ஶ்ரீரஸ்து
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
ஶ்ரீபராசரபட்டர் அருளிச் செய்த
அஷ்டஶ்லோகீ
ஶ்ரீகாஞ்சீ பிரதிவாதி பயங்கரம்
இயற்றிய ஸாரார்த்த தீபிகையுடன் கூடியது.
1969
अष्टश्लोकी
अकारार्थो
विष्णुर्जगदुदयरक्षाप्रलयकृत्
मकारार्थो जीवस्तदुपकरणं
वैष्णवमिदम् ।
उकारोऽनन्यर्हं
नियमयति सम्बन्धमनयोः
त्रयीसारस्त्र्यात्मा
प्रणव इममर्थं समदिशत् ॥ १॥
मन्त्रब्रह्मणि
मध्यमेन नमसा पुंसःस्वरूपङ्गतिः
गम्यं शिक्षितमीक्षितेन
पुरतःपश्चादपि स्थानतः ।
स्वातन्रयं
निजरक्षणं समुचिता वृत्तिश्च नान्योचिता
तस्यैवेति हरेर्विविच्य
कथितं स्वस्यापि नार्हं ततः ॥ २॥
अकारार्थायैवस्वमहमथ
मह्यं न निवहाः
नराणां नित्यानामयनमिति
नारायणपदम् ।
यमाहास्मै
कालं सकलमपि सर्वत्र सकला-
स्ववस्थास्वाविः स्युर्मम
सहजकैङ्कर्यविधयः ॥ ३॥
देहासक्तात्मबुद्धिर्यदि
भवति पदं साधु विद्यात्तृतीयं
स्वातन्त्र्यान्धो यदि
स्यात्प्रथममितरशेषत्वधीश्चेद्द्वितीयम् ।
आत्मत्राणोन्मुखश्चेन्नम
इति च पदं बान्धवाभासलोलः
शब्दं नारायणाख्यं
विषयचपलधीश्चेच्चतुर्थीं प्रपन्नः ॥ ४॥
नेतृत्वं
नित्ययोगं समुचितगुणजातं तनुख्यापनञ्चो-
पायं कर्त्तव्यभागं त्वथ
मिथुनपरं प्राप्यमेवं प्रसिद्धम् ।
स्वामित्वं
प्रार्थनां च प्रबलतरविरोधिप्रहाणं दशैतान्
मन्तारं त्रायते
चेत्यधिगतनियमः षट्पदोऽयं द्विखण्डः ॥ ५॥
ईशानाञ्जगतामधीशदयितां
नित्यानपायां श्रियं
संश्रित्याश्रयणोचिताखिलगुणस्याङ्घ्री
हरेराश्रये ।
इष्टोपायतया
श्रिया च सहितायात्मेश्वरायार्थये
कर्तुं
दास्यमशेषमप्रतिहतं नित्यं त्वहं निर्ममः ॥ ६॥
मत्प्राप्त्यर्थतया
मयोक्तमखिलं सन्त्यज्य धर्मं पुनः
मामेकं मदवाप्तये
शमणमित्यार्तोऽवसायं कुरु ।
त्वामेकं
व्यवसाययुक्तमखिलज्ञानादिपूर्णो ह्यहं
मत्प्राप्तिप्रतिबन्धकैर्विरहितं
कुर्यां शुचं मा कृथाः ॥ ७॥
निश्चित्य
त्वदधीनतां मयि सदा कर्माद्युपायान् हरे
कर्तुं त्यक्तुमपि
प्रपत्तुमनलं सीदामि दुःखाकुलः ।
एतज्ज्ञानमुपेयुषो
मम पुनस्सर्वापराधक्षयं
कर्तासीति दृढोऽस्मि ते
तु चरमं वाक्यं स्मरन्सारथेः ॥ ८॥
शाखानामुपरि
स्थितेन मनुना मूलेन लब्धात्मकः
सत्ताहेतुसकृज्जपेन सकलं
कालं द्वयेन क्षिपन् ।
वेदोत्तंसविहारसारथिदयागुम्फेन
विस्त्रम्भितः
सारज्ञो यदि कश्चिदस्ति
भुवने नाथः स यूथस्य नः ॥ ९॥
इति अष्टश्लोकी समाप्तं ॥
ஸ்ரீ:
ஆழ்வாரெம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
ஸ்ரீபராசரபட்டர் அருளிச்செய்த
அஷ்டஶ்லோகீ
(ஶ்ரீகாஞ்சீ ஸ்வாமி இயற்றிய ஸாரார்த்த தீபிகையில் பதவுரையுடன்.)
