Saturday, 17 November 2018

கீ³தார்த² ஸங்க்³ரஹம்


ஆழ்வார் திருவடிகளே ஶரணம்
எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்
ஜீயர் திருவடிகளெ ஶரணம்


॥ गीतार्थ संग्रह ॥

स्वधर्मज्ञानवैराग्यसाध्यभक्त्येकगोचरः ।
नारायणः परं ब्रह्म गीताशास्त्रे समीरितः ॥ १॥

ज्ञानकर्मात्मिके निष्ठे योगलक्ष्ये सुसंस्कृते ।
आत्मानुभूतिसिद्ध्यर्थे पूर्वषट्केन चोदिते ॥ २॥

मध्यमे भगवत्तत्त्वयाथात्म्यावाप्तिसिद्धये ।
ज्ञानकर्माभिनिर्वर्त्यो भक्तियोगः प्रकीर्तितः ॥ ३॥

प्रधानपुरुषव्यक्तसर्वेश्वरविवेचनम् ।
कर्मधीर्भक्तिरित्यादिः पूर्वशेषोऽन्तिमोदितः ॥ ४॥

अस्थानस्नेहकारुण्यधर्माधर्मधियाकुलम् ।
पार्थं प्रपन्नमुद्दिश्य शास्त्रावतरणं कृतम् ॥ ५॥

नित्यात्मासङ्गकर्मेहागोचरा साङ्खययोगधीः ।
द्वितीये स्थितधीलक्षा प्रोक्ता तन्मोहशान्तये ॥ ६॥

असक्त्या लोकरक्षायै गुणेष्वारोप्य कर्तृताम् ।
सर्वेश्वरे वा न्यस्योक्ता तृतीये कर्मकार्यता ॥ ७॥

प्रसङ्गात्स्वस्वभावोक्तिः कर्मणोऽकर्मतास्य च ।
भेदा ज्ञानस्य माहात्म्यं चतुर्थाध्याय उच्यते ॥ ८॥

कर्मयोगस्य सौकर्यं शैघ्रयं काश्चन तद्विधाः ।
ब्रह्मज्ञानप्रकारश्च पञ्चमाध्याय उच्यते ॥ ९॥

योगाभ्यासविधिर्योगी चतुर्धा योगसाधनम् ।
योगसिद्धिस्स्वयोगस्य पारम्यं षष्ठ उच्यते ॥ १०॥

स्वयाथात्म्यं प्रकृत्यास्य तिरोधिश्शरणागतिः ।
भक्तभेदः प्रबुद्धस्य श्रैष्ठ्यं सप्तम उच्यते ॥ ११॥

ऐश्वर्याक्षरयाथात्म्यभगवच्चरणार्थिनाम् ।
वेद्योपादेयभावानामष्टमे भेद उच्यते ॥ १२॥

स्वमाहात्म्यं मनुष्यत्वे परत्वं च महात्मनाम् ।
विशेषो नवमे योगो भक्तिरूपः प्रकीर्तितः ॥ १३॥

स्वकल्याणगुणानन्त्यकृत्स्नस्वाधीनतामतिः ।
भक्त्युत्पत्तिविवृध्द्यर्था विस्तीर्णा दशमोदिता ॥ १४॥

एकादशे स्वयाथात्म्यसाक्षात्कारावलोकनम् ।
दत्तमुक्तं विदिप्राप्त्योर्भक्त्येकोपायता तथा ॥ १५॥

भक्तेश्श्रैष्ठयमुपायोक्तिरशक्तस्यात्मनिष्ठता ।
तत्प्रकारास्त्वतिप्रीतिर्भक्ते द्वादश उच्यते ॥ १६॥

देहस्वरूपमात्माप्तिहेतुरात्मविशोधनम् ।
बन्धहेतुर्वि वेकश्च त्रयोदश उदीर्यते ॥ १७॥

गुणबन्धविधा तेषां कर्तृत्वं तन्निवर्तनम् ।
गतित्रयस्वमूलत्वं चतुर्दश उदीर्यते ॥ १८॥

अचिन्मिश्राद्विशुद्धाच्च चेतनात्पुरुषोत्तमः ।
व्यापनाद्भरणात्स्वाम्यदन्यः पञ्चदशोदितः ॥ १९॥

देवासुरविभगोक्तिपूर्विका शास्त्रवश्यता ।
तत्त्वानुष्ठानविज्ञानस्थेम्ने षोडश उच्यते ॥ २०॥

अशास्त्रमासुरं कृत्स्नं शास्त्रीयं गुणतः पृथक् ।
लक्षणं शास्त्रसिद्धस्य त्रिधा सप्तदशोदितम् ॥ २१॥

ईश्वरे कर्तृताबुद्धिस्सत्त्वोपादेयतान्तिमे ।
स्वकर्मपरिणामश्च शास्त्रसारार्थ उच्यते ॥ २२॥

कर्मयोगस्तपस्तीर्थदानयज्ञादिसेवनम् ।
ज्ञानयोगो जितस्वान्तैः परिशुद्धात्मनि स्थितिः ॥ २३॥

भक्तियोगः परैकान्तप्रीत्या ध्यानादिषु स्थितिः ।
त्रयाणामपि योगानां त्रिभिरन्योन्यसङ्गमः ॥ २४॥

नित्यनैमित्तिकानां च पराराधनरूपिणाम् ।
आत्मदृष्टेस्त्रयोऽप्येते योगद्वारेण साधकाः ॥ २५॥

निरस्तनिखिलाज्ञानो दृष्ट्वात्मानं परानुगम् ।
प्रतिलभ्य परां भक्तिं तयैवाप्नोति तत्पदम् ॥ २६॥

भक्तियोगस्तदर्थी चेत्समग्रैश्वर्यसाधकः ।
आत्मार्थी चेत्त्रयोऽप्येते तत्कैवल्यस्य साधकाः ॥ २७॥

ऐकान्त्यं भगवत्येषां समानमधिकारिणाम् ।
यावत्प्राप्ति परार्थी चेत्तदेवात्यन्तमश्नुते ॥ २८॥

ज्ञानी तु परमैकान्ती तदायत्तात्मजीवनः ।
तत्संश्लेषवियोगैकसुखदुःखस्तदेकधीः ॥ २९॥

भगवद्ध्यानयोगोक्तिवन्दनस्तुतिकीर्तनैः ।
लब्धात्मा तद्गतप्राणमनोबुद्धीन्द्रियक्रियः ॥ ३०॥

