Saturday, 17 November 2018

திருப்பாவை ஸாரம்


ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

திருப்பாவை ஸாரம்
எண்
பாசுரம்
ஸாரம்
1
மார்கழித்திங்கள்
ப்ராப்ய ப்ராபக ஸங்க்ரஹம் (அதிகாரிஸ்வரூபம்)
(பகவத்ஸம்ஶ்லேஷமே ப்ராப்யம்; அநந்யஸாத்யமான இதுக்கு ஸாதநமும் அவனே. அந்த ஸாதநத்திலே அந்வயிக்கைக்கு அதிகாரிகளும் அந்த ப்ராப்யத்தில் இச்சையுடை யவர்களே.) பரத்வம் – உபயவிபூதியோகம்.
2
வையத்து வாழ்வீர்காள்
க்ருத்யாக்ருத்ய விவேகம் (அதிகாரிநிஷ்டாக்ரமம்)
(குர்வத்ரூபமான [ப்ரவ்ருத்திஶீலங்களான] கரணங்களுக்கு வகுத்த வ்யாபார விஷயங்களைக் காட்டிக்கொடுக்க வேண்டுகையாலும், காலக்ஷேபத்துக்காகவும், ராகப்ரேரிதமாக அநுஷ்டேயமான கர்த்தவ்யம்) 
வ்யூஹம் – பாற்கடலுள்பையத்துயின்றபரமன்
3
ஓங்கி உலகளந்த
அபிமத ஸித்தி(ஆசார்யர்களின் ஸம்பத்து பரிபூர்ணம்.)
[பகவதநுபவ ஸஹகாரிகள்பக்கல் உபகாரஸ்ம்ருத்யதிஶயத்தாலே அவர்களுக்கு அபேக்ஷிதங்கள் யாவை, அந்த ஸம்ருத்திகளடைய அபேக்ஷிக்கக்கடவது.]
விபவம் – ஸ்ரீவாமனன் (க்ருதயுகம்)
4
ஆழிமழைக்கண்ணா
அதிகாரி உத்கர்ஷம்பாகவத ப்ரபாவம்
[தேவதாந்தரஸ்பர்ஶ ரஹிதராய், இப்படி அநந்யப்ரயோஜநராய், பகவதேக ப்ரவணராய், பகவதநுபவோபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும்.] (பகவத்பாகவத இஷ்டத்வேந நித்யநைமித்திகாதி தர்மங்களை யதாவாக அநுஷ்டிக்கை, ப்ரபந்நாதிகாரிகளுக்கு ஆவஶ்யகம்.)
விபவம் – சக்ரவர்த்தித்திருமகன் (த்ரேதாயுகம்)
5
மாயனை மன்னு
வித்யா ப்ரபாவம்
(பகவதநுபவத்திலிழிந்தவர்களுக்கு வரும் அநுபவவிரோதிகளை அவ்வநுபவம்தானே நிரோதிக்குமென்னுமிடம்)
விபவம் – ஸ்ரீக்ருஷ்ணன் (த்வாபரயுகம்)
இப்படி கீழ் அஞ்சுபாட்டாலே ப்ராப்யமான க்ருஷ்ணாநுபவத்துக்கு ஏகாந்தமான உபகரணங்களைச்சொல்லி, அநந்தரம் மேல்பத்துப்பாட்டாலே அந்த உபகரணங்களைக்கொண்டு அநுபவிக்குமவர்களை எழுப்புகிறது.
6
புள்ளும் சிலம்பின
அர்ச்சாவதாரம். பிள்ளாயெழுந்திராய் – பொய்கையாழ்வார்
(க்ருஷ்ணஸம்ஶ்லேஷத்தில் புதியாளொருத்தியை [தத்விஷயத்திலும் ததீயவிஷயம் நன்றென்றறியாதவளை] எழுப்புகிறார்கள்.)
பகவதேகபோகரான ஸ்ரீவைஷ்ணவர்கள் அநந்யப்ரயோஜநராய் இவ்விஷயத்தில் தேஶிகரன்றிக்கே இருக்கிறவர்களை, அவர்களிடத்தில் பரிவாலே தேஶிகராக்குகை தங்களுக்கு க்ருத்யம் என்றிருக்கையாகிற ஸ்ரீவைஷ்ணவத்வ ஸ்வபாவம்.