அகாரார்தோ² விஷ்ணுர்ஜக³து³த³யரக்ஷாப்ரலயக்ருʼத்
மகாரார்தோ² ஜீவஸ்தது³பகரணம் வைஷ்ணவமித³ம் ।
உகாரோঽநந்யர்ஹம் நியமயதி ஸம்ப³ந்த⁴மநயோ:
த்ரயீஸாரஸ்த்ர்யாத்மா ப்ரணவ இமமர்த²ம் ஸமதி³ஶத் ॥ 1॥
ஜகத் உதய ரக்ஷா ப்ரளய க்ருத் - ஸகல
லோகங்களுக்கும் ஸ்ருஷ்டி ஸ்திதி
ஸம்ஹாரங்களைச் செய்தருள்பவனான, விஷ்ணு: - ஸர்வவ்யாபக ஸர்வேஶ்வரன், அகாரார்த்த: - (ப்ரணவத்திலுள்ள)
அகாரத்தின் பொருள்; ஜீவ: - (ஞானத்தை வடிவாகவுடைய) ஜீவாத்மா, மகாரார்த்த: -
மகாரத்தின் பொருள்; தத் இதம் – மேற்சொன்ன இந்த
ஜீவாத்ம வஸ்துவானது, வைஷ்ணவம் உபகரணம் – எம்பெருமானுக்கே உரித்தான ஶேஷவஸ்து (என்பது லுப்த
சதுர்த்தியின் பொருள்), உகார: - (ப்ரணவத்தின் இடையிலுள்ள) உகாரமானது, அநயோ: - இந்த
ஜீவாத்ம பரமாத்மாக்களுக்குண்டான, ஸம்பந்தம்
– ஸம்பந்தத்தை, அநந்யார்ஹம் நியமயதி
– பதீபத்நீபாவமாகிற ஸம்பந்தம்போல் ஐகாந்திகமாகக் கட்டுப்படுத்துகின்றது, இமம் அர்த்தம் – ஆக இங்ஙனே
விவரிக்கப்பட்ட பொருளை, த்ரயீஸார: -
மூன்று வேதங்களினுடையவும் ஸாரபூதமாயும்,
த்ரி ஆத்மா – மூன்று
அக்ஷரமாயும் முன்று பதமாயு
மிரா நின்ற, ப்ரணவ: - ஓங்காரமானது,
ஸமதிசத் – தெரிவித்தது.
மந்த்ரப்³ரஹ்மணி மத்⁴யமேந நமஸா பும்ஸ:ஸ்வரூபங்க³தி:
க³ம்யம் ஶிக்ஷிதமீக்ஷிதேந
புரத:பஶ்சாத³பி ஸ்தா²நத: ।
ஸ்வாதந்ரயம் நிஜரக்ஷணம் ஸமுசிதா வ்ருʼத்திஶ்ச நாந்யோசிதா
தஸ்யைவேதி ஹரேர்விவிச்ய கதி²தம் ஸ்வஸ்யாபி நார்ஹம் தத: ॥ 2॥
மந்த்ரப்ரஹ்மணி – மிகச்சிறந்த மந்த்ரமாகிய திருவஷ்டாக்ஷரத்தில், மத்யமேந
– இடையிலுள்ளதாய், புரதঃ ஈக்ஷிதேந நமஸா – முன்னேயுள்ள ப்ரணவத்தை நோக்கி
அத்தோடு சேர்ந்ததான நமஸ்ஸினால்,
பும்ஸঃ - ஜீவாத்மாவினுடைய, ஸ்வரூபம் – ஸ்வரூபமானது, சிக்ஷிதம்
– சிக்ஷிக்கப்பட்டது; ஸ்தாநதঃ ஈக்ஷிதேந நமஸா – ஸ்வஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற
நமஸ்ஸினால், கதிঃ சிக்ஷிதா – உபாயம் சிக்ஷிக்கப்பட்டது; பஶ்சாத் அபி ஈக்ஷிதேந நமஸா – பின்னேயுள்ள நாராயணாய பதத்தோடு சேர்ந்த நமஸ்ஸினால், கம்யம் சிக்ஷிதம் – உபேயம் (பலன்) சிக்ஷிக்கப்பட்டது. (இப்படி சிக்ஷிக்கப்பட்டதனால் தேறின
பொருள்கள் எவையென்னில்,) ஸ்வாதந்த்ர்யம் – ஸ்வதந்த்ரமாயிருக்குந் தன்மையென்ன,
நிஜரக்ஷணம் – ஸ்வரக்ஷணமென்ன, ஸமுசிதா வ்ருத்திঃ ச – சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வ்ருத்தி யென்ன ஆகிய இவை, தஸ்ய ஹரேঃ ஏவ – அந்த எம்பெருமானுக்கே உரியவை; அந்யோசிதா ந- — மற்றையோர்க்கு உரியவையல்ல; இதி – என்று
இவ்வண்ணமாக, விவிச்ய கதிதம்
– வகுத்துக் கூறப்பட்டதாயிற்று; ததঃ – ஆதலால், ஸ்வஸ்ய
அபி அர்ஹம் ந – கீழ்ச்சொன்ன மூன்றும் அந்யருள் அந்யதமனான தனக்கும் சேர்ந்தவையல்ல (என்பது தேறிற்று.)
அகாரார்தா²யைவஸ்வமஹமத² மஹ்யம் ந நிவஹா:
நராணாம் நித்யாநாமயநமிதி நாராயணபத³ம் ।
யமாஹாஸ்மை காலம் ஸகலமபி ஸர்வத்ர ஸகலா-
ஸ்வவஸ்தா²ஸ்வாவி: ஸ்யுர்மம
ஸஹஜகைங்கர்யவித⁴ய: ॥ 3॥
அஹம் அகாரார்த்தாய ஏவ ஸ்வம் – மகாரவாச்யனான நான் அகாரவாச்யனான நாராயணனுக்கே ஶேஷபூதன் (என்று ப்ரணவார்த்தத்தை
அனுவதித்தபடி), அத – அதற்குமேல்,
அஹம் மஹ்யம் ந – நான் எனக்கு உரியேனல்லேன் (என்று நமঃ
பதார்த்தத்தை அநுவதித்தபடி), நாராயணபதம்
– நாராயணபதமானது, நராணாம் – நித்யாநாம் நிவஹாঃ (தேஷாம்) அய நம் இதி – நித்ய வஸ்துக்களினுடைய
திரள்களுக்கு ஆதார பூதன் நாராயணன் (என்று தத்
புருஷ ஸமாஸத்தாலும்), நராணாம் நித்யாநாம்
நிவஹாঃ
(யஸ்ய) அயநம் – நித்ய வஸ்துக்களினுடைய
திரள்களை ஆதாரமாக வுடையவன் நாராயணன் (என்று பஹுவ்ரீஹி
ஸமாஸத்தாலும்), யம் ஆஹ – யாவனொரு எம்பெருமானைச்
சொல்லுகிறதோ, அஸ்மை – அந்த எம்பெருமானுக்கு, காலம் ஸகலம் அபி – எல்லாக் காலங்களிலும், ஸர்வத்ர – எல்லா விடங்களிலும், ஸகலாஸு அவஸ்தாஸு – எல்லா அவஸ்தைகளிலும், மம – என்னுடைய,
ஸஹஜ கைங்கர்ய விதயঃ – இயற்கையான அடிமைத் தொழில்கள், ஆவிஸ்ஸ்யுঃ – விளையக்கடவன; (என்று சரமபதத்தின்
அர்த்தத்தை அநுவதித்தபடி).