निजकर्मादि भक्त्यन्तं कुर्यात्प्रीत्यैव कारितः ।
उपायतां परित्यज्य न्यस्येद्देवेतु तामभीः ॥ ३१॥

एकान्तात्यन्तदास्यैकरतिस्तत्पदमाप्नुयात् ।
तत्प्रधानमिदं शास्त्रमिति गीतार्थसङ्ग्रहः ॥ ३२॥

கீ³தார்த² ஸங்க்³ரஹ ॥

ஸ்வதர்மஜ்ஞாநவைராக்³யஸாத்யபக்த்யேககோ³சர: ।
நாராயண: பரம் ப்³ரஹ்ம கீ³தாஶாஸ்த்ரே ஸமீரித: ॥ 1

ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே² யோக³லக்ஷ்யே ஸுஸம்ஸ்க்ருʼதே ।
ஆத்மாநுபூதிஸித்³த்யர்தே² பூர்வஷட்கேந சோதி³தே ॥ 2

மத்யமே ப³வத்தத்த்வயாதா²த்ம்யாவாப்திஸித்³யே ।
ஜ்ஞாநகர்மாபிநிர்வர்த்யோ பக்தியோக:³ ப்ரகீர்தித: ॥ 3

ப்ரதாநபுருஷவ்யக்தஸர்வேஶ்வரவிவேசநம் ।
கர்மதீர்பக்திரித்யாதி:³ பூர்வஶேஷோந்திமோதி³த: ॥ 4

அஸ்தா²நஸ்நேஹகாருண்யதர்மாதர்மதியாகுலம் ।
பார்த²ம் ப்ரபந்நமுத்³தி³ஶ்ய ஶாஸ்த்ராவதரணம் க்ருʼதம் ॥ 5

நித்யாத்மாஸங்க³கர்மேஹாகோ³சரா ஸாங்க²யயோக³தீ:
த்³விதீயே ஸ்தி²ததீலக்ஷா ப்ரோக்தா தந்மோஹஶாந்தயே ॥ 6

அஸக்த்யா லோகரக்ஷாயை கு³ணேஷ்வாரோப்ய கர்த்ருʼதாம் ।
ஸர்வேஶ்வரே வா ந்யஸ்யோக்தா த்ருʼதீயே கர்மகார்யதா ॥ 7

ப்ரஸங்கா³த்ஸ்வஸ்வபாவோக்தி: கர்மணோகர்மதாஸ்ய ச ।
பேதா³ ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்தா²த்யாய உச்யதே ॥ 8

கர்மயோக³ஸ்ய ஸௌகர்யம் ஶைக்ரயம் காஶ்சந தத்³விதா:
ப்³ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமாத்யாய உச்யதே ॥ 9

யோகா³ப்யாஸவிதிர்யோகீ³ சதுர்தா யோக³ஸாதநம் ।
யோக³ஸித்³திஸ்ஸ்வயோக³ஸ்ய பாரம்யம் ஷஷ்ட² உச்யதே ॥ 10

ஸ்வயாதா²த்ம்யம் ப்ரக்ருʼத்யாஸ்ய திரோதிஶ்ஶரணாக³தி: ।
க்தபேத:³ ப்ரபு³த்³ஸ்ய ஶ்ரைஷ்ட்²யம் ஸப்தம உச்யதே ॥ 11

ஐஶ்வர்யாக்ஷரயாதா²த்ம்யப³வச்சரணார்தி²நாம் ।
வேத்³யோபாதே³யபாவாநாமஷ்டமே பே³ உச்யதே ॥ 12

ஸ்வமாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம் ।
விஶேஷோ நவமே யோகோ³க்திரூப: ப்ரகீர்தித: ॥ 13

ஸ்வகல்யாணகு³ணாநந்த்யக்ருʼத்ஸ்நஸ்வாதீநதாமதி: ।
க்த்யுத்பத்திவிவ்ருʼத்த்³யர்தா² விஸ்தீர்ணா த³ஶமோதி³தா ॥ 14

ஏகாத³ஶே ஸ்வயாதா²த்ம்யஸாக்ஷாத்காராவலோகநம் ।
³த்தமுக்தம் விதி³ப்ராப்த்யோர்பக்த்யேகோபாயதா ததா²15

க்தேஶ்ஶ்ரைஷ்ட²யமுபாயோக்திரஶக்தஸ்யாத்மநிஷ்ட²தா ।
தத்ப்ரகாராஸ்த்வதிப்ரீதிர்பக்தே த்³வாத³ஶ உச்யதே ॥ 16

தே³ஹஸ்வரூபமாத்மாப்திஹேதுராத்மவிஶோதநம் ।
³ந்தஹேதுர்வி வேகஶ்ச த்ரயோத³ஶ உதீ³ர்யதே ॥ 17

கு³ணப³ந்தவிதா தேஷாம் கர்த்ருʼத்வம் தந்நிவர்தநம் ।
³தித்ரயஸ்வமூலத்வம் சதுர்த³ஶ உதீ³ர்யதே ॥ 18

அசிந்மிஶ்ராத்³விஶுத்³தாச்ச சேதநாத்புருஷோத்தம: ।
வ்யாபநாத்³ரணாத்ஸ்வாம்யத³ந்ய: பஞ்சத³ஶோதி³த: ॥ 19

தே³வாஸுரவிபகோ³க்திபூர்விகா ஶாஸ்த்ரவஶ்யதா ।
தத்த்வாநுஷ்டா²நவிஜ்ஞாநஸ்தே²ம்நே ஷோட³ஶ உச்யதே ॥ 20

அஶாஸ்த்ரமாஸுரம் க்ருʼத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் கு³ணத: ப்ருʼ²க் ।
லக்ஷணம் ஶாஸ்த்ரஸித்³ஸ்ய த்ரிதா ஸப்தத³ஶோதி³தம் ॥ 21

ஈஶ்வரே கர்த்ருʼதாபு³த்³திஸ்ஸத்த்வோபாதே³யதாந்திமே ।
ஸ்வகர்மபரிணாமஶ்ச ஶாஸ்த்ரஸாரார்த² உச்யதே ॥ 22