7
கீசுகீசென்றெங்கும்
ஶேஷத்வம். பேய்ப்பெண்-பேயாழ்வார்
(பகவத்விஷயத்திலும், பாகவதவிஷயம் நன்று என்று தெரிந்தும் மறந்திருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பகவத்விஷயத்திலே ஜ்ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள்படியாலே ‘போதயந்த: பரஸ்பரம்’ பண்ணி ஸ்ம்ருதிவிஷயமாம்படி அறிவிக்கை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு  ஸ்வபாவம்.
8
கீழ்வானம் வெள்ளென்று
பாகவத பாரதந்த்ர்யம். கோதுகலமுடையாய்-பூதத்தாழ்வார்
(பாகவதஶேஷத்வபர்யந்தமான பகவச்சேஷத்வமுடையளாகையாலே பகவதபிமதரா னவரை (க்ருஷ்ணனுக்கு வேண்டற்பாடுடை [வால்லப்யம்] யளாயிருப்பாளொருத்தியை) எழுப்புகிறார்கள்.)
பகவத்விஷயத்தில் ப்ரத்யாஸந்நராயிருப்பார் திறத்தில் ஸாபேக்ஷரா யிருக்கையும், அவர்களை முன்னிட்டு ஈஶ்வரனைக் கிட்டுகையும் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம்.
9
தூமணிமாடத்து
பகவத் பாரதந்த்ர்யம். மாமான்மகள்-திருமழிசையாழ்வார்.
(க்ருஷ்ணன் வந்தபோது வருகிறான் என்றிருக்குமவளையெழுப்புகிறார்கள்.)
“தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்று பூர்வார்நிஷ்ராயிருப்பாரை, ভগவத் ப்ரேமாதிஶயத்தாலே தদেভোগராயிருக்குமவர்கள் ভোগাர்மாக ப்ரேரிக்கை.
ஸ்வார்ப்ரவ்ருத்தி ஸாமாந்யமும் உபாயவிரோதி; பரார்ப்ரவ்ருத்தி ஸாமாந்யமும் உபாயலமாயும், உபாயாநுகூலமாயுமிருக்குமென்று அறிவித்து, உபாயாধ্যவஸாய நிஷ்டரை எழுப்பீரோ!
10
நோற்றுச்சுவர்க்கம்
ஸித்த தர்மம். அம்மனாய்-குலஶேகராழ்வார்.
(க்ருஷ்ணஸம்ஶ்லேஷத்தில் விதগ্ধৈயாயிருப்பாளை எழுப்புகிறார்கள்.)
உபாயநிஷ்டரை எழுப்புதல். “தேற்றமாய் வந்துதிற” – லோகர்ஹை வாராமல் லௌகிகாநுவர்த்தநம் கார்யமென்றதாய்த்து.
ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்” என்றும், “அஹம் ஸ ச மம ப்ரிய:” என்றும் அவன் பக்ஷபதித்திருப்பார்திறத்தில் நித்யஸாபேக்ஷராயிருக்கை ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம்.
11
கற்றுக்கறவை
அனுஷ்டானம்ஸாமாந்ய தர்மம். கோவலர்தம் பொற்கொடியே-பெரியாழ்வார்.
(எல்லாவற்றாலும் க்ருஷ்ணனுக்கு ஒப்பான ஆபிஜாதையாயிருப்பா ளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
கற்றுக்கறவை கணங்கள் பலகறந்து குற்றமொன்றில்லாத – ஜாத்யுசிதமான ர்மத்தை ஸாবুদ্ধ্যাவன்றிக்கே கைங்கர்யবুদ্ধ্যা வநுஷ்டித்தால் குற்றமில்லை. [பகவத்ஸம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆசார்ய ஸந்தாநப்ரஸூதர் நமக்குப் பூஜ்யர். அவர்களடியாக பகவத்ஸமாஶ்ரயணம் பண்ணுகை ஸ்வரூபம்.]
