ஶ்ரீமதே ராமானுஜாய நம:
ஶ்ரீமத் வரவரமுநயே நம:
[1]மஹாபாரதம்
விராட பர்வம்
ஐந்தாவது
அத்யாயம்
பாண்டவப்ரவேச
பர்வம் (தொடர்ச்சி)
युधिष्ठिर उवाच। 4-5-0x (2989)
कर्माण्युक्तानि युष्माभिर्यानि तानि चरिष्यथ।
मम चापि यथा बुद्धिरुचिता हि विनिश्चयात् ॥ 4-5-1 (28291)
யுதிஷ்டிரர், “உங்களால்
எந்தக்கார்யங்கள் சொல்லப்பட்டனவோ
அந்தக் கார்யங்களை
நீங்கள் அநுஷ்டித்து
வாருங்கள். எனக்கும் நிச்சயத்தினால்
உசிதமான ஒரு
புத்தி உண்டாகியிருக்கிறது.
पुरोहितोऽयमस्माकमग्निहोत्राणि रक्षतु।
सूतपौरोगवैः सार्धं द्रुपदस्य निवेशने ॥ 4-5-2 (28292)
நம்முடைய
புரோஹிதரான இந்தத்தௌம்யர்
த்ருபதனுடைய அரண்மனையில்
ஸூதர்களோடும் சமையற்காரர்களோடுங்கூட
அக்னிஹோத்ரங்களைப் பாதுகாக்கட்டும்.
इन्द्रसेनमुखाश्चेमे रथानादाय केवलान् ।
यान्तु द्वारवतीं शीघ्रमिति मे वर्तते मतिः ॥ 4-5-3 (28293)
இந்த்ரஸேனனை
முதன்மையாகக் கொண்ட
இவர்கள் வெற்று
ரதங்களை நடத்திக்கொண்டு
சீக்கிரம் த்வாரகையை
அடையவேண்டுமென்று எனக்குத்
தோன்றுகிறது.
इमाश्च नार्यो द्रौपद्याः सर्वाश्च परिचारिका
।
पाञ्चालानेव गच्छन्तु सूतपौरोगवैः सह ॥ 4-5-4
(28294)
த்ரௌபதியினுடைய
பரிசாரிகைகளான இந்தப்
பெண்களனைவரும் ஸூதர்களோடும்
சமையற்காரர்களோடும் பாஞ்சால
தேசத்துக்கே செல்லட்டும்.
सर्वैरपि च वक्तव्यं न प्राज्ञायन्त पाण्डवाः ।
अर्धरात्रे महात्मानो भिक्षादान्ब्राह्मणानपि।
गता ह्यस्मानपाहाय सर्वे द्वैतवनादिति ॥ 4-5-5 (28295)
எல்லோரும் ‘பாண்டவர்களனைவரும்
நடுநிசியில் எங்களையும்
பிக்ஷையெடுத்துப் புசிக்கின்ற
மஹாத்மாக்களன ப்ராஹ்மணர்களையும்
விட்டுவிட்டு த்வைதவனத்தி
னின்றும் எங்கேயோ
புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அறியக்கூடவில்லை’ என்று
சொல்லவேண்டும்” என்று
கட்டளையிட்டார்.
वैशम्पायन उवाच। 4-5-6x (2990)
एवं तेऽन्योन्यमामन्त्र्य कर्माण्युक्त्वा पृथक्पृथक्।
धौम्यमामन्त्रयामासुः स च तान्मन्त्रमब्रवीत् ॥ 4-5-6 (28296)
வைசம்பாயனர்
சொல்லலானார்: இவ்வாறு
அந்தப் பாண்டவர்கள்
தனித்தனியாக அவரவர்களுடைய
செய்கைகளை எடுத்துக்கூறிப்
பரஸ்பரம் விடைபெற்றுக்கொண்டு, பிறகு, தௌம்யரிடம்
விடைபெற்றுக்கொண்டார்கள்.
तानन्वशात्स धर्मात्मा सर्वधर्मविशेषवित् ।
धौम्यः पुरोहितो राजन्पाण्डवान्पुरुषर्षभान्
॥ 4-5-7 (28297)
அரசரே! தர்மத்தில்
மனத்தைச் செலுத்தினவரும்
எல்லாத்தர்மங்களின் விஶேஷங்களையும்
அறிந்தவரும் புரோஹிதருமான
அந்தத் தௌம்யரும்
புருஷ்ஶ்ரேஷ்டர்களான அந்தப்
பாண்டவர்களுக்கு நீதியை
உபதேசிக்கத் தொடங்கினார்.
धौम्य उवाच। 4-5-8x (2991)
विदितं वै यथा सर्वं लोके वृत्तमिदं नृप।
विदिते चापि वक्तव्यं सुहृद्भिरनुरागतः ॥ 4-5-8 (28298)
தௌம்யர்
சொல்லலானார்: “ராஜரே! உலகத்திலுள்ள
இந்த நடக்கையெல்லாம்
எவ்விதமாயிருக்கின்றதென்பதை நீர்
அறிந்திருக்கிறீர். அறிந்திருந்தாலும், நண்பர்கள்
ப்ரீதியினால் சொல்லத்தக்கதே.
अतोऽहमभिवक्ष्यामि हेतुमात्रं निबोधत।
हन्तेमां राजवसतिं राजपुत्रा ब्रवीमि वः।
यथा राजकुलं प्राप्य चरन्प्रोष्य न रिष्यति ॥ 4-5-9 (28299)
ஆதலால், நான் (உங்களுக்குச்
சிலவிஷயங்களைச்) சொல்லப்போகிறேன். காரணத்தைமாத்ரம்
அறிந்து கொள்ளுங்கள். ஓ! ராஜபுத்ரர்களே! எவ்வாறு
அயல்தேசம் சென்று
ராஜக்ருஹத்தை அடைந்து
ஸஞ்சரிப்பவன் கெடுதியடையாமலிருப்பனோ
அவ்விதமான இந்த
ராஜகிருஹத்தில் வஸிக்கும்
உபாயத்தை உங்களுக்கு
நான் அன்பினால்
சொல்லுகிறேன்.
दुर्वासमेव कौरव्य जातेन कुरुवेश्मनि ।
अमानितेन मानार्ह गूढेन परिवत्सरम् ॥ 4-5-10 (28300)
குருகுலத்தில்
உதித்தவரே! கௌரவிக்கத்தக்கவரே! கௌரவர்களுடைய
அரண்மனையில் பிறந்த
ஒருவன் கௌரவிக்கப்படாமல்
ஒருவருஷ காலம்
மறைந்து வாஸஞ்செய்வதென்பது
மிக்க கஷ்டமே.
दिष्टद्वारो लभेद्द्रष्टुं राजस्वेषु न विश्वसेत्।
न चानुशिष्याद्राजानमपृच्छन्तं कदाचन ॥ 4-5-11 (28301)
உள்ளே
வரலாமென்று அனுமதி
பெற்றுக்கொண்டு அரசனைப்
பார்க்கவேண்டும். அரசர்களுடைய
பொருள்களில் நம்பிக்கை
வைக்கலாகாது. தன்னைக்
கேளாமலிருக்கையில் அரசனுக்கு
ஒருபொழுதும் நீதி
சொல்லக்கூடாது.