கர்மயோக³ஸ்தபஸ்தீர்த²தா³நயஜ்ஞாதி³ஸேவநம்
ஜ்ஞாநயோகோ³ ஜிதஸ்வாந்தை: பரிஶுத்³தாத்மநி ஸ்தி²தி: ॥ 23

க்தியோக:³ பரைகாந்தப்ரீத்யா த்யாநாதி³ஷு ஸ்தி²தி: ।
த்ரயாணாமபி யோகா³நாம் த்ரிபிரந்யோந்யஸங்க³ம: ॥ 24

நித்யநைமித்திகாநாம் ச பராராதநரூபிணாம் ।
ஆத்மத்³ருʼஷ்டேஸ்த்ரயோப்யேதே யோக³த்³வாரேண ஸாதகா: ॥ 25

நிரஸ்தநிகி²லாஜ்ஞாநோ த்³ருʼஷ்ட்வாத்மாநம் பராநுக³ம் ।
ப்ரதிலப்ய பராம் பக்திம் தயைவாப்நோதி தத்பத³ம் ॥ 26

க்தியோக³ஸ்தத³ர்தீ² சேத்ஸமக்³ரைஶ்வர்யஸாதக: ।
ஆத்மார்தீ² சேத்த்ரயோப்யேதே தத்கைவல்யஸ்ய ஸாதகா: ॥ 27

ஐகாந்த்யம் ப³வத்யேஷாம் ஸமாநமதிகாரிணாம்
யாவத்ப்ராப்தி பரார்தீ² சேத்ததே³வாத்யந்தமஶ்நுதே ॥ 28

ஜ்ஞாநீ து பரமைகாந்தீ ததா³யத்தாத்மஜீவந: ।
தத்ஸம்ஶ்லேஷவியோகை³கஸுக²து:³²ஸ்ததே³கதீ:29

³வத்³த்யாநயோகோ³க்திவந்த³நஸ்துதிகீர்தநை: ।
லப்³தாத்மா தத்³³தப்ராணமநோபு³த்³தீந்த்³ரியக்ரிய: ॥ 30

நிஜகர்மாதி³க்த்யந்தம் குர்யாத்ப்ரீத்யைவ காரித: ।
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேத்³தே³வேது தாமபீ:31

ஏகாந்தாத்யந்ததா³ஸ்யைகரதிஸ்தத்பத³மாப்நுயாத் ।
தத்ப்ரதாநமித³ம் ஶாஸ்த்ரமிதி கீ³தார்த²ஸங்க்³ரஹ: ॥ 32



எம்பெருமானாரருளிச்செய்த ஆளவந்தார் தனியன்
யத் பதாம்போருஹ த்யாந வித்வஸ்தா ஶேஷ கல்மஷ:
வஸ்துதா முபயாதோஹம் யாமுநேயம் நமாமிதம்

1)       ஸ்வர்மஜ்ஞாநவைரா்யஸா்யக்த்யேக◌ேগাசரঃ ।
நாராயணபரம் ்ரஹ்ம ீதாஶாஸ்த்ரே ஸமீரிதঃ ॥ 1

ஸ்வதர்மஜ்ஞாந வைராக்ய ஸாத்ய பக்த்யேக கோசர: - தன் (வர்ணாச்ரம) தர்மரூபமாயிருக்கும் கர்மயோகத்தாலும், ஞானயோகத்தாலும், இதரவிஷயங்களில் பற்றின்மையாலும் உண்டாகும் பக்தியொன்றுக்கே விஷயமாகுமவனாய் பரம்ப்ரஹ்ம - பரப்ரஹ்மமான, நாராயண: - நாராயணன், கீதாஶாஸ்த்ரே - கீதையாகிற ஶாஸ்திரத்தில், ஸமீரித: - அறிவிக்கப்பட்டுள்ளான்.

பூர்வ ஷட்கம்:
2)      ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்◌ேயோலக்ஷ்யே ஸுஸம்ஸ்கதே ।
ஆத்மாநுூதிஸி்யர்◌ேபூர்வஷட்கேந சோிதே ॥ 2॥

ஸுஸம்ஸ்க்ருதே - (சேஷத்வஜ்ஞாநம், இதரவிஷயங்களில் பற்றின்மை முதலான புத்திவிஶேஷங்களாலே) நன்கு அலங்கரிக்கப்பட்ட, ஜ்ஞாநகர்மாத்மிகே நிஷ்டே - ஞானயோகமும், கர்மயோகமும், யோகலக்ஷ்யே - (ஆத்மஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தை அடையும் பொருட்டு்ம், ஆத்மாநுபூதி ஸித்த்யர்த்தே - (அதற்குப்பின்) ஆத்மாநுபவத்தை அடையும் பொருட்டும், பூர்வஷட்கேந - (கீதையின்) முதல் ஆறு அத்தியாயங்களாலும், சோதிதே - விதிக்கப்பட்டன.

மத்யம ஷட்கம்:
3)      ்யமே ভগவத்தத்த்வயாாத்ம்யாவாப்திஸியே ।
ஜ்ஞாநகர்மாிநிர்வர்த்யோ க்தியோগঃ ப்ரகீர்திதঃ ॥ 3

மத்யமே - நடு ஆறு அத்தியாயங்களில், பகவத் தத்வ யாதாத்ம்ய அவாப்தி ஸித்தயே - பகவானாகிற பரதத்துவத்தின் உண்மையான அநுபவம் உண்டாவதன் பொருட்டு, ஜ்ஞாந கர்ம அபிநிர்வர்த்ய: - ஜ்ஞாநத்தோடு கூடிய கர்ம யோகத்தாலே உண்டாகும், பக்தியோக: - பக்தியோகம், ப்ரகீர்த்தித: - சொல்லப்படுகிறது.

அந்திம ஷட்கம்:
4)      ப்ராநபுருஷவ்யக்தஸர்வேஶ்வரவிவேசநம் ।
கர்மீர்க்திரித்யாிபூர்வஶேஷோந்திமோிதঃ ॥ 4

ப்ரதாந புருஷவ்யக்த ஸர்வேஶ்வர விவேசநம் - ஸுக்ஷ்மமான மூலப்ரக்ருதி, ஜீவன், ஸ்தூலமான அசேதனம், ஸர்வேஶ்வரன் ஆகியவற்றைப் பற்றிய விளக்கமும், கர்ம: - கர்மயோகமும், தீ: - ஜ்ஞாநயோகமும், பக்தி: - பக்தியோகமும், இத்யாதி: - இவற்றை அநுஷ்டிக்கும் முறை முதலானவையும், (ஆகிய இவற்றில்) பூர்வஶேஷ: - முன் அத்தியாயங்களில் சொல்லாமல் விடப்பட்டவை, அந்திமோதித: - கடைசி ஆறு அத்தியாயங்களிலும் சொல்லப்பட்டன.