12
கனைத்திளம்
அநனுஷ்டானம் - விஶேஷ தர்மம். நற்செல்வன் தங்காய் - தொண்டரடிப்பொடியாழ்வார்.
(க்ருஷ்ணனைப்பிரியாதே இளையபெருமாளைப் போலேயிருப்பானொருவன் தங்கையாகை யாலே ஶ்லாக்யையாயிருப்பா ளொருத்தியை யெழுப்புகிறார்கள்.)
அநுஜ்ஞாகைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஜ்ஞா கைங்கர்ய ஹாநி ஸ்வரூபவிரோத மன்றென்கிறது. பகவத் விஶ்லேஷம் அஸஹ்யமாம்படி அவகாஹித்தவர்கள் தங்களுக்கு ஸ்ரீவைஷ்ணவர்கள் உத்தேஶ்யராமளவன்றிக்கே தத்ஸம்பந்தி ஸம்பந்திகளும் உத்தேஶ்யரென்றிருக்கை ஸ்வரூபம்.
13
புள்ளின் வாய்
அஹங்கார மமகாரங்கள் ஒழிதல். போதரிக்கண்ணினாய்-திருப்பாணாழ்வார்.
(நம் கண்[ணழகு] உண்டாகில் தானே வருகிறானென்று கிடக்கிறாளொருத்தியை யெழுப்புகிறார்கள்.
நமக்கு ஸ்வரூபஜ்ஞாநமுண்டாகில், அவன்தானே வருகிறானென்று நிர்ப்பரரா யிருக்குமவரை எழுப்புகிறார்கள். ஈஶ்வரனும் ஈஶ்வர விபூதியும் ஸ்வாபிமாந விஷயமாய்த் தோன்றுகை – அஹங்காரத்துக்கு நன்மையாவது.
பகவதநுபவ பரிகரமான ஜ்ஞான வைராக்ய பக்திகளாலே பரிபூர்ணராயிருக்கு மவர்கள் திறத்தில் ததர்த்தமாக ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸாபேக்ஷராயிருக்கை ஸ்வரூபம்.
14
உங்கள் புழைக்கடை
எங்களை முன்னமெழுப்புவான் வாய்பேசும் நங்காய்-நம்மாழ்வார்.
(இவையெல்லாவற்றுக்கும் தானே கடவளாய், எல்லாரையும் தானே எழுப்பக் கடவதாகச் சொல்லிவைத்து, அது செய்யாதே உறங்குகிறாளொருத்தியை எழுப்புகிறார்கள்.) பாகவத ஸமுதாயத்துக்கெல்லாம் தாமே கடவராய், இவர்களுக்கெல்லாம் பகவத்ஸம்பந்த கடகர் தாமேயாம்படி ஜ்ஞாந பக்தி வைராக்யங்களாலே பூர்ணரான பாகவதரை யெழுப்புகிறார்கள்.
பகவத்விஷயத்திலே மூட்டுகையிலே அதிகரித்த நிர்வாஹகர் முன்பாக பகவதநுபவம் பண்ணுகை ஸ்வரூபம்.
15
எல்லே இளங்கிளியே
உத்தம பாகவத லக்ஷணம். எல்லேயிளங்கிளியே-திருமங்கையாழ்வார்.
(எல்லாருடைய திரட்சியும் காணவேண்டி யிருப்பாளொருத்தியை எழுப்புகிறார்கள்.)
பாகவதசேஷத்வம் ஸ்வரூபமானால் அவர்களிடும்பழியும் தம்மேலேறிட்டுக் கொள்ளுகை ஸ்வரூபம். ஸ்வயத்நத்தால் கடக்க அரிதாய், ப்ராயஶ்சித்தவிநாஶ்யமுமின்றிக்கே யிருக்கிற அஹங்கார நிவர்த்தகனாய் மற்றுமுள்ள காம க்ரோதாதிகளுக்கும் நிவாரகன் எம்பெருமான். திருப்பாவையாகிறது இப்பாட்டிறே. பகவத்விஷயத்திலிருக்கும்படி யெல்லாம் சிற்றஞ்சிறுகாலையிலே சொல்லுகிறது; பாகவதவிஷயத்திலிருக்கும்படி யெல்லாம் இப்பாட்டிலே சொல்லுகிறது.