तूष्णीं त्वेनमुपासीत काले समभिपूजयेत् ॥ 4-5-12 (28302)
பேசாமலிருந்து
கொண்டே அவனை
உபாஸிக்கவேண்டும். தகுந்த
ஸமயத்தில் அவனைப்
புகழவேண்டும்.
असूयन्ति हि राजानो जनाननृतवादिनः।
तथैव चावमन्यन्ते मन्त्रिणं वादिनं मृषा ॥ 4-5-13 (28303)
பொய்சொல்லுகின்ற
ஜனங்களிடத்தில் அரசர்கள்
அஸூயைப்படுவார்கள். அவ்வாறே
பொய் சொல்லுகின்ற
மந்த்ரியை அரசர்கள்
அவமதிப்பார்கள்.
विदिते चास्य कुर्वीत कार्याणि सुलघून्यपि।
एवं विचरतो राज्ञि न क्षतिर्जायते क्वचित् ॥ 4-5-14 (28304)
மிகவும்
அல்பமாயினும் கார்யங்களை
அரசனிடத்தில் தெரிவித்துச்
செய்யவேண்டும். இவ்வாறு
அரசனிடத்தில் பழகுபவனுக்கு
ஒருபொழுதும் குறை
நேரிடாது.
पाण्डवाग्निरयं लोके सर्वशस्त्रमयो महान ।
भर्ता गोप्ता च भूतानां राजा पुरुषविग्रहः ॥ 4-5-15 (28305)
ഭര്താ
ഗോപ്താ ച ഭൂതാനാം രാജാ പുരുഷവിഗ്രഹഃ ॥
ஏ! பாண்டவரே! உலகத்தில்
பிராணிகளை (உணவு முதலியவற்றால்) போஷிக்கின்றவனும் (ஆபத்தினின்று) காப்பாற்றுகின்றவனும்
எல்லாச் சஸ்த்ரங்களாலும்
நிறைந்தவனுமான அரசன்
மனிதவடிவங்கொண்ட ஒரு
பெருநெருப்பு.
सर्वात्मना वर्तमानं यथा दोषो न संस्पृशेत् ।
राजानमुपतिष्ठन्तं तस्य वृत्तं निबोधत ॥ 4-5-16 (28306)
அரசனை
அடுத்திருப்பவனை எவ்விதத்திலும்
தோஷம் எவ்வாறு
அணுகாதோ அவ்வாறான
அவனுடைய நடக்கையைத்
தெரிந்துகொள்ளுங்கள்.
क्षत्रियं चैव सर्पं च ब्राह्मणं च बहुश्रुतम् ।
नावमन्येत मेधावी कृशानपि कदाचन ॥ 4-5-17 (28307)
புத்திசாலியான
ஒருவன் க்ஷத்திரியனையும்
ஸர்ப்பத்தையும் அதிகமாகக்
கற்றறிந்த ப்ராஹ்மணனையும், அசக்தர்களாயிருந்தாலும்,
ஒருபொழுதும் அலக்ஷ்யஞ்செய்யக் கூடாது.
एतत्रयं च पुरुषं निर्दहेदवमानितम्।
राजा तस्माद्बुधैर्नित्यं पूजनीयः प्रयत्नतः ॥ 4-5-18 (28308)
இம்மூவரும்
அவமதிக்கப்பட்டால் மனிதனை எரிப்பர். ஆதலால், கற்றறிந்தவர்கள் எப்பொழுதும் அரசனை முயற்சியுடன் பூஜிக்கவேண்டும்.
नातिवर्तेत मर्यादां पुरुषो राजसंमतः।
व्यवहारं पुनर्लोके मर्यादां पण्डिता विदुः ॥ 4-5-19 (28309)
அரசனால் ஸம்மதிக்கப்பட்ட
மனிதன் வரம்புகடந்து செல்லக்கூடாது. பண்டிதர்கள் உலகத்தில்
(அவனவனுக்குரிய) மர்யாதையைத்தான் வ்யவஹாரமென்று
அறிந்திருக்கிறார்கள்.
न हि पुत्रं न नप्तारं न भ्रातरमरिन्दम।
समतिक्रान्तमर्यादं पूजयन्ति पराधिपाः ॥ 4-5-20 (28310)
பகைவர்களை
அடக்குபவரே! அரசர்கள், புத்ரனானாலும்,
பேரனானாலும் ஸஹோதரனானாலும் வரம்புகடந்து நடப்பவனைப் புகழமாட்டார்கள்.
गच्छन्नपि परां भूतिं भूमिपालनियोजितः।
जात्यन्ध इव मन्येत मर्यादामनुचिन्तयन् ॥ 4-5-21 (28311)
அரசனால் ஒருவித
அதிகாரங்கொடுக்கப்பட்டவன் மிக்கசெல்வத்தையடைந் திருந்தாலும் தனக்குரிய நிலைமையை ஆலோசித்துப்
பிறவிக்குருடனைப்போலத் தன்னைக் கருதவேண்டும்.
धृष्टो द्वारं सदा पश्यन्न च राजसु विश्वसेत् ।
तदेवासनमन्विच्छेद्यत्र नाभिलषेत्परः ॥ 4-5-22 (28312)
அரசனிடத்தில்
பழகுபவன் தைர்யசாலியாக எப்பொழுதும் வாயிலைப் பார்த்துக்கொண்டு அரசர்களிடத்தில் நம்பிக்கை
இல்லாதவனாயிருக்கவேண்டும். அரசர்களிடத்தில் நம்பிக்கை வைக்கக்கூடாது.
எந்த ஆஸனத்தில் பிறன் பிரியம்வைக்க மாட்டானோ அந்த ஆஸனத்தையே விரும்பவேண்டும்.
यत्रोपविष्टः संकल्पं नोपहन्याद्बलीयसः ।
तदासनं राजकुले ईप्सेत पुरुषो वसन् ॥ 4-5-23 (28313)
ராஜக்ருஹத்தில்
வஸிக்கின்ற மனிதன் எந்த ஆஸனத்தில் உட்கார்ந்தால் மிக்கபலவானான ஒருவனுடைய மனம் வருந்தாதோ
அந்த ஆஸனத்தை விரும்பவேண்டும்.
यथैनं यत्र चासीनं शङ्कयेद्दुष्टचरिणम् ।
न तत्रोपविशेज्जातु यो राजवसतिं वसेत् ॥ 4-5-24 (28314)
ராஜக்ருஹத்தில்
வஸிப்பவன் எந்த இடத்தில் எவ்வாறு உட்கார்ந்திருந்தால், ‘இவன் துஷ்டகார்யம் செய்கிறவன்’ என்று மற்றவன் ஸந்தேஹிப்பனோ
அந்த இடத்தில் அவ்வாறு உட்காரக்கூடாது.