1: அர்ஜுன விஷாத யோகம்:
5)      அஸ்ாநஸ்நேஹகாருண்யர்மார்மியாகுலம் ।
பார்ம் ப்ரபந்நமுிஶ்ய ஶாஸ்த்ராவதரணம் கதம் ॥ 5॥

அஸ்தாந ஸ்நேஹகாருண்ய தர்மாதர்மதியா - தகாத பந்துக்களிடம் பற்றினாலும், கருணையினாலும், உண்டான தர்மத்தில் அதர்மபுத்தியாலே, ஆகுலம் - கலங்கி நிற்பவனாய், ப்ரபந்நம் - சரணமடைந்தவனான, பார்த்தம் உத்திஶ்ய - அர்ஜுனனைக் குறித்து, ஶாஸ்த்ராவதரணம்க்ருதம் - கீதாசாஸ்த்ரம் (முதலத்தியாயத்தில்) சொல்லப்பட்டது.

2: ஸாங்க்ய யோகம்:
6)      நித்யாத்மாஸங்கர்மேஹா◌ேগাசரா ஸாங்யயோগধঃ ।
்விதீயே ஸ்ிதீலக்ஷா ப்ரோக்தா தந்மோஹஶாந்தயே ॥ 6॥

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா - நித்யமான ஆத்மதத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன இவற்றை விஷயமாகக் கொண்டதாய், ஸ்திததீலக்ஷா - ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,  ஸாங்க்யயோகதீ - ஆத்மஜ்ஞானமும், கர்மயோகத்தைப் பற்றிய அறிவும், தந்மோஹஶாந்தயே - அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக, த்விதீயே - இரண்டாம் அத்தியாயத்தில், ப்ரோக்தா - உபதேசிக்கப்படுகிறது.

3: கர்ம யோகம்:
7)      அஸக்த்யா லோகரக்ஷாயை ுணேஷ்வாரோப்ய கர்ததாம் ।
ஸர்வேஶ்வரே வா ந்யஸ்யோக்தா ததீயே கர்மகார்யதா ॥ 7॥

லோகரக்ஷாயை - (ஜ்ஞாநயோகத்தில் அதிகாரமில்லாத) ஜனங்களைக் காப்பதற்காக, குணேஷு - ஸத்வரஜஸ்தமோ குணங்களில், கர்த்ருதாம் ஆரோப்ய - தன்னிடமுள்ள கர்த்ருத்வத்தை அநுஸந்தித்து, ஸர்வேஶ்வரே வாந்யஸ்ய - அந்த குணங்கள் முதலான அனைத்துக்கும் ஈஶ்வரனான பகவானிடத்தில் அக்கர்த்ருத்வத்தைச் சேர்த்துவிட்டு, அஸக்த்யா - மோக்ஷம் தவிர்ந்த மற்ற பலன்களில் பற்றில்லாமல், கர்மகார்யதா - கர்மங்களைச் செய்யவேண்டுமென்பது, த்ருதீயே உக்தா - மூன்றாமத்தியாயத்தில் கூறப்பட்டது.


4: ஜ்ஞான யோகம்:
8)      ப்ரஸங்ாத்ஸ்வஸ்வாவோக்திகர்மணோகர்மதாஸ்ய ச ।
◌ேভদா ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் சதுர்்யாய உச்யதே ॥ 8॥

சதுர்த்தாத்யாயே - நான்காமத்தியாயத்தில், கர்மண: அகர்மதா உச்யதே - (ஞானமடங்கிய) கர்மயோகம் ஞானயோகமாகவேயிருத்தல் சொல்லப்படுகிறது; அஸ்ய பேதா: ச (உச்யதே) - கர்மயோகத்தின் (ஸ்வரூபமும்) பிரிவுகளும் சொல்லப்படுகின்றன; ஜ்ஞாநஸ்ய மாஹாத்ம்யம் (உச்யதே) - (கர்மயோகத்தில் அடங்கிய) ஞானபாகத்தின் பெருமையும் கூறப்படுகிறது; ப்ரஸங்காத் - (தான் சொல்லுமர்த்தம் ப்ராமாணிகமானது என்று நிரூபிக்கவேண்டிய) ப்ரஸங்கம் ஏற்பட்டபடியாலே, ஸ்வஸ்வபாவோக்தி: - (அவதார தசையிலும் மாறாத) தன் தன்மையைப் பற்றிய பேச்சும் (முதலில்) உள்ளது.

5 - கர்மஸந்யாஸ யோகம்:
9)      கர்மயோஸ்ய ஸௌகர்யம் ஶை்ரயம் காஶ்சந த்விঃ ।
்ரஹ்மஜ்ஞாநப்ரகாரஶ்ச பஞ்சமா்யாய உச்யதே ॥ 9॥

கர்மயோகஸ்ய - கர்மயோகத்தினுடைய, ஸெளகர்யம் - செயற்கெளிய தன்மையும், ஶைக்ர்யம் - விரைவில் பலனளிக்கும் தன்மையும், காஶ்சந தத்விதா: - அதற்குறுப்பான சில அங்கங்களும், ப்ரஹ்மஜ்ஞாநப்ரகார: ச - ஶுத்தாத்மாக்களைக் ஸமமாகக் காண்கைக்குறுப்பான நிலையும், பஞ்சமாத்யாயே - ஐந்தாமத்தியாயத்தில், உச்யதே - கூறப்படுகிறது.

6 - அத்யாத்ம யோகம்:
10)     யோ்யாஸவிிர்யோீ சதுர்ா யோஸாநம் ।
யோஸிிஸ்ஸ்வயோஸ்ய பாரம்யம் ஷஷ்உச்யதே ॥ 10

யோகாப்யாஸவிதி: - (ஆத்ம ஸாக்ஷாத்காரமாகிற) யோகத்தைப் பழகும் முறையும், சதுர்த்தா யோகீ - நாலுவகைப்பட்ட யோகிகளும், யோகஸாதநம் - (முற்கூறிய) யோகத்திற்கு ஸாதநமாகிய அப்யாஸம், வைராக்யம் முதலானவையும், யோகஸித்தி: - (தொடங்கிய) யோகம் (இடையில் தடைபட்டாலும் காலக்ரமத்தில்) ஸித்தியடையும் என்பதும், ஸ்வயோகஸ்ய பாரம்யம் - தன் விஷயமான பக்தியோகத்தின் உயர்வும், ஷஷ்ட்டே - ஆறாமத்தியாயத்தில், உச்யதே - கூறப்படுகிறது.