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸமவாயதர்ஶநம் அபிமதமாயிருக்குமவர்களைக் கண்டக்கால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம்.
16
நாயகனாய் நின்ற
ஆசார்ய வைபவம்
அவனைப்பெறுமிடத்தில் ததீயர் முன்னாகப் பெறவேணும். ஆசார்ய ஸம்பந்தகடகரை முன்னிட்டு ஆசார்யனைத் தொழுகையும் பெரியோர்செயலிறே.
இவனுக்குப்பிறக்கும் அத்யவஸாயமும் போட்கனாகையாலே, மெய்யான வ்யவஸாயமுடை யாரை முன்னிட்டாலல்லது கார்யகரமாகாதென்று முன்னிடுகிறது.
17
அம்பரமே தண்ணீரே
பரகத ஸ்வீகாரம் (ஏவகாரச்சீமாட்டி)
பகவத்விஷயத்தைக் கிட்டுவார் தத்ப்ரத்யாஸந்நரை புருஷகாரமாகக்கொண்டு புகுருகை ஸ்வரூபம்.
18
உந்து மதகளிற்றன்
புருஷகாரம்
பகவத்விஷயீகாரம் பிராட்டி புருஷகார ஸாபேக்ஷம்.
19
குத்து விளக்கெரிய
புருஷகாரம்
பிராட்டியைப் புருஷகாரமாக வரித்தால், அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது.
20
முப்பத்துமூவர்
ப்ராப்யம்-பிராட்டிக்கும் அடிமை
அடிமைசெய்யுமிடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமைசெய்வதே முறை.
21
ஏற் கலங்கள்
ஸ்வரூபக்ருத தாஸ்யம் - அபிமானஶூன்யம்.
ப்ரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு “ஏத்தவேழுலகம்கொண்ட” என்கிறபடியே, ஆஶ்ரிதரானவர்களுக்கு நிர்மமராய்க்கொண்டு அவன் குணகீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யமென்கிறது.
22
அங்கண்மாஞாலம்
அநந்யார்ஹஶேஷத்வம்
தேஹாத்மாபிமானத்தை நீக்கி, அதுக்கு இசைந்தவாறே ஸ்வஸ்வாதந்த்ரியாபிமானத்தை நீக்கி, அதுக்கு இசைந்தவாறே ஶேஷத்வத்தை யறிவித்து, அதுக்கு இசைந்தவாறே அந்யஶேஷத்வநிவ்ருத்தியை யுண்டாம்படி பண்ணி, அதுக்கு இசைந்தவாறே ஜ்ஞாத்ருத்வப்ரயுக்தமான ஸ்வஸ்மிந்ஸ்வஶேஷத்வ நிவ்ருத்தியை யுண்டாக்கி, அதுக்கு இசைந்தவாறே ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயத்தை நிவர்த்திப்பித்து, அதுக்கு இசைந்தவாறே உபாயாந்தரங்களை விடுவித்து, அதுக்கு இசைந்தவாறே ததேகோபாயனாம்படி பண்ணி, அதுக்கு இசைந்தவாறே ஸ்வவ்யாபாரத்தில் ஸ்வாதீநகர்த்ருத்வநிவ்ருத்தியைப் பண்ணுவித்து, அதுக்கு இசைந்தவாறே பாரதந்த்ரியப்ரதிபத்தியைப் பிறப்பித்து, அதுக்கு இசைந்தவாறே ஸமஸ்தகல்யாணபரிபூர்ணனான தன்னை அநுபவிப்பித்து, அநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யத்தையுண்டாக்கி, அக்கைங்கர்யத்தில் ஸ்வபோக்த்ருத்வ புத்தியைத் தவிர்ப்பிக்கை. 
23
மாரிமழைமுழைஞ்சில்
இச்சா, க்ருபா ப்ரபாவம்.
பெண்களை ஸாந்த்வநம் பண்ணியருளினான்; அவ்வளவிலே, ‘நாங்கள் வந்தகாரியத்தைக் கேட்டருளவேணும்’ என்கிறார்கள்.