स्वभूमौ काममासीत तिष्ठेद्वा राजसन्निधौ।
न त्वेवासनमन्यस्य प्रार्थयेत कदाचन ॥ 4-5-25 (28315)
தனக்குரிய
இடத்தில் இஷ்டப்படி இருக்கலாம்; அல்லது அரசனுடைய சமீபத்தில் நிற்கலாம்.
பிறருடைய ஆஸனத்தை ஒருபொழுதும் விரும்பவேகூடாது.
परासनगतं ह्येनं परस्य परिचारकाः ।
परिषद्यपकर्षेयुः परिहास्येत शत्रुभिः ॥ 4-5-26 (28316)
வேறொருவனுடைய
ஆஸனத்தில் உட்கார்ந்தால் இவனை அவனுடைய வேலைக்காரர்கள் ஸபையில் இழுத்து விடுவார்கள்; சத்ருக்களால் பரிஹஸிக்கப்படுவான்.
नित्यं विप्रतिषिद्धं तत्पुरस्तादासनं मतम् ।
अर्थार्थं हि यदा भृत्यो राजानमुपतिष्ठते ॥ 4-5-27 (28317)
வேலைக்காரன்
தனத்துக்காக அரசனை அடைந்திருத்தலால் எப்பொழுதும் அரசனுக்கு முன்னிலையிலிருப்பது கூடாதென்று (நீதிமான்கள்) எண்ணுகிறார்கள்.
दक्षिणं वाऽथ वामं वा भागमाश्रित्य पण्डितः।
तिष्ठेद्विनीतवद्राजन्न पुरस्तान्न पृष्ठतः।
राक्षिणामात्तशस्त्राणां
पश्चात्स्थानं विधीयते ॥ 4-5-28
(28318)
ராஜரே! கற்றறிந்தவன், அரசனுடைய வலப்பக்கத்தையோ இடப்பக்கத்தையோ
அடைந்து விநயமுள்ளவன்போல நிற்கவேண்டும். அரசனுக்கு முன்புறத்திலாவது
பின்புறத்திலாவது நிற்கக்கூடாது. பின்புறத்திலுள்ள இடமானது அரசனைக்
காப்பாற்றும் ஆயுதபாணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
मातृगोत्रे स्वगोत्रे वा नाम्ना शीलेन वा पुनः ।
संग्रहार्थं मनुष्याणां नित्यमाभाषिता भवेत् ॥ 4-5-29 (28319)
மனிதர்களை
வசப்படுத்துவதன் பொருட்டுத் தாய்வம்சத்திலாவது தகப்பன்வம்சத்தி லாவதுள்ள (பெரியோர்களுடைய) நாமதேயத்தையும் நன்னடக்கையையும் எப்பொழுதும்
சொல்லவேண்டும்.
पूज्यमानोपि यो राज्ञा नरो न प्रतिपूजयेत्।
नैनमाराधयेज्जातु शास्ता शिष्यानिवालसान् ॥ 4-5-30 (28320)
அரசனால் பூஜிக்கப்பட்டும்
எந்தமனிதன் அவ்வரசனுக்கு ப்ரதிபூஜை செய்யவில்லையோ, அந்த மனிதனை,
அரசன், ஆசார்யன், சோம்பேறிகளான
சிஷ்யர்களைக் கௌரவியாததுபோல, ஒருபொழுதும் கௌரவப்படுத்தமாட்டான்.
नास्य युग्यं न पर्यङ्कं नासनं न रथं तथा।
आरोहेत्संमतोऽस्मीति यो राजवसतिं वसेत् ॥ 4-5-31 (28321)
ராஜக்ருஹத்தில்
வஸிப்பவன், ‘நான் அரசனுடைய அன்புக்குப்பாத்ரமா யிருக்கிறேன்’
என்று அரசனுடைய வாஹனத்திலாவது கட்டிலிலாவது ஆஸனத்திலாவது ரதத்திலாவது
ஏறக்கூடாது.
यो वै गृहेभ्यः प्रवसन्क्रियमाणमनुस्मरन् ।
उत्थाने नित्यसंकल्पो निस्तन्द्रीः संघतात्मवान् ॥ 4-5-32 (28322)
எந்தமனிதன், வீட்டினின்று வெளிப்பட்டுச் செய்யவேண்டிய கார்யத்தை நினைத்துக்கொண்டு அபிவிருத்தியில்
உறுதியான எண்ணமுள்ளவனும் சோம்பலற்றவனும் மனத்தை அடக்கினவனுமாகி,
परीतः क्षुत्पिपासाभ्यां विहाय परिदेवनम् ।
दुःखेन सुखमन्विच्छेद्यो राजवसतिं वसेत् ॥ 4-5-33 (28323)
பசிதாகங்களால்
வருத்தப்பட்டாலும் ரோதனஞ்செய்யாமல், கஷ்டத்தினால் ஸுகத்தை
யடையவேண்டுமென்று விரும்புவனோ அவன் ராஜக்ருஹத்தில் வஸிக்கவேண்டும்.
अन्येषु प्रेष्यमाणेषु पुरस्ताद्धीर उत्पतेत् ।
करिष्याम्यहमित्येव यः स राजसु सिध्यति ॥ 4-5-34 (28324)
(அரசனால்)
மற்றவர்கள் ஏவப்படும்போது, ‘நான் செய்வேன்’
என்று தைர்யத்துடன் எந்தமனிதன் முற்படுவனோ அந்தமனிதனே அரசர்களிடத்தில்
ஸித்தியைப் பெறுவான்.
उष्णे वा यदि वा शीते रात्रौ वा यदि वा दिवा ।
आदिष्टो न विकल्पेत यः स राजसु सिद्ध्यति ॥ 4-5-35 (28325)
எந்த மனிதன்
வெயிலிலோ குளிரிலோ பகலிலோ இரவிலோ ஏவப்பட்டால் ஆலோசியாமல் கார்யங்களைச்செய்வனோ அவன்
அரசர்களிடத்தில் ஸித்தியை அடைகிறான்.
नैव प्राप्तोऽवमन्येत सदाऽमात्यो विशारदः ।
मानं प्राप्तो न हृष्येत न व्यथेच्च विमानितः ।
ऋदुर्मृदुः सत्यवादो यः स
राजसु सिद्ध्यति ॥ 4-5-36
(28326)
ராஜக்ருஹத்திலிருக்கும்
ஸமர்த்தனான மந்திரியை ஒருபொழுதும் அவமதிக்கக்கூடாது. கௌரவப்படுத்தப்பட்டாலும்
ஸந்தோஷிக்கக் கூடாது. அவமானப்படுத்தப்பட்டாலும் மனவருத்தமடையக்
கூடாது. எவன் ருஜுபுத்தியுள்ள வனும் ம்ருதுத்தன்மையுள்ளவனும்
உண்மைபேசுபவனுமாயிருக்கிறானோ அவன் அரசர்களிடத்தில் கார்யஸித்தியைப் பெறுகிறான்.