7 - விஜ்ஞான யோகம்:
11)      ஸ்வயாாத்ம்யம் ப்ரகத்யாஸ்ய திரோிஶ்ஶரணாதிঃ ।
க்த◌ேভদঃ ப்ரஸ்ய ஶ்ரைஷ்்யம் ஸப்தம உச்யதே ॥ 11॥

ஸப்தமே - ஏழாவது அத்தியாயத்தில், ஸ்வயாதாத்ம்யம் - (உபாஸிக்கப்படும்) பரமபுருஷனான தன்னைப் பற்றிய உண்மைநிலையும், ப்ரக்ருத்யா - மூலப்ரக்ருதியினாலே, அஸ்யதிரோதி: - இந்நிலை (ஜீவனுக்கு) மறைக்கப் படுவதும், ஶரணாகதி: - (அம்மறைவைப் போக்கடிக்கும்) ஶரணாகதியும், பக்தபேத: - உபாஸகர்களில் (நாலு) வகையும், ப்ரபுத்தஸ்ய ஶ்ரைஷ்ட்யம் - (அந்நால்வரில்) ஞானியின் சிறப்பும், உச்யதே - கூறப்படுகிறது.

8 - அப்யாஸ யோகம்:
12)     ஐஶ்வர்யாக்ஷரயாாத்ம்யভগவச்சரணார்ிநாம் ।
வே்யோபா◌ோவாநாமஷ்டமே ◌ேভদ உச்யதே ॥ 12॥

ஐஶ்வர்ய அக்ஷர யாதாத்ம்ய பகவச்சரணார்த்திணாம் - (1) ஐஶ்வர்யார்த்தி, (2) ப்ரக்ருதியினின்று நீங்கிய ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பும் கைவல்யார்த்தி, (3) பகவானுடைய திருவடித்தாமரையைப் பெறவிரும்பும் ஞானி ஆகிய மூவர்க்கும், வேத்யோபாதேயபாவாநாம் - அறியவேண்டும் அர்த்த விஷேஷங்கள், கைக்கொள்ள (அநுஷ்டிக்க) வேண்டியவை ஆகியவற்றின், பேத: - வேறுபாடு, அஷ்டமே - எட்டாம் அத்தியாயத்தில், உச்யதே - சொல்லப்படுகிறது.

9 - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்:
13)     ஸ்வமாஹாத்ம்யம் மநுஷ்யத்வே பரத்வம் ச மஹாத்மநாம் ।
விஶேஷோ நவமே யோ◌ேগা ভக்திரூபப்ரகீர்திதঃ ॥ 13

ஸ்வமாஹாத்ம்யம் - தன்னுடைய பெருமை, மநுஷ்யத்வே பரத்வம் - மனிதனாய் அவதரிக்கும்போதும் மேன்மையையுடைத்தாயிருக்கை, மஹாத்மநாம் விஶேஷ: -ஜ்ஞாநிகளுக்குள்ள சிறப்பு, (ஆகியவற்றோடு கூடிய), பக்திரூப: யோக: ச - பக்தியோகம் எனப்படும் உபாஸனம், நவமே - ஒன்பதாவது அத்தியாயத்தில், ப்ரகீர்த்தித: - நன்றாகச் சொல்லப்பட்டது.

10 - விபூதி யோகம்:
14)     ஸ்வகல்யாணுணாநந்த்யகத்ஸ்நஸ்வாீநதாமதிঃ ।
க்த்யுத்பத்திவிவৃধ்யர்ா விஸ்தீர்ணா ஶமோிதா ॥ 14॥

பக்த்யுத்பத்தி விவ்ருத்த்யர்த்தா - ஸாதநபக்தி உண்டாகி வளர்வதன் பொருட்டு, ஸ்வ கல்யாணகுண அநந்த்ய க்ருத்ஸ்ந ஸ்வாதீநதா மதி: - தனது கல்யாணகுணங்களின் அளவின்மை பற்றியும், அனைத்தும் தனக்கு அதீனமாயிருப்பது பற்றியும் உள்ள அறிவு, விஸ்தீர்ணா - விரிவாக, தஶமோதிதா - பத்தாமத்தியாயத்தில் சொல்லப்பட்டது.

11 - விஶ்வரூப தர்சனம்:
15)     ஏகாஶே ஸ்வயாாத்ம்யஸாக்ஷாத்காராவலோகநம் ।
த்தமுக்தம் விிப்ராப்த்யோர்க்த்யேகோபாயதா தா ॥ 15॥

ஏகாதஶே - பதினோராமத்தியாயத்தில், ஸ்வயாதாத்ம்ய ஸாக்ஷாத்கார அவலோகநம் - தன்னை உள்ளபடி காண்பதற்குரிய திவ்யமான கண், தத்தம் உக்தம் - (அர்ஜுனனுக்குக் கண்ணனால்) கொடுக்கப்பட்டதெனச் சொல்லப்பட்டது; ததா - அவ்வண்ணமே, விதிப்ராப்த்யோ - (பரம்பொருளை) அறிவது, (காண்பது), அடைவது ஆகியவை, பக்த்யேகோபாயதா - பக்தியொன்றையே காரணமாகக் கொண்டவை (என்றும்), உக்தம் - சொல்லப்பட்டது.