தே³ஹாஸக்தாத்மபு³த்³தி⁴ர்யதி³ ப⁴வதி பத³ம் ஸாது⁴ வித்³யாத்த்ருʼதீயம்
ஸ்வாதந்த்ர்யாந்தோ⁴ யதி³ ஸ்யாத்ப்ரத²மமிதரஶேஷத்வதீ⁴ஶ்சேத்³த்³விதீயம் ।
ஆத்மத்ராணோந்முக²ஶ்சேந்நம இதி ச பத³ம் பா³ந்த⁴வாபா⁴ஸலோல:
ஶப்³த³ம் நாராயணாக்²யம் விஷயசபலதீ⁴ஶ்சேச்சதுர்தீ²ம் ப்ரபந்ந: ॥ 4॥
தேஹ ஆஸக்த ஆத்ம புத்திঃ பவதி
யதி – தேஹத்திலே யூன்றின ஆத்மபுத்தியை யுடையவனாகில் [தேஹாத்ம ப்ரமமுடையவனாகில்],
த்ருதீயம் பதம் ஸாது வித்யாத் – ப்ரணவத்தில் மூன்றாவது
பதமான மகாரத்தை நன்கு நோக்கக் கடவன்; ஸ்வாதந்த்ர்ய அந்தঃ ஸ்யாத்
யதி – ஸ்வத்ந்த்ராத்ம ப்ரமமுடையவனாகில், ப்ரதமம் பதம் வித்யாத் – முதல் பதமான (லுப்த சதுர்த்தியோடு கூடின) அகாரத்தை நோக்கக் கடவன்; இதர ஶேஷத்வதீঃ சேத் – அந்யசேஷத்வ ஜ்ஞானமுடையவனாகில், த்விதீயம் பதம் வித்யாத் – இரண்டவது பதமான உகாரத்தை நோக்கக் கடவன்; ஆத்மத்ராண உந்முகঃ சேத் – ஸ்வரக்ஷணத்தில் ஊக்கமுடையவனாகில்,
நமঃ இதி பதம் வித்யாத் – நமঃ என்கிற நடுப்பதத்தை நோக்கக் கடவன்; பாந்தவாபாஸ லோலঃ – ஆபாஸ பந்துக்களிடத்தில் ஆஸக்தியுடையவன், நாராயணாக்க்யம் சப்தம் வித்யாத் – நாராயண பதத்தை நோக்கக் கடவன்; விஷய சபலதீঃ சேத் – சப்தாதி விஷயங்களில்
ஊன்றின புத்தியையுடையவனாகில், சதுர்த்தீம் வித்யாத் – நாராயண பதத்தின்
மேலுள்ள வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன். (இப்படியெல்லாம் நோக்கவேண்டிய
அதிகாரி யாவனென்னில்) ப்ரபந்நঃ – ப்ரபந்நாதிகாரி.
நேத்ருʼத்வம் நித்யயோக³ம் ஸமுசிதகு³ணஜாதம் தநுக்²யாபநஞ்சோ-
பாயம் கர்த்தவ்யபா⁴க³ம் த்வத² மிது²நபரம் ப்ராப்யமேவம் ப்ரஸித்³த⁴ம் ।
ஸ்வாமித்வம் ப்ரார்த²நாம் ச ப்ரப³லதரவிரோதி⁴ப்ரஹாணம் த³ஶைதாந்
மந்தாரம் த்ராயதே சேத்யதி⁴க³தநியம: ஷட்பதோ³ঽயம் த்³விக²ண்ட:³ ॥ 5॥
நேத்ருத்வம் – புருஷகாரத்வத்தையும், நித்யயோகம் – ஒரு நொடிப்பொழுதும்
விட்டுப் பிரியாத நித்ய ஸம்ஶ்லேஷத்தையும்,
ஸமுசித குண ஜாதம் – இன்றியமையாத திருக் குணங்களின் திரளையும், தநுக்க்யாபநம் ச – திருமேனியைக் காட்டுதலையும், உபாயம்
– உபாயத்தையும், கர்த்தவ்ய பாகம் – சேதநன் செய்யவேண்டியதான
அத்யவஸாயத் தையும், மிதுநபரம் ப்ராப்யம் – இருவருமான சேர்த்தியை விஷயீகரித்ததான கைங்கர் யத்தையும், ஸ்வாமித்வம்
– ஸர்வ ஶேஷித்வத்தையும், ப்ரார்த்தநாம் ச – கைங்கர்ய ப்ரார்த்தநையையும்,
ப்ரபல தர விரோதி ப்ரஹாணம் – மிகவும் பிரபலமான
உபேய விரோதியைக் கழிப்பதையும், அதிகத நிகமঃ – வேத ப்ரதீதமாயும்,
த்வி கண்டঃ
– இரண்டு கண்டங்களை யுடையதாயும், ஷட்பதঃ – ஆறு பதங்களையுடையதாயு மிருக்கிற, அயம் – இந்த த்வய மந்த்ரமானது, ஏதாந்தச
– ஆகிய இந்த பத்து அர்த்தங்களையும், மந்தாரம் – மனனஞ் செய்கிற உத்தமாதிகாரியை, த்ராயதே இதி – காப்பாற்றுகின்ற தென்று, ஏவம் ப்ரஸித்தம் – இங்ஙனே ப்ரஸித்தமாயிரா நின்றது.