नैव लाभाद्धर्षमियान्न व्यथेच्च विमानितः।
समः पूर्णतुलेव स्याद्यो राजवसतिं वसेत् ॥ 4-5-37 (28327)
ராஜக்ருஹத்தில்
வஸிப்பவன் லாபத்தினால் ஸந்தோஷமடையக்கூடாது; அவமதிக்கப்பட்டாலும்
மனவருத்தமடையக்கூடாது. (ஸுகதுக்கங்களில்) சரியான நிறைபாரமுள்ள தராசுபோல் ஸமனாயிருக்கவேண்டும்.
अल्पेच्छो धृतिमान्राजञ्छायेवानुगतः सदा।
दक्षः प्रदक्षिणो धीरः स राजवसतिं वसेत् ॥ 4-5-38 (28328)
அரசரே! ராஜக்ருஹத்தில் வஸிப்பவன் அதிக ஆசை இல்லாதவனும் தைர்யமுள்ளவனும் நிழல்போல எப்பொழுதும்
அரசனை அனுசரிப்பவனும் ஸமர்த்தனும் அதிகமான ஈகையுடையவனும் பண்டிதனுமாயிருக்கவேண்டும்.
इतिहासपुराणज्ञः कुशलः सत्कथासु च।
वदान्यः सत्यवाक्वापि यो राजवसतिं वसेत् ॥ 4-5-39 (28329)
ராஜக்ருஹத்தில்
வஸிப்பவன் இதிஹாஸங்களையும் புராணங்களையுமறிந்தவனும் நல்லகதைகளைச் சொல்வதில் ஸாமர்த்தியமுள்ளவனும்
மிக்க கொடையுள்ளவனும் ஸத்யவாக்குள்ளவனுமாயிருக்கவேண்டும்.
न मिथो भाषितं राज्ञो मनुष्येषु प्रकाशयेत् ।
यं चासूयन्ति राजानः पुरुषं नो वदेच्च तम् ॥ 4-5-40 (28330)
ரஹஸ்யத்தில்
சொல்லப்பட்ட அரசனுடைய வார்த்தையை மனிதர்களிடம் வெளிப்படுத்தக்கூடாது. அரசர்கள், எவனிடத்தில் அஸூயையைப் பாராட்டுகிறார்களோ அவனைப்பற்றிப்
பேசக்கூடாது.
नैषां कर्मसु संयुक्तो धनं किंचिदुपस्पृशेत्।
प्राप्नुयादाददानो वा बन्धं वा वधमेव वा ॥ 4-5-41 (28331)
அரசர்களுடைய
கார்யங்களில் ஏவப்பட்டவன் கொஞ்சமேனும் (குடிகளிடமிருந்து)
பரிதானத்தை வாங்கக்கூடாது; வாங்குகின்றவன் சிறைச்சாலையையோ,
அல்லது மரணத்தையோ அடைவான்.
हुल्योपस्थितयोः पश्य मम चान्यस्य चोभयोः ।
अन्यं पुष्णाति मद्धीनमिति धीरो न मुह्यति ॥ 4-5-42 (28332)
‘ஸமமாகச் சேவகத்துக்கு
வந்திருக்கின்ற நான் மற்றொருவன் எங்கள் இருவருக்குள் என்னைக்காட்டிலும் குறைந்த மற்றவனை
அரசன் போஷிக்கிறான்; பார்!’ என்று அறிவுள்ளவன்
மயக்கமடையக்கூடாது.
श्रेयांसं हि परित्यज्य वैद्यं कर्मणिकर्मणि ।
पापीयांसं प्रकुर्वीरञ्शीलमेषां तथाविधम् ॥ 4-5-43 (28333)
ஒவ்வொரு கார்யத்திலும்
அரசர்கள் மிகச்சிறந்த அறிவுள்ளவனை விட்டுவிட்டு அதிகமாகக் கீழ்நிலைமையிலிருப்பவனை ஏற்படுத்துவார்கள். அரசர்களுடைய தன்மை அப்படிப்பட்டது.
नैषां दारेषु कुर्वीत प्राज्ञो मैत्रीं कथंचन ।
रक्षणं तु न सेवेत यो राजवसतिं वसेत् ॥ 4-5-44 (28334)
ராஜக்ருஹத்தில்
வஸிக்கின்ற கற்றறறிந்தவனான மனிதன் அரசர்களுடைய மனைவிகளிடம் எவ்விதத்தாலும் நேசம் பாராட்டக்கூடாது. அந்த ஸ்த்ரீகளைக் காக்கும் வேலையையும் தான் ஏற்றுக்கொள்ளக்கூடாது.
यदा ह्यभिसमीक्षेत प्रेष्यं स्त्रीभिः समागतम् ।
बुद्धिः परिभवेत्तस्य राजा शङ्केत वा पुनः ॥ 4-5-45 (28335)
அரசன் தன்
ஸ்த்ரீகளோடு சேர்ந்து நிற்கின்ற வேலைக்காரனைக் கண்ணால் பார்க்கும்பொழுது அரசனுடைய புத்தியானது
கலங்கும். அரசன் ஸந்தேஹப்பட்டாலும் படுவான்.
शङ्कितस्य पुनः स्त्रीषु कस्य भृत्यस्य भूमिपः।
जीवितं साधु मन्येत प्रकृतिस्थो बलात्कृतः ॥ 4-5-46 (28336)
தன் நிலைமையிலுள்ளவனும் (க்ரோதத்தினால்) பலாத்காரம் செய்யப்பட்டவனுமான அரசன் ஸ்த்ரீவிஷயத்தில்
ஸந்தேஹத்துக்கிடமுள்ள எந்த வேலைக்காரனுடைய உயிர்வாழ்க்கையை நல்லதென்று நினைப்பான்?
हर्षवस्तुषु चाप्यत्र वर्तमानेषु केषु चित्।
नातिगाढं प्रहृष्येत तान्येवास्यानुपूजयेत् ॥ 47 ॥ 4-5-47
(28337)
ராஜக்ருஹத்திலிருக்கின்ற
ஸந்தோஷத்துக்கேதுவான சில வஸ்துக்களின் விஷயங்களில் தான் அதிகமாக ஸந்தோஷம் பாராட்டக்கூடாது. அந்த வஸ்துக்களையே அரசனிடத்தில் புகழவேண்டும்.
हर्षाद्धि मन्दः पुरुषः स्वैरं कुर्वीत वैकृतम् ।
तदस्यान्तःपुरे वृत्तमीक्षां कुर्वीत भूमिपः ॥ 4-5-48 (28338)
புத்திக்குறைவுள்ள
மனிகன் ஸந்தோஷத்தினால் தன் இஷ்டப்படி கெட்டகார்யத்தைச் செய்துவிடுவான். ஆதலால், அந்தப்புரத்தில் இவனுடைய நடக்கையை அரசன் கவனித்துப்பார்ப்பான்.
अन्तःपुरगतं ह्येनं स्त्रियः क्लीबाश्च सर्वतः ।
वर्तमानं यथावच्च कुत्सयेयुरसंशयम् ॥ 4-5-49 (28339)
அந்தப்புரத்தை
அடைந்து கபடவேஷமின்றியிருக்கின்ற இந்த வேலைக்காரனை ஸ்த்ரீகளும் எல்லா நபும்ஸகர்களும்
ஸம்சயமில்லாமல் அலக்ஷ்யம் செய்வார்கள்.