12 - பக்தியோகம்:
16)     க்தேஶ்ஶ்ரைஷ்யமுபாயோக்திரஶக்தஸ்யாத்மநிஷ்தா ।
தத்ப்ரகாராஸ்த்வதிப்ரீதிர்க்தே ்வாஶ உச்யதே ॥ 16॥

பக்தே:ஶ்ரைஷ்ட்யம் - (ஆத்மோபாஸனத்தைக் காட்டிலும்) பகவதுபாஸனமாகிற பக்தியின் சிறப்பும், உபாயோக்தி: - அந்த பக்திக்கு உபாயத்தைத் தெரிவித்தலும், அஶக்தஸ்ய - பக்தியில் ஶக்தியில்லாதவனுக்கு, ஆத்மநிஷ்டதா – ஆத்மோபாஸ னமும், தத்ப்ரகாரா: - கர்மயோகம் முதலானவற்றுக்கு வேண்டியவைகளான குணங்களின் வகைகளும், பக்தே அதிப்ரீதி: து - தன் பக்தனிடம் மிகுந்த ப்ரீதியும், த்வாதஶே - பன்னிரண்டாமத்தியாயத்தில், உச்யதே - கூறப்படுகிறது.

13 - க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞ விபாக யோகம்:
17)     ◌ேஹஸ்வரூபமாத்மாப்திஹேதுராத்மவிஶோநம் ।
ந்ஹேதுர்வி வேகஶ்ச த்ரயோஶ உீர்யதே ॥ 17॥

தேஹஸ்வரூபம் – தேஹத்தின் ஸ்வரூபமும், ஆத்மாப்திஹேது: - ஜீவாத்ம ஸ்வரூபத்தை அடைவதற்கு உபாயமும், ஆத்மவிஶோதநம் - ஆத்மாவை ஆராய்ந்தறிதலும், பந்தஹேது: - (ஆத்மாவுக்கு அசித்தோடு) தொடர்பு ஏற்படுவதற்குக் காரணமும், விவேக: ச - (ஆத்மாவை அசித்திலிருந்து) பிரித்தநுஸந்திக்கும் முறையும், த்ரயோதஶே - பதிமூன்றாவது அத்தியாயத்தில், உதீர்யதே – சொல்லப் படுகிறது.

14 - குணத்ரய விபாகயோகம்:
18)     ுணந்விா தேஷாம் கர்தத்வம் தந்நிவர்தநம் ।
தித்ரயஸ்வமூலத்வம் சதுர்ஶ உீர்யதே ॥ 18॥

குணபந்தவிதா - (ஸத்வம் முதலான மூன்று குணங்கள்) ஸம்ஸாரபந்தத்துக்குக் காரணமாகும் முறையும், தேஷாம் கர்த்ருத்வம் - அந்த குணங்கள் செயலுக்குக் காரணமாயிருக்கும் தன்மையும், தந்நிவர்த்தநம் - அந்த குணங்களை நீக்கும் முறையும், கதித்ரயஸ்வமூலத்வம் - (சிறந்த ஐஶ்வர்யம், கைவல்யம், பகவத்ப்ராப்தி என்னும்) மூன்று ப்ராப்யங்களும் தன்னிடமிருந்தே கிடைக்கின்றன என்பதும், சதுர்த்தஶே - (கீதையின்) பதினாலாமத்தியாயத்தில், உதீர்யதே - சொல்லப்படுகிறது.

15 - புருஷோத்தம யோகம்:
19)     அசிந்மிஶ்ரா்விஶுாச்ச சேதநாத்புருஷோத்தமঃ ।
வ்யாபநாரணாத்ஸ்வாம்யந்யபஞ்சஶோிதঃ ॥ 19

அசிந்மிஶ்ராத் (சேதநாத்) – அசேதனமான ப்ராக்ருத ஶரீரத்தோடு சேர்ந்திருக்கும் பத்த ஜீவனைக் காட்டிலும், விஶுத்தாத் சேதநாத் ச - ப்ராக்ருத ஶரீரத்திலிருந்து விடுபட்டுப் பரிஶுத்தியடைந்த முக்த ஜீவனைக் காட்டிலும், வ்யாபநாத் - (அவர்களை) வ்யாபித்திருக்கையாலும், பரணாத் - (அவர்களைத்) தாங்குகையாலும், ஸ்வாம்யாத் - (அவர்களை) உடையவனாயிருக்கையாலும், அந்ய: - வேறுபட்டவனான, புருஷோத்தம: - புருஷோத்தமனான ஸ்ரீமந் நாராயணன், பஞ்சதஶோதித: - பதினைந்தாவது அத்தியாயத் தில் சொல்லப்பட்டான்.

16 - தேவாசுரஸம்பத் விபாக யோகம்:
20)    ◌ேவாஸுரவி◌ேগাக்திபூர்விகா ஶாஸ்த்ரவஶ்யதா ।
தத்த்வாநுஷ்ாநவிஜ்ஞாநஸ்◌ேம்நே ஷோஶ உச்யதே ॥ 20॥

தத்வாநுஷ்டாநவிஜ்ஞாநஸ்தேம்நே - (அடையத்தக்க) தத்துவத்தையும், (அதை அடைவிக்கும்) உபாயாநுஷ்டாநத்தையும் பற்றிய அறிவை உறுதிப்படுத்துவதற்காக,  தேவாஸுர விபாக உக்திபூர்விகா - (மனிதர்க்குள்) தேவப்பிரிவு, அஸுரப்பிரிவு என்னும் இரு பிரிவுகள் இருப்பதை முன்னிட்டுக்கொண்டு, ஶாஸ்த்ரவஶ்யதா - (மனிதன்) சாஸ்த்ரத்திற்கு வசப்பட்டவன் எனும் உண்மை, ஷோடஶே - (கீதையின்) பதினாறாம் அத்தியாயத்தில், உச்யதே - சொல்லப்படுகிறது.

17 - ஶ்ரத்தாத்ரய விபாக யோகம்:
21)     அஶாஸ்த்ரமாஸுரம் கத்ஸ்நம் ஶாஸ்த்ரீயம் ுணதৃথக் ।
லக்ஷணம் ஶாஸ்த்ரஸிஸ்ய த்ரிா ஸப்தஶோிதம் ॥ 21॥

க்ருத்ஸ்நம் அஶாஸ்த்ரம் - ஶாஸ்த்ரத்தில் விதிக்கப்படாத கர்மம் அனைத்தும், ஆஸுரம் - அஸுரர்க்குரியது (ஆகையாலே பயனற்றது என்றும்), ஶாஸ்த்ரீயம் - சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட கர்மம், குணத: - (ஸத்வரஜஸ்தமோ) குணங்கள் மூன்றையிட்டு, ப்ருதக் - மூன்று விதமாயிருப்பது என்றும், ஶாஸ்த்ரஸித்தஸ்ய - சாஸ்த்ரத்தில் விதிக்கப்பட்ட யாகம் முதலான் கர்மங்களுக்கு, த்ரிதா லக்ஷணம் - "ஓம் தத் ஸத்" என்னும் மூன்று பதங்கள் (தாம் சேர்வதன் மூலம் அவற்றை மற்ற கர்மங்களினின்றும் வேறுபடுத்தும்) லக்ஷணமாகின்றன (என்னும் விஷயமும்), ஸப்ததஶோதிதம் - பதினேழாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டது.



