভাগவிஷயா ருசிரஸ்மீயா
நஷ்டா வத்விஹ யயா யதீந்்ர ।
த்வாஸாஸணநா சரமாவ◌ெள யஸ்
ாஸதைகரஸதா அவிரதா மமாஸ்து ॥ 16

யதீந்த்³!எம்பெருமானாரே!, அஸ்மதீ³யாஎம்முடையதான, ஶப்³தா³தி³ போ³ விஷயா ருசி: - ஶ்ப்தாதி விஷயங்களை யநுபவிக்க வேணுமென்பது பற்றியுண்டான அபிநிவேசமானது,  வத்³ ³யயாதேவரீருடைய திருவருளாலே, நஷ்டா பவதுதொலைந்ததாகக் கடவது; : - யாவரொருவர், த்வத்³ தா³ஸ தா³ஸ க³ணநா சரம அவதௌ - தேவரீருடைய பக்த பக்தர்களை எண்ணிக்கொண்டு போமளவில் சரம பர்வத்திலே நிற்கிறாரோ, தத்³ தா³ஸதைக ரஸதாஅவர்க்கு அடிமைப்பட்டிருப்ப தொன்றிலேயே ப்ராவண்யமானது, மம அவிரதா அஸ்துஎனக்கு அவிச்சிந்நமாக நடைபெற வேணும்.

பதினாறாவது ஶ்லோகத்திலே ஶப்தாதிவிஷயங்களை அநுபவிக்கவேண்டுமென்கிற அடியேனுடைய ருசியானது தேவரீருடைய திருவருளாலே அடியோடழியக்கடவது; யாரொருவர் தேவரீரோடு ஸம்பந்தமுடையவர்களின் எண்ணிக்கையில் எல்லையிலி ருக்கிறரோ, அவருக்கு அடிமைப்பட்டிருப்பதிலேயே அடியேனுக்கு இடைவிடாத ஈடுபாடு இருக்கவேண்டுமென்கிறார்.

ஶ்ருத்ய்ர வே்ய நிஜிவ்யுண ஸ்வரூப
ப்ரத்யக்ஷதாமுபதஸ் த்விஹ ரங்ராஜঃ ।
வஶ்யஸ் ஸவதி தே யதிராஜ தஸ்மாத்-
க்தஸ் ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் ॥ 17
யதிராஜஎம்பெருமானாரே!, ஶ்ருத்யக்³ர வேத்³ய நிஜ தி³வ்யகு³ண ஸ்வரூப: - வேதாந்தங்களில் கேட்டறிய வேண்டும்படியான தன்னுடைய குணஸ்வரூபாதிகளை யுடையனாய், இஹதன்வாசியறிந்து ஈடுபடுவாரில்லாத இந்த ஸம்ஸாரமண்டலத் திலே, ப்ரத்யக்ஷதாம் உபக³: - எல்லார்க்கும் கண்ணெதிரே காட்சி தந்தருள்கின்ற, ரங்க³ராஜ: - ஶ்ரீரங்கநாதன், தேதேவரீருக்கு, ஸதா³ எப்போதும், வஶ்ய:வதிவிதேயனாயிரா நின்றான்; தஸ்மாத்ஆதலால், ஸ்வகீய ஜந பாப விமோசநேதம்மடியார்களின் பாவங்களைத் தொலைத்தருள்வதில், த்வம் ச²க்த: - தேவரீர் சக்தி யுடையராயிரா நின்றீர்.

பதினேழாவது ஶ்லோகத்திலே உபநிஷத்துக்களாலே அறியத்தக்கவைகளான தன் கல்யாணகுணங்களையும், திவ்யமங்கள ஸ்வரூபத்தையுமுடையனான எம்பெருமான் அனைவரும் கண்ணாலேயே கண்டுபற்றலாம்படி திருவரங்கத்திலே பெரியபெருமாளாக எழுந்தருளி, எல்லாக்காலமும் தேவரீருக்கு வசப்பட்டவனாயிருக்கையாலே, உம்மடியார்களின் பேற்றுக்குத் தடையான பாபங்களைப் போக்குவதில் தேவரீர் ஸமர்த்தரன்றோ வென்கிறார்.

காலத்ரயேபி கரணத்ரய நிர்மிதாதி-
பாபக்ரியஸ்ய ஶரணம் ভগவத்க்ஷமைவ ।
ஸா ச த்வயைவ கமலாரமணேர்ிதா யத்-
க்ஷேமஸ் ஸ ஏவ ஹி யதீந்்ர வத்்ரிதாநாம் ॥ 18

யதீந்த்³எம்பெருமானாரே!, காலத்ரயே அபிவருங்காலம் நிகழ்காலம் கழிகால மென்கிற மூன்று காலங்களிலும், கரணத்ரய நிர்மித அதி பாபக்ரியஸ்யமன மொழி மெய்களாகிற மூன்று கரணங்களினாலும் கோர பாபங்களைச் செய்தவனுக்கு, ³வத் க்ஷமா ஏவஎம்பெருமானது பொறுமையொன்றே, ஶரணம் புகல், ஸா ச அந்த க்ஷமைதானும், த்வயா ஏவ தேவரீராலேயே, கமலாரமணேநம்பெருமாள் பக்கலிலே, அர்தி²தா இதியத் – ப்ரார்த்திக்கப்பட்டதென்பது யாதொன்று, : ஏவ ஹிஅந்த ப்ரார்த்தனை தானே, வத் ச்²ரிதாநாம்தேவரீரை யடிபணிந்தவர்களுக்கு, க்ஷேம: - க்ஷேமமாவது.