तस्माद्गम्भीरमात्मानं कृत्वा हर्षं नियम्य च।
नित्यमन्तःपुरे राज्ञो न वृत्तं कीर्तयेद्बहिः ॥ 4-5-50 (28340)
ஆதலால், தன்னைக் கம்பீர ஸ்வபாவமுள்ளவனாக ஏற்படுத்திக்கொண்டும், ஸந்தோஷத்தை உள்ளடக்கிக்கொண்டும் அரசனுடைய அந்தப்புரத்தில் நாள்தோறும் நடக்கும்
வ்ருத்தாந்தத்தை வெளியிடாமலுமிருக்க வேண்டும்.
यथा हि सुमहामन्त्रो भिद्यमानो हरेत्सुखम्।
एवमन्तःपुरे वृत्तं श्रूयमाणं बहिर्भवेत् ॥ 4-5-51 (28341)
மிகச்சிறந்த
மந்த்ராலோசனையானது வெளிப்ப்ட்டால் ஸுகத்தைக் கெடுப்பதுபோலவே அந்தப்புரத்திலுள்ள வ்ருத்தாந்தமானது
வெளியிலுள்ளவர்களால் கேட்கப்பட்டால் ஸுகத்தைக் கெடுத்துவிடும்.
या तु वृत्तिरबाह्यानां बाह्यानामपि केवलम्।
उभयेषां समस्तानां शृणु राजोपजीविनाम् ॥ 4-5-52 (28342)
அந்தரங்கர்களும்
வெளியிலுள்ளவர்களுமான இரண்டுவகை வேலைக்காரர்களுடைய வ்ருத்தாந்தத்தையும் நீர் கேளும்.
न स्त्रियो जातु मन्येत बाह्ये वाभ्यन्तरेऽपि वा ।
अनुजीविनां नरेन्द्रस्तु सृजेद्धि सुमहद्भयम् ॥ 4-5-53 (28343)
வெளியிலுள்ளவனாவது
உள்ளிலுள்ளவனாவது ஒரு பொழுதும் ஸ்த்ரீகளை நினைக்கக்கூடாது. அரசனோவென்றால் அந்த வேலைக்காரர்களுக்கு அதிகமான பயத்தை உண்டுபண்ணுவான்.
मत्वाऽस्य प्रियमात्मानं राजरत्नानि राजवत्।
अराजा राजयोग्यानि नोपयुञ्जीत पण्डितः ॥ 4-5-54 (28344)
அரசனல்லாத
கற்றறிந்த ஒருவன் அரசனுக்கு வேண்டினவனென்று எண்ணிக்கொண்டு அரசன் அணியத்தக்க உத்தம ரத்னங்களை
அரசனைப்போலத் தான் உபயோகிக்கக்கூடாது.
अराजानं हि रत्नानि राजकान्तानि राजवत्।
भुञ्जानं तं नरं राजा न तितिक्षेत जीवितम् ॥ 4-5-55 (28345)
அரசனுக்கு
ப்ரியமான ரத்னங்களை அரசனைப்போல் அனுபவிக்கின்ற அரசனல்லாத மனிதனை அரசன் உயிரோடு வைப்பதற்குப்
பொறுக்க மாட்டான்.
तस्मादव्यक्तभोगेन भोक्तव्यं भूतिमिच्छता ।
तुल्यभोगं हि राजा तु भृत्यं कोपेन योजयेत् ॥ 4-5-56 (28346)
ஆதலால், ஐஶ்வர்யத்தை விரும்புகின்ற மனிதன் ப்ரகாசமில்லாத போகத்துடன் கூடியவனாக ஸுகங்களை
அனுபவிக்கவேண்டும். ராஜாவானவன் தனக்குச் சமமான போகத்துடன்கூடின
வேலைக்காரனைக் கோபத்துக்காளாக்குவான்.
न चापत्येन संप्रीतिं राज्ञः कुर्वीत केनचित् ।
अधिक्षिप्तमनर्थं च द्वेष्यं च परिवर्जयेत् ॥ 4-5-57 (28347)
அரசனுடைய புத்ரனோடு
எவ்விதகாரணத்தினாலும் நேசம் பாராட்டக்கூடாது. அரசனால் அவமதிக்கப்பட்டவனையும்
பயனற்றவனையும் சத்ருவையும் தூரத்தில் விலக்கவேண்டும்.
एतां हि सेवमानस्य नरसीमां चतुर्विधाम्।
द्विधा विच्छिद्यते मूलं राजमूलोपसेविनः ॥ 4-5-58 (28348)
இந்த நான்குவிதமான
மனுஷ்ய ஸ்திதியை அனுசரிக்கின்ற ராஜசேவகனிடத்தில் அரசனுடைய ப்ரீதிக்குக் காரணமானது இரண்டாகத்
துண்டிக்கப்படுகிறது.
एतैस्तु विपरीता या नरसीमा नराधमैः ।
तथा कुर्वीत संसर्गं न विरोधं कथंचन ॥ 4-5-59 (28349)
இந்த நராதமர்களைக்காட்டிலும்
வேறானவர்களும் இதற்கு மாறான நிலைமையை அனுஷ்டிக்கிறவர்களுமான மனிதர்களோடு சேர்க்கையை
அடையவேண்டும். விரோதத்தை எவ்விதத்தினாலும் அடையக்கூடாது.
बन्धुभिश्च नरेन्द्रस्य बलवद्भिश्च मानवैः ।
साधु मन्येत संसर्गं न विरोधं कथंचन ॥ 4-5-60 (28350)
ராஜபந்துக்களோடும்
பலமுள்ளவர்களான மனிதர்களோடும் சேர்க்கையை நல்லதாக எண்ணவேண்டும். எவ்விதத்தினாலும் விரோதத்தைத் தேடிக்கொள்ளக்கூடாது.
ताभ्यां तु नरसीमाभ्यां विरुद्धस्याल्पतेजसः ।
प्रथमं छिद्यते मूलं द्वितीयं जायते भयम् ॥ 4-5-61 (28351)
முற்கூறப்பட்ட
இரண்டுவிதமான நிலைமைகளுக்கும் விரோதமாக நடக்கும் பலக்குறைவுள்ள ஒருமனிதனுக்கு முதலில்
ராஜப்ரீதிக்கு எது மூலமோ அது துணிக்கப்படும். இரண்டாவது பயமும் நேரும்.
उद्धतानां च यो वेषः कुहकानां च यो भवेत् ।
राजवेषं च विस्पष्टं सेवमानो न वर्धते।
इतराभ्यां तु वेषाभ्यां परिहास्येत बान्धवैः ॥ 4-5-62 (28352)
கர்வமுள்ளவர்களுடைய
வேஷத்தையும் கபடமுள்ளவர்களுடைய வேஷத்தையும் அரசனுடைய வேஷத்தையும் வெளிப்படையாகத் தரிப்பவன்
வ்ருத்தி அடையமாட்டான். ராஜவேஷந்தவிர மற்ற இரண்டு வேஷங்களையும் தரிப்பவன்
பந்துக்களால் பரிஹாஸஞ் செய்யப்படுவான்.