ஈஶாநாஞ்ஜக³தாமதீ⁴ஶத³யிதாம் நித்யாநபாயாம் ஶ்ரியம்
ஸம்ஶ்ரித்யாஶ்ரயணோசிதாகி²லகு³ணஸ்யாங்க்⁴ரீ ஹரேராஶ்ரயே ।
இஷ்டோபாயதயா ஶ்ரியா ச ஸஹிதாயாத்மேஶ்வராயார்த²யே
கர்தும் தா³ஸ்யமஶேஷமப்ரதிஹதம் நித்யம் த்வஹம் நிர்மம: ॥ 6॥
ஜகதாம் ஈஶாநாம் – உலகங்களுக்குத் தலைவியாய், அதீச தயிநாம் – ஸர்வேஶ்வர னுக்கு ப்ராண வல்லபையாய்,
நித்யாநபாயாம் – ஒருபோதும் விட்டுப் பிரியாதவளயிருக் கின்ற, ஶ்ரியம்
– பெரிய பிராட்டியாரை, ஸம்ஶ்ரித்ய
– புருஷகாரமாகப் பற்றி, ஆஶ்ரயணோசித அகில
குணஸ்ய – சரணவரணத்திற்குப் பாங்கான ஸகல குணங்களையு முடைய, ஹரேঃ
– எம்பெருமானுடைய, அங்க்ரீ – திருவடிகளை,
இஷ்ட உபாய தயா ஆஶ்ரயே – இஷ்ட ஸாதநமாகப்
பற்றுகிறேன். (ஆக பூர்வ கண்டார்த்தத்தை
அநுஸந்தித்தபடி.) ஶ்ரியாசஸஹிதாய ஆத்மேஶ்வராய – பெரிய பிராட்டியாரோடு கூடி யிருந்துள்ள ஸர்வஶேஷியான நாராயணனுக்கு, நிர்மமঃ அஹம் – கைங்கர்யத்தில் களையான மமகாரம் சிறிதுமில்லாத
அடியேன், அஶேஷம் தாஸ்யம் – ஸகல வித கைங்கரியத்தையும், அப்ரதிஹதம் – இடையூறின்றி,
நித்யம் – இடைவீடின்றி, கர்த்தும்
– செய்யும் பொருட்டு, அர்த்தயே
– ப்ரார்த்திக்கிறேன். (இது உத்தர கண்டார்த்தத்தை
அநுஸந்தித்தபடி.)