பதினெட்டாவது ஶ்லோகத்திலே நிகழ்காலம் வருங்காலம் கழிகாலம் என்கிற மூன்று காலங்களிலும், மனம் மொழி மெய் என்கிற மூன்று கரணங்களினாலும், ப்ராயஶ்சித்தத்தாலும் அநுபவத்தாலும் போக்கவொண்ணாத அளவிறந்த பாபங்களைச் செய்தவனுக்கு எம்பெருமானுடைய பொறுமை மட்டுமே தஞ்சமாகும். அந்தப் பொறுமையானது தேவரீரால் பெரியபிராட்டிகு இனியவனான எம்பெருமானிடத்திலே ப்ரார்த்திக்கப்பட்டது என்பது யாதொன்றென்றுண்டோ அதுவே தேவரீருடைய அடியார்களுக்கு பாதுகாப்பாகும் என்கிறார்.


ஶ்ரீமந் யதீந்்ர தவ ிவ்யப்ஜஸேவாம்
ஶ்ரீஶைலநாகருணாபரிணாமத்தாம் ।
தாமந்வஹம் மம விவர்ய நாதஸ்யா
காமம் விருிலஞ்ச நிவர்த்தய த்வம் ॥ 19

நாத² - எமக்குத் தலைவரான, ஶ்ரீமந் யதீந்த்³ - ஶ்ரீராமாநுஜரே!, ஶ்ரீஶைலநாத² கருணா பரிணாம த³த்தாம் – (அஸ்மதாசார்யரான) திருமலையாழ்வாருடைய  திருவருள் மிகுதியினால் அளிக்கப்பட்ட, தாம் அப்படிப்பட்ட, தவ தி³வ்ய பதா³ப்³ஜ ஸேவாம்தேவரீருடைய பாதாரவிந்த ஸேவையை, அந்வஹம் நாடோறும், மம விவர்த அடியேனுக்கு வளரச்செய்தருளவேணும்; தஸ்யா: விருத்³ம்அந்த பவதீய பாதாரவிந்த ஸேவைக்கு எதிரிடையான, அகி²லம் ச காமம்எல்லா விருப்பங்களையும், த்வம் நிவர்தயத்வம்தேவரீர் தவிர்த்தருளவேணும்.

பத்தொன்பதாம் ஶ்லோகத்திலே புலன்களை வென்றவர்களுக்குத் தலைவரான ஸ்வாமி எம்பெருமானாரே! திருமலையாழ்வாரென்கிற திருவாய்மொழிப்பிள்ளை தம்முடைய மிகுந்த கருணையினால் அளித்த தேவரீருடைய திருவடித்தாமரைகளில் கைங்கர்யத்தை எல்லாக்காலத்திலும் அடியார்களளவிலும் வளர்ந்தருள வேணும்; அக்கைங்கர்யத்திற்குப் புறம்பான ஶப்தாதிவிஷயங்களிலுள்ள ஈடுபாட்டை அடியோடு அழித்தருளவேணும் என்கிறார்.

விஜ்ஞாபநம் யி்ய து மாமகீநம்-
அங்ீகுருஷ்வ யதிராஜ யாம்ுராஶே ।
அஜ்ஞோயமாத்முணலேஶவிவர்ஜிதஶ் ச
தஸ்மாநந்யஶரணோ வதீதி மத்வா ॥ 20

³யா அம்பு³ராஶே! கருணைக்கடலான, யதிராஜ!எம்பெருமானாரே!, அயம் – (அடியேனாகிற) இவன், அஜ்ஞ: - (தத்வஹித புருஷார்த்தங்களில்) அறிவில்லாதவன், ஆத்ம கு³ணலேஶ விவர்ஜிதஶ்ச ஆத்ம குணங்கள் சிறிதுமில்லாதவன்; தஸ்மாத்ஆகையினாலே, அநந்யஶரண:வதிநம்மைத் தவிர்த்து வேறு புகலற்றவன், இதி மத்வாஎன்று திருவுள்ளம் பற்றி, அத்³ய மாமகீநம் யத் து விஜ்ஞாபநம் தத் அங்கீ³ குருஷ்வ இப்போது அடியேனுடையதான விண்ணப்பம் யாதொன்றுண்டோ அதனைத் தலைக்கட்டியருள்வதாக ஏற்றுக்கொள்ள வேணும்.

இருபதாவது ஶ்லோகத்தில் கருணைக்கடலான எம்பெருமானாரே! ‘இவன் ஶாஸ்த்ர ஜ்ஞாநமும் ஆத்மகுணங்களும் சிறிதுமில்லாதவனாகையாலே நம்மையொழிய மற்றொரு புகலிடமில்லாதவன்என்று திருவுள்ளம் பற்றி இக்காலத்திலே அடியேனு டையதான இந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டருள வேணும் (அப்படியே செய்கிறோம் என்று திருவுள்ளம் பற்றியருளவேணும்).

இதி யதிகுலுர்யமேமாநைஶ்ருதிமுரைருிதை ப்ரஹர்ஷயந்தம் ।
வரவரமுநிமேவ சிந்தயந்தீ மதிரியமேதி நிரத்யயம் ப்ரஸாம் ॥ 21

இதி ஶ்ரீயதிராஜவிம்ஶதிஸம்பூர்ணம்

No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...