अपुंभिश्चैव पुंभिश्च स्त्रीभिः स्त्रीदर्शिभिर्नरैः ।
शक्ये सति न संभाषां जातु कुर्वीत कर्हिचित् ॥ 4-5-63 (28353)
புருஷர்களல்லாத
புருஷர்களோடும், ஸ்த்ரீகளோடும், ஸ்த்ரீகளைப்
பார்க்கின்ற ஸ்வபாவமுள்ள புருஷர்களோடும், கூடுமானால் ஓரிடத்திலும்
ஒருபொழுதும் ஸம்பாஷணஞ் செய்யக்கூடாது.
प्रतिसंभाषमाणो हि त्रिभिरेतैरचेतनः।
श्येनः पेशीमिवादत्ते पुरुषो भूतिमात्मनः ॥ 4-5-64 (28354)
இம்மூவர்களோடும்
பேசுகின்ற அறிவற்ற மனிதன், கழுகானது மாம்ஸத்தை அபஹரிப்பதுபோலத் தன்னுடைய
ஐஶ்வர்யத்தை [3]அபஹரிக்கிறான்.
ये च राज्ञाऽभिसत्कारं लभेरन्कारणादिव।
तैश्च सामन्तदूतैश्च न संसज्येत कर्हिचित् ॥ 4-5-65 (28355)
(காரணமில்லாமல்)
காரணமிருப்பதுபோல் அரசனிடமிருந்து ஸம்மானத்தைப் பெறுகிறவர்களோடும்,
சிற்றரசர்களுடைய தூதர்களோடும் ஒருபொழுதும் சேர்க்கை பெறலாகாது.
न चान्याचरितां भूमिमसंदिष्टो महीपतेः।
उपसेवेत मेधावी यो राजवसतिं वसेत् ॥ 4-5-66 (28356)
ராஜக்ருஹத்தில்
வஸிக்கின்ற புத்திசாலியான மனிதன் அரசனால் உத்தரவளிக்கப்படாமல் மற்றொருவனுடைய ஸ்தானத்தை
அடையக்கூடாது.
न च संदर्शने राज्ञां प्रबन्धमभिसंजपेत् ।
अपि चैतद्दरिद्राणां व्यलीकस्थानमुत्तमम् ॥ 4-5-67 (28357)
அரசர்கள் முன்னிலையில்
தற்புகழ்ச்சி செய்யக்கூடாது. அப்படிப் புகழ்வதானது தரித்திரர்களுக்கும்
அதிகமான அப்ரியத்துக்குக் காரணமாகும்.
अर्थकामा च या नारी राजानं स्यादुपस्थिता।
अनुजीवी तथायुक्तां निध्यायन्दुष्यते च सः ॥ 4-5-68 (28358)
பொருளில் ஆசைகொண்டு
எந்தஸ்த்ரீ அரசனை அடைந்திருக்கிறாளோ அப்படிப்பட்டவளை ஆசையுடன் பார்க்கின்ற வேலைக்காரன்
கெடுதியை அடைவான்.
तस्मान्नारीं न निध्यायेत्तथायुक्तां
विचक्षणः।
तथा क्षुतं च वातं च निष्ठीवं चाचरेच्छनैः ॥ 4-5-69 (28359)
ஆதலால், அவ்விதமாக அடுத்திருக்கின்ற ஸ்த்ரீயை ஸமர்த்தன் உற்றுப்பார்க்கக்கூடாது.
அவ்வாறே, தும்மலையும் அபானவாயுவையும் காறி எச்சிலுமிழ்வதையும்
மெதுவாகச் செய்யவேண்டும்.
न नर्मसु हसेज्जातु मूढवृत्तिर्हि सा स्मृता ।
स्मितं तु मृदुपूर्वेण दर्शयीत प्रसादजम् ॥ 4-5-70 (28360)
பரிஹாஸவார்த்தைகளில்
ஒருபொழுதும் சிரிக்கக்கூடாது. அப்படிச் செய்வதானது அறிவீனனுடைய
செய்கையென்று எண்ணப்படுகின்றது. (அரசனுடைய) ப்ரீதியினாலுண்டான சிரிப்பை மெதுவாக வெளியில் காட்டவேண்டும்.
न चाक्षौ न भुजौ जातु न च वाक्यं समाक्षिपेत्।
न च तिर्यगवेक्षेत चक्षुर्भ्यां सम्यगाचरेत् ॥ 4-5-71 (28361)
ஒருகாலத்தும்
உதடுகளை அசைக்கக்கூடாது. கைகளையும் ஆட்டக்கூடாது. அரசனுடைய வார்த்தையை ஆக்ஷேபிக்கக்கூடாது. குறுக்காகப்
பார்க்கவும் கூடாது. நன்றாகக் கண்களால் பார்க்கவேண்டும்.
भ्रुकुटिं च न कुर्वीत न चाङ्गुष्ठैर्लिखेन्महीम्।
न च गाढं विजृम्भेत जातु राज्ञः समीपतः ॥ 4-5-72 (28362)
அரசனுக்கருகில்
புருவத்தை நெறிக்கலாகாது. கட்டைவிரல்களால் பூமியைக் கீறலாகாது.
ஒருபொழுதும் நன்றாகக் கொட்டாவி விடக்கூடாது.
न प्रशंसेन्ना चासूयेत्प्रियेषु च हितेषु च ।
स्तूयमानेषु वा तत्र दूष्यमानेषु वा पुनः ॥ 4-5-73 (28363)
அந்த அரசனுடைய
முன்னிலையில் ப்ரியர்களும் ஹிதர்களும் புகழப்பட்டாலும் இகழப்பட்டாலும் தான் புகழவுங்
கூடாது; அஸூயைபாராட்டவுங்கூடாது.
अथ संदृश्यमानेषु प्रियेषु च हितेषु च।
श्रूयमाणेषु वाक्येषु वर्णयेदमृतं यथा ॥ 4-5-74 (28364)
ப்ரியர்களையும்
ஹிதர்களையும் பார்க்கும்பொழுதும் (அவர்களுடைய) வாக்யங்களைக் கேட்கும்பொழுதும் அம்ருதம்போல் அவர்களை வர்ணிக்க வேண்டும்.
न राज्ञः प्रतिकूलानि सेवमानः सुखी भवेत्।
पुत्रो वा यदि वा भ्राता यद्यप्यात्मसमो भवेत् ॥ 4-5-75 (28365)
அரசனுக்கு
ப்ரதிகூலகார்யங்களைச் செய்பவன் புத்ரனானாலும் ப்ராதாவானாலும் அரசனுக்குச்சமானனானாலும்
ஸுகமுடையவனாகான்.
अप्रमत्तो हि राजानं रञ्जयेच्छीलसंपदा।
उत्थानेन तु मेधावी शौचेन विविधेन च ॥ 4-5-76 (28366)
புத்திசாலியானவன்
ஜாக்ரதையுடன் அரசனைப் பூர்ணமான நல்ல ஒழுக்கத்தாலும் முயற்சியினாலும் பற்பலவிதமான சுத்தியினாலும்
ஆனந்தப்படுத்தவேண்டும்.