மத்ப்ராப்த்யர்த²தயா மயோக்தமகி²லம் ஸந்த்யஜ்ய த⁴ர்மம் புந:
மாமேகம் மத³வாப்தயே ஶமணமித்யார்தோঽவஸாயம் குரு ।
த்வாமேகம் வ்யவஸாயயுக்தமகி²லஜ்ஞாநாதி³பூர்ணோ ஹ்யஹம்
மத்ப்ராப்திப்ரதிப³ந்த⁴கைர்விரஹிதம் குர்யாம் ஶுசம் மா க்ருʼதா:² ॥ 7॥
மத்ப்ராப்தி அர்த்ததயா – என்னைப் பெறுகைக்கு உபாயமாக, மயா உக்தம்
– (உனது மனத்தை சோதிப்பதற்காக)
என்னாலே சொல்லப்பட்ட, அகிலம் தர்மம் ஸம்த்யஜ்ய
– ஸகல தர்மங்களையும் விட்டு, மாம் ஏகம் புந:
ஆர்த்த – என்னொருவனையே குறித்து ஆர்த்தி மிகுந்தவனாய், மதவாப்தயே சரணம் இதி அவஸாயம் – என்னைப் பெறுகைக்கு நானே உபாயமென்கிற அத்யவஸாயத்தை,
குரு – செய்வாயாக; ஏவம் வ்யவஸாய யுக்தம் த்வாம்
– இத்தகைய அத்யவஸாயத்தோடு கூடிய
உன்னை, ஜ்ஞானாநிபூர்ண: அஹம் – ஞானம்
முதலிய குணங்கள் நிறைந்த நான், மத்ப்ராப்தி ப்ரதிபந்தகை: விரஹிதம் குர்யாம்
– என்னைப் பெறுகைக்கு இடையூறாயுள்ள பாபங்கள் அற்றவனாகச் செய்யக் கடவேன்; சுசம் மா க்ருதா: - துக்கங் கொள்ளாதே.
நிஶ்சித்ய த்வத³தீ⁴நதாம் மயி ஸதா³ கர்மாத்³யுபாயாந் ஹரே
கர்தும் த்யக்துமபி ப்ரபத்துமநலம் ஸீதா³மி து:³கா²குல: ।
ஏதஜ்ஜ்ஞாநமுபேயுஷோ மம புநஸ்ஸர்வாபராத⁴க்ஷயம்
கர்தாஸீதி த்³ருʼடோ⁴ঽஸ்மி தே து சரமம் வாக்யம்
ஸ்மரந்ஸாரதே:² ॥ 8॥
ஹே ஹரே! – எம்பெருமானே!, மயி ஸதா
த்வத் அதீந்த்ரம் நிஶ்சித்ய – அடியேன் எப்போதும்
தேவரீருக்கே அதீனமான ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகளை
யுடையவ னென்பதை நிஶ்சயித்து, கர்மாதி உபாயாந் – கருமயோகம் முதலிய உபாயங்களை,
கர்த்தும் – செய்வதற்கும், த்யக்தும் அபி – விடுவதற்கும், ப்ரபத்தும்
– ப்ரபத்தி பண்ணுவதற்கும், அநலம்
– அஸமர்த்தனாய், து:க்காகுல: ஸீதாமி – மிகவும் துக்கப்படா
நின்றேன்; ஸாரதே: தே – பார்த்தஸாரதியாய் நின்ற தேவரீருடைய, சரமம் வாக்யம் – கடைசியான வாக்யத்தை, ஸ்மரந்
– ஸ்மரித்தவனாய்க்கொண்டு, ஏதத் ஜ்ஞாநம் உபேயுஷ: மம – பகவானே உபாயமென்று
துணிந்திருக்கையாகிற இந்த அத்யவஸாயத்தைப் பெற்றிருக்கு
மடியேனுக்கு, ஸர்வ அபராத க்ஷயம் கர்த்தாஸி இதி – ஸகல பாப நிவ்ருத்தியையும் தேவரீரே பண்ணித்தர வல்லீரென்று கொண்டு, த்ருடঃ அஸ்மி – துக்கமற்று நிர்ப்பரனாயிருக்கின்றேன்.
ஶாகா²நாமுபரி ஸ்தி²தேந மநுநா மூலேந லப்³தா⁴த்மக:
ஸத்தாஹேதுஸக்ருʼஜ்ஜபேந ஸகலம் காலம் த்³வயேந க்ஷிபந் ।
வேதோ³த்தம்ஸவிஹாரஸாரதி²த³யாகு³ம்பே²ந விஸ்த்ரம்பி⁴த:
ஸாரஜ்ஞோ யதி³ கஶ்சித³ஸ்தி பு⁴வநே நாத:² ஸ யூத²ஸ்ய ந: ॥ 9॥
No comments:
Post a Comment