18 -   மோக்ஷோபதேச யோகம்:
22)    ஈஶ்வரே கர்ததாிஸ்ஸத்த்வோபா◌ேயதாந்திமே ।
ஸ்வகர்மபரிணாமஶ்ச ஶாஸ்த்ரஸாரார்உச்யதே ॥ 22॥

ஈஶ்வரே கர்த்ருதாபுத்தி: - கர்மங்களைச் செய்பவன் ஈஶ்வரனே என்னும் நினைவும், ஸத்வ உபாதேயதா - ஸத்வ குணம் கைக்கொள்ளத்தக்கது என்னும் விஷயமும், ஸ்வ கர்மபரிணாம: - (முற்கூறிய நினைவுடன் அநுஷ்டிக்கப்படும்) ஸாத்விக கர்மத்தின் பலன் முக்தி என்பதும், ஶாஸ்த்ரஸாரார்த்த ச - இந்த கீதா ஶாஸ்த்ரத்தின் ஸாரார்த்தமான பக்திப்ரபத்திகளும், அந்திமே - கீதையின் கடைசியான பதினெட்டாம் அத்தியாயத்தில், உச்யதே - சொல்லப்படுகிறது.

23)    கர்மயோஸ்தபஸ்தீர்থদாநயஜ்ஞாிஸேவநம் ।
ஜ்ஞாநயோ◌ேগা ஜிதஸ்வாந்தைபரிஶுாத்மநி ஸ்ிதி

கர்மயோக: - கர்மயோகமாவது, தபஸ் தீர்த்த தாந யஜ்ஞாதி ஸேவநம் - தவம், தீர்த்தயாத்திரை, தானம், யஜ்ஞம் (யாகம்) முதலானவற்றில் இடைவிடாது ஈடுபடுதலேயாகும். ஜ்ஞாநயோக: - ஜ்ஞாநயோகமாவது, ஜிதஸ்வாந்தை: - தனது மனத்தை வென்றவர்களால், பரிஶுத்தாத்மநிஸ்திதி: - ஶரீரத்தோடு தொடர்பற்ற தம் ஆத்மாவில் (இடைவிடாமல் சிந்திப்பதன் மூலம்) நிலைநிற்றலேயாகும்.

24)    க்தியோগঃ பரைகாந்தப்ரீத்யா ்யாநாிஷு ஸ்ிதிঃ ।
த்ரயாணாமபி யோாநாம் த்ரிிரந்யோந்யஸங்ঃ ॥ 24

பக்தியோக: - பக்தியோகமாவது, பரைகாந்தப்ரீத்யா - பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயண னிடமே செலுத்தப்பட்ட அன்போடு கூட, த்யாநாதிஷூஸ்திதி: - தியானித்தல், அர்ச்சனம் செய்தல், வணங்குதல் முதலானவற்றில் நிலைநிற்றலேயாகும். த்ரயாணாமபி யோகாநாம் - கர்மம், ஜ்ஞாநம், பக்தி எனப்படும் மூன்று யோகங்களில், த்ரிபி: அந்யோந்ய ஸங்கம: - ஒவ்வொரு யோகத்திலும் மற்ற இரண்டும் சேர்ந்திருக்கின்றன.

25)    நித்யநைமித்திகாநாம் ச பராராநரூபிணாம் ।
ஆத்மদৃஷ்டேஸ்த்ரயோப்யேதே யோগদ்வாரேண ஸாகாঃ ॥ 25

பராராதந ரூபிணாம் - பரமபுருஷனுக்கு ஆராதனமாயிருக்கும், நித்யநைமித்திகாநாம் ச - நித்ய நைமித்திக கர்மங்களுக்கும், (த்ரிபி: ஸங்கம: - மூன்று யோகங்களிலும் சேர்த்தியுண்டு), ஏதேத்ரய: அபி - இந்த மூன்று யோகங்களும், யோகத்வாரேண - (மனம் ஒருமுகப்பட்டிருக்கையாகிற) ஸமாதி நிலையை விளைப்பதன் மூலம், ஆத்மத்ருஷ்டே - ஆத்மஸாக்ஷாத்காரத்திற்கு, ஸாதகா: - உபாயங்களாகின்றன.


26)    நிரஸ்தநிிலாஜ்ஞாநோ দৃஷ்ட்வாத்மாநம் பராநும் ।
ப்ரதில்ய பராம் க்திம் தயைவாப்நோதி தத்பம் ॥ 26॥

நிரஸ்த நிகில அஜ்ஞாந: - (உபாயத்திற்குத் தடையான) எல்லா அஜ்ஞானங்களும் நீங்கப் பெற்றவனாய், பராநுகம் - பரம புருஷனுக்கு அடிமைப்பட்டிருக்கும், ஆத்மாநம் - தன்ஸ்வரூபத்தை, த்ருஷ்ட்வா - கண்டு (அதன் விளைவாக), பராம் பக்திம் - பரபக்தியை, ப்ரதிலப்ய - அடைந்து, தயா ஏவ - அந்த மேலான பக்தியாலேயே, தத் பதம் - அந்த எம்பெருமானுடைய திருவடிகளை, ஆப்நோதி - அடைகிறான்.

27)    க்தியோஸ்தர்ீ சேத்ஸம்ரைஶ்வர்யஸாঃ ।
ஆத்மார்ீ சேத்த்ரயோப்யேதே தத்கைவல்யஸ்ய ஸாகாঃ ॥ 27

பக்தியோக: - பக்தியோகமானது, ததர்த்தீசேத் – மிகச் சிறந்த செல்வத்தை விரும்பினவனாகில், ஸமக்ரைஶ்வர்ய ஸாதக: - மிகச் சிறந்த செல்வத்தையளிக்கும். ஏதேத்ரய: அபி - இந்த மூன்று யோகங்களுமே, ஆத்மார்த்தீசேத் - ஆத்மஸ்வரூபத்தை அநுபவிக்க விரும்பினானாகில், தத்கைவல்யஸ்ய ஸாதகா: - ஆத்மமாத்ர அநுபவத்தை அளிக்கக் கூடியவை.