स्नानं हि वस्त्रशुद्धिश्च शारीरं शौचमुच्यते।
असक्तिः प्राकृतार्थेषु द्वितीयं शौचमुच्यते ॥ 4-5-77 (28367)
ஸ்நானஞ் செய்வதும்
சுத்தவஸ்த்ரம் தரிப்பதும் சரீர ஸம்பந்தமான சுத்தியென்று சொல்லப்படுகின்றன. அற்பமான வஸ்துக்களில் பற்றுதலற்றிருப்பது இரண்டாவது சுத்தியென்று சொல்லப்படுகின்றது.
राजा भोजो विराट् सम्राट् क्षत्रियो भूपतिर्नृपः ।
य एतैः स्तूयते शब्दैः कस्तं नार्चितुमर्हति ॥ 4-5-78 (28368)
எவன் ராஜா, போஜன், விராட், ஸாம்ராட்,
க்ஷத்ரியன், பூபதி, ந்ருபன்
என்ற இவ்விதசப்தங்களால் புகழப்படுகிறானோ அவனை எவன்தான் பூஜிக்கத்தக்கவனல்லன்?
तस्माद्भक्त्या च युक्तः सन्सत्यवादी जितेन्द्रियः ।
मेधावी धृतिमान्प्राज्ञः संश्रयीत महीपतिम् ॥ 4-5-79 (28369)
ஆதலால், புத்தியுள்ளவன், பக்தியுள்ளவனும், உண்மைபேசுகிறவனும் இந்திரியங்களை அடக்கினவனும் மேதாவியும் தைர்யமுள்ளவனுமாக
அரசனை ஆஶ்ரயிக்கவேண்டும்.
कृतज्ञं प्राज्ञमक्षुद्रं दृढभक्तिं जितेन्द्रियम् ।
वर्धमानं स्थितं स्थाने संश्रयीत महीपतिम् ॥ 4-5-80 (28370)
நன்றியறிவுள்ளவனும்
கற்றறிந்தவனும் அல்பஸ்வபாவமில்லாதவனும் உறுதியான அன்புள்ளவனும் இந்திரியங்களை அடக்கினவனும்
வ்ருத்தியடைகின்றவனும் நல்லநிலைமையிலிருக்கின்றவனுமான அரசனை அடுக்கவேண்டும்.
एष वः समुदाचारः समुद्दिष्टो यथाविधि ।
यथार्थान्संप्रपत्स्यन्ते पार्थ राजोपजीविनः ॥ 4-5-81 (28371)
பார்த்தரே! ராஜஸேவகர்கள் ஐஶ்வர்யத்தைப் பெறுவதற்குரிய நல்லொழுக்கமானது சாஸ்த்ரமுறைப்படி
உங்களுக்கு என்னால் உரைக்கப்பட்டது.
संवत्सरमिमं तावदेवंशीला बुभूषथः ।
ततः स्वविषयं प्राप्य यथाकामं चरिष्यथ ॥ 4-5-82 (28372)
இந்த ஒருவருஷமுழுமையும்
இவ்விதமான ஸ்வபாவமுள்ளவர்களாயிருங்கள். அதற்குப் பிறகு,
உங்களுடைய தேசத்தை யடைந்து இஷ்டப்படி வஸிப்பீர்கள்’ என்று கூறினார்.
वैशम्पायन उवाच। 4-5-83x (2992)
तं तथेत्यब्रुवन्पार्थाः पितृकल्पं यशस्विनम्।
प्रहृष्टाश्चाभिवाद्यैनमुपातिष्ठन्परंतपाः ॥ 4-5-83 (28373)
வைசம்பாயனர்
சொல்லலானார்: சத்ருக்களைத்
தபிக்கச் செய்கின்ற
பார்த்தர்கள், கீர்த்தியுடையவரும்
பிதாவுக்கொப்பானவருமான அந்தத்
தௌம்யரைப்பார்த்து, “அவ்வாறே
ஆகட்டும்” என்று சொல்லி
ஸந்தோஷமுடையவர்களாக அவரை
வந்தனஞ் செய்து
புறப்பட்டார்கள்.
तेषां प्रतिष्ठमानानां मन्त्रांश्च ब्राह्मणोऽजपत्।
भवाय राज्यलाभाय वीर्याय विजयाय च ॥ 4-5-84 (28374)
பிராம்மணரான
தௌம்யர் புறப்படும்
அவர்களுக்கு மங்களத்தின்
பொருட்டும், ராஜ்யலாபத்தின்
பொருட்டும், வீர்யத்தின்
பொருட்டும், விஜயத்தின்
பொருட்டும் மந்திரங்களை
ஜபித்தார்.
ततोऽब्रवीदसौ विप्रो वाचमाशीः प्रयुज्य च।
स्वद्रव्यप्रतिलाभाय शत्रूणां मर्दनाय च ॥ 4-5-84 (28375)
பிறகு
அந்த ப்ராஹ்மணர், அவர்கள்
த்ரவ்யங்களை மீண்டு
அடைதற்கும், சத்ருக்களுடைய
விநாசத்திற்கும் ஆசீர்வாதங்களைச்
செய்து,
स्वस्ति वोस्तु शिवः पन्था द्रक्ष्यामि पुनरागतान्।
इत्युक्ता हृष्टमनसो गुरुणा तेन धीमता। 4-5-85 (28376)
“உங்களுக்கு
க்ஷேமமுண்டாகட்டும்; வழியானது
மங்களகரமாகட்டும். மறுபடியும்
திரும்பிவருகின்ற உங்களை
நான் பார்ப்பேன்” என்ற
வார்த்தையைச் சொன்னார்.
युधिष्ठिरमुखाः सर्वे
गन्तुं समुपचक्रमुः ॥ ॥ 4-5-86
(28377)
புத்திமானான
அந்த தௌம்யாசார்யர்
இவ்வாறு சொல்ல, யுதிஷ்டிரரைத்
தலைவராகக் கொண்ட
பாண்டவர்களனைவரும் ஸந்தோஷமடைந்த
மனத்துடன் செல்லத்
தொடங்கினார்கள்.
इति
श्रीमन्महाभारते विराटपर्वणि पाण्डवप्रवेशपर्वणि पञ्चमोऽध्यायः ॥ 5 ॥
ஶ்ரீராமாயணம்
அயோத்யா காண்டம்
ஸர்க்கம்-100
ராமன் பரதனைக்
குசலப்ரஶ்னம் பண்ணுதலும், அதன்
மூலமாக ராமன்
ராஜநீதியை உபதேசித்தலும்:
जटिलं चीरवसनं प्राञ्जलिं पतितं भुवि |
ददर्श रामो दुर्दर्शं युगान्ते भास्करं यथा ||
२-१००-१
jaTilaM chiiravasanaM praaJNjaliM patitaM bhuvi |
dadarsha raamo durdarshaM yugaante bhaaskaraM yathaa ||
2-100-1
ஜடைகளைத் தரித்து மரவுரி
உடுத்துக் கை
கூப்பித் தரையில்
வீழ்ந்து ப்ரளய
காலத்து ஸூர்யன்
போல் கண்கொண்டு
காணமுடியாதிருக்கிற பரதனை
ராமன் கண்டனன்.