24
அன்றிவ்வுலகமளந்தாய்
மங்களாஶாஸனம்
திருப்பள்ளியறையில் நின்றும் திவ்யஸிம்ஹாஸநத்தளவும் நடக்கிறபோதை நடையழகுக்குத் திருப்பல்லாண்டு பாடுகிறார்கள்.
25
ஒருத்திமகனாய்
பகவல்லாப ப்ரார்த்தனை
“உங்களுக்கு வேண்டுவதென்?” என்ன, “ஏதேனும் ப்ரதிபந்தகம் உண்டேயாகிலும், நீயே போக்கி எங்கள் து:க்கமெல்லாம் கெட விஷயீகரிக்கவேணும்” என்கிறார்கள்.
26
மாலே! மணிவண்ணா!
முக்தாத்மாவின் பகவத் ஸாம்யம்
பகவத்ஸம்ஶ்லேஷத்துக்கு வேண்டும் உபகரணங்களை வேண்டிக்கொள்ளுகிறார்கள்.
ஸத்ஸஹவாஸமும், பகவத் பாகவத பாரதந்த்ர்யஜ்ஞாநமும், கைங்கர்யமும், அக்கைங்கர்யத்தில் போக்த்ருத்வநிவ்ருத்தியும் வேணும்.
27
கூடாரைவெல்லும்
அநந்யபோக்யத்வம்
நோற்றால் பெறக்கடவ பேறு – விஶ்லேஷ வ்யஸநம் பிறவாத கூட்டரவாக வேணும்.
தோடே, செவிப்பூவே, பாடகமே; திருமந்த்ரம் – ஆத்மஸ்வரூப யாதாத்ம்ய ஜ்ஞாநபரமாகையாலும், த்வயம் – உத்தரகண்டத்திற் சொல்லுகிற கைங்கர்யத்துக்குப் பூர்வபாவியான பக்தி ப்ரதாநமாகையாலும், சரமஶ்லோகம் – த்யாஜ்யாம்ஶத்தில் வைராக்ய ப்ரதாநமாகையாலும், ஜ்ஞாந பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது.
28
கறவைகள்பின்சென்று
உபாயம்
தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும், அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து, உபாயபூர்த்தியையும் தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு, கீழ்ச்சொன்னவற்றுக்கெல்லாம் அநுதபித்து க்ஷமைகொண்டு, எங்கள் ப்ராப்யஸித்திக்கு நீயே உபாயமாகவேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள்.
29
சிற்றஞ்சிறுகாலே
உபேயம்
ப்ராப்ய ருசியையும், ப்ராப்யந்தான் இன்னதென்னுமிடத்தையும், அத்தை அவனே தரவேணுமென்னுமிடத்தையும் தங்கள் ப்ராப்யத்வரையையும் அறிவிக்கிறார்கள்.
கைங்கர்யந்தானும் மங்களாஶாஸநரூபமானபடியாலே மங்களாஶாஸநத்துக்குப் பலமாக அவன் கொடுக்கவேண்டியதும் இவர்கள் கொள்ளவேண்டியதும் மங்களாஶாஸநமே யென்றதாய்த்து. ரஜஸ்தமஸ்ஸுக்களாலே கலங்கி தேஹாநுபந்திகளான த்ருஷ்ட பலங்களை அடியோங்கள் அபேக்ஷித்தாலும் ஹிதபரனான நீ கேள்விகொள்ளவும் கடவையல்லை, கொடுக்கக்கடவையுமல்லை என்றதாய்த்து.
30
வங்கக் கடல்கடைந்த
பலன்
இப்ரபந்தம் கற்றார், பிராட்டியாலும், எம்பெருமானாலும் ஸர்வகாலமும் விஷயீகரிக்கப் படுவர்கள் என்கிறார்கள்; ஶ்ரிய:பதியாலே த்ருஷ்டாத்ருஷ்டங்களிரண்டிலும் பிறந்த ஜ்ஞாநத்துக்கு விச்சேதம் வாராதபடி க்ருபையை லபித்து ஆநந்த நிர்ப்பரராயிருப்பர்கள்.


No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...