28)    ஐகாந்த்யம் ভগவத்யேஷாம் ஸமாநமிகாரிணாம் ।
யாவத்ப்ராப்தி பரார்ீ சேத்த◌ேவாத்யந்தமஶ்நுதே ॥ 28॥

ஏஷாம் அதிகாரிணாம் - இந்த மூன்று வகைப்பட்ட அதிகாரிகளுக்கும், பகவதி - எம்பெருமானிடம், ஐகாந்த்யம் - மற்ற தெய்வங்களைத் தொழாமல் அவன் ஒருவனையே தொழுமவர்களாயிருக்கும் பக்தி, ஸமாநம் - பொதுவானது; யாவத்ப்ராப்தி - பலனை அடைவதற்குள், பரார்த்தீசேத் - (ஐஶ்வர்யார்த்தியும், கைவல்யார்த்தியும்) பரமப்ராப்யமான பரமபுருஷனின் திருவடிகளை அடைய விரும்பினானாகில், தத் ஏவ - அந்தத் திருவடியையே, அத்யந்தம் - எப்போதும், அஶ்நுதே - அடைகிறான். (உபாஸகஜ்ஞானி பலனை அடையும் வரையில் எம்பெருமானையே விரும்பினானாகில், அவன் திருவடியையே என்றும் அடைகிறான்.)

29)    ஜ்ஞாநீ து பரமைகாந்தீ தாயத்தாத்மஜீவநঃ ।
தத்ஸம்ஶ்லேஷவியோ◌ைகஸுখদঃখஸ்த◌ேঃ ॥ 29

பரமைகாந்தீஜ்ஞாநீ து – பரமைகாந்தியான ஜ்ஞாநியோவெனில்,  ததாயத்தாத்ம ஜீவந: - எம்பெருமானையே பற்றி நிற்கும் தன் வாழ்வையுடையவனாய், தத்ஸம்ஶ்லேஷ வியோகைக ஸுகது:க்க: - அந்த எம்பெருமானோடு சேர்ந்தால் இன்பத்தையும், அவனைப் பிரிந்தால் துன்பத்தையும் அடைபவனாய், ததேகதீ: - அவன் ஒருவனிடமே தன் அறிவை வைத்தவனாய் இருப்பவன்.

30)    ভগ்யாநயோ◌ேগাக்திவந்நஸ்துதிகீர்தநைঃ ।
ாத்மா ததப்ராணமநோீந்்ரியக்ரியঃ ॥ 30

பகவத்த்யாந யோக உக்தி வந்தந ஸ்துதி கீர்த்தநை: - எம்பெருமானைத் தியானிப்பது, காண்பது, அவனைப் பற்றிப் பேசுவது, அவனை வணங்குவது, துதிப்பது, திருநாம ஸங்கீர்த்தனம் செய்வது ஆகியவற்றால், லப்தாத்மா தத்கதப்ராண மநோபுத்தி இந்த்ரியக்ரிய: - எம்பெருமானிடம் ஈடுபட்ட ப்ராணன், மனம், புத்தி, இந்த்ரியங்கள் ஆகியவற்றின் செயல்களை உடையவன்.

31)     நிஜகர்மாி க்த்யந்தம் குர்யாத்ப்ரீத்யைவ காரிதঃ ।
உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யே்◌ேவேது தாமঃ ॥ 31

நிஜகர்மாதி - தனது வர்ணாஶ்ரமங்களுக்குரிய கர்மம் தொடக்கமாக, பக்த்யந்தம் - பக்தி ஈறாகவுள்ள அனைத்தையும், உபாயதாம் பரித்யஜ்ய - இவை 'உபாயம்' என்னும் எண்ணத்தைக் கைவிட்டு, ப்ரீத்யா ஏவ காரித: - (வகுத்த ஸ்வாமியைப் பற்றியவை என்னும்) அன்பாலே தூண்டப்பட்டவனாய், குர்யாத் - (பரமைகாந்தியான ஜ்ஞாநி) செய்யக்கடவன்;  அபீ: - பயமற்றவனாய், தாம் - அந்த உபாயத்வத்தை, தேவே து - எம்பெருமானிடமே, ந்யஸ்யேத் - அநுஸந்திக்க வேண்டும்.

கீதை பதினெட்டு அத்தியாயங்களின் பரம ஸாரப்பொருள்:
32)    ஏகாந்தாத்யந்தாஸ்யைகரதிஸ்தத்பமாப்நுயாத் ।
தத்ப்ராநமிம் ஶாஸ்த்ரமிதி ீதார்ஸங்்ரஹঃ ॥ 32

ஏகாத்யாத்யந்த தாஸ்யைக ரதி - எம்பெருமானுடைய முகமலர்த்தியையே பயனாகக் கொண்டதாய், எல்லாக் காலத்திலும் செய்யப்படுவதான அடிமையையே விரும்புகின்ற பரமைகாந்தி, தத்பதம் - (அவ்வடிமைக்குறுப்பாக) எம்பெருமானுடைய திருவடிகளை, ஆப்நுயாத் - அடைவான்; இதம் ஶாஸ்த்ரம் - இந்த கீதா ஶாஸ்த்ரம், தத்ப்ரதாநம் - சேதனனைப் பரமைகாந்தியாக்குவதை முக்கியமான குறிக்கோளாகக் கொண்டது. இதி - இவ்வண்ணமாக, கீதார்த்த ஸங்க்ரஹ: - கீதையின் பொருளை சுருக்கிக் கூறும் 'கீதார்த்த ஸங்க்ரஹம்' என்னும் நூல் நிறைவு பெறுகிறது.

ஆளவந்தார் திருவடிகளே ஶரணம்
எம்பெருமானார் திருவடிகாளே ஶரணம்
ஜீயர் திருவடிகளே ஶரணம்

No comments:

Post a Comment

க₃த்₃யத்ரயம்

ஶ்ரீமதே ராமாநுஜாய நம : எம்பெருமானார் அருளிச் செய்த க ₃ த் ₃ யத்ரயம் [ ஶரணாக ₃ தி க ₃ த் ₃ யம் , ஶ்ரீரங்க ₃ க ₃ த் ₃ யம் , ஶ்ரீவை...