कथं चिदभिविज्ञाय विवर्णवदनं कृशम् |
भ्रातरं भरतं रामः परिजग्राह बाहुना ||
२-१००-२
kathaM chidabhivijJNaaya vivarNavadanaM kR^isham |
bhraataraM bharataM raamaH parijagraaha baahunaa || 2-100-2
பிறகு ராமன், முகவொளி
மழுங்கி இளைத்திருப்பது
பற்றிப் பரதனைக்
கண்டவுடனே தெரிந்துகொள்ள
முடியாமல் சிறிது
நேரங் கழித்துக்
கஷ்டப்பட்டறிந்து கொண்டு
கைகளால் வாரியெடுத்துக்
கொண்டனன்.
आघ्राय रामः तम् मूर्ध्नि परिष्वज्य च राघवः |
अन्के भरतम् आरोप्य पर्यपृग्च्छत् समाहितः ||
२-१००-३
aaghraaya raamaH tam muurdhni pariShvajya ca raaghavaH |
anke bharatam aaropya paryapR^igcchhat samaahitaH || 2-100-3
ரகுகுல அலங்காரனாகிய அந்த
ராமன் அப்பரதனை
உச்சிமோந்து கட்டியணைத்து
மடியில் உட்காரவைத்து
மனவூக்கத்துடன் அவனைப்
பார்த்துக் கேட்டனன்.
क्व नु ते अभूत् पिता तात यद् अरण्यम् त्वम्
आगतः |
न हि त्वम् जीवतः तस्य वनम् आगन्तुम् अर्हसि ||
२-१००-४
kva nu te abhuut pitaa taata yad araNyam tvam aagataH |
na hi tvam jiivataH tasya vanam aagantum arhasi || 2-100-4
‘என்னப்பனே! நீ
அரண்யத்திற்கு வந்தனையே! உன்
தந்தை எங்குப்
போயினர்? அவர் பிழைத்திருக்கையில்
நீ அரண்யம்
வரக்கூடாதல்லவா?’
चिरस्य बत पश्यामि दूराद् भरतम् आगतम् |
दुष्प्रतीकम् अरण्ये अस्मिन् किम् तात वनम्
आगतः || २-१००-५
cirasya bata pashyaami duuraad bharatam aagatam |
duShpratiikam araNye asmin kim taata vanam aagataH ||
2-100-5
‘நெடுநாள் கழித்து
இவ்வரண்யத்திற்கு வெகுதூரத்திலுள்ள
கேகய நகரத்தினின்றும்
பரதன் வரக்கண்டனன். ஸந்தோஷம். தேஹம்
மிகவும் ஒளிமாறியிருக்கையால்
அடையாளந் தெரியாமலிருக்கிறது. என்னப்பனே! நீ
வனத்திற்கு எப்படி
வந்தனை?’
कच्चिद्धारयए तात राजा यत्त्वमिहागतः |
कच्चिन्न दीनः सहसा राजा लोकान्तरं गतः ||
२-१००-६
kachchiddhaarayae taata raajaa yattvamihaagataH |
kachchinna diinaH sahasaa raajaa lokaantaraM gataH ||
2-100-6
‘மன்னவர் பிழைத்திருப்பாராயின்
நீ இவ்விடம்
வரப்பொறுக்கமாட்டாரே. நீ
இவ்விடம் வந்ததனால்
ஸந்தேஹமாயிருக்கின்றது. இப்பொழுது
அவர் பிழைத்திருக்கிறாரல்லவா? ராஜா
துக்கத்தினால் லோகாந்தரஞ்
செல்லாதிருக்கின்றரா?
कच्चित्सौम्य नते राज्यं भ्रष्ठं बालस्य
शाश्वतम् |
कच्चिछुश्रूषसे तात पितरं सत्यविक्रमम् ||
२-१००-७
kachchitsaumya nate raajyaM bhraShThaM baalasya shaashvatam
|
kachchichhushruuShase taata pitaraM satyavikramam || 2-100-7
அழகிய ஸ்வபாவமுடையவனே! நீ
பாலகனாகையால் வல்லமையின்றிச்
சாஶ்வதமான ராஜ்யத்தை
இழக்காதிருக்கின்றாயா? உண்மையான
பராக்ரமமுடைய தந்தைக்குச்
சுச்ரூஷை செய்கின்றாயா?
कच्चिद् दशरथो राजा कुशली सत्य सम्गरः |
राज सूय अश्व मेधानाम् आहर्ता धर्म निश्चयः ||
२-१००-८
kaccid dasharatho raajaa kushalii satya samgaraH |
raaja suuya ashva medhaanaam aahartaa dharma nishcayaH ||
2-100-8
தசரதமஹாராஜா சொன்னவார்த்தை
தவறாதவர், ராஜஸூயமும் அஶ்வமேதமுஞ்
செய்தவர்; தர்மத்தில் திடமான
மனவூக்கமுடையவர்; அப்படிப்பட்ட
அம்மன்னவர் க்ஷேமமா?
स कच्चिद् ब्राह्मणो विद्वान् धर्म नित्यो
महा द्युतिः |
इक्ष्वाकूणाम् उपाध्यायो यथावत् तात पूज्यते ||
२-१००-९
sa kaccid braahmaNo vidvaan dharma nityo mahaa dyutiH |
ikShvaakuuNaam upaadhyaayo yathaavat taata puujyate ||
2-100-9
அப்பா! ப்ராஹ்மணர்களில்
தலைவரும் எல்லாமுணர்ந்தவரும்
தர்மத்தில் நிலைநின்றவரும்
மிகுந்த ப்ரஹ்மதேஜஸ்ஸுடையவரும்
இக்ஷ்வாகு வம்சத்தரசர்களுக்குக்
குலகுருவுமாகிய வஸிஷ்டமாமுனியை
முன்போல் பூஜித்து
வருகின்றாயா?
सा तात कच्चिच् च कौसल्या सुमित्रा च
प्रजावती |
सुखिनी कच्चिद् आर्या च देवी नन्दति कैकयी ||
२-१००-१०
saa taata kaccic ca kausalyaa sumitraa ca prajaavatii |
sukhinii kaccid aaryaa ca devii nandati kaikayii || 2-100-10
அப்பனே! முன்பு துக்கித்திருந்த
கௌஸல்யை க்ஷேமமா? நற்பிள்ளையைப்
பெற்ற ஸுமித்ரையும்
ஸுகமா? பூஜ்யையான கைகேயி
தேவியும் ராஜ்யம்பெற்று
ஸந்தோஷமுற்றிருக்கிறாளல்லவா?
कच्चिद् विनय सम्पन्नः कुल पुत्रो बहु श्रुतः
|
अनसूयुर् अनुद्रष्टा सत्कृतः ते पुरोहितः ||
२-१००-११
kaccid vinaya sampannaH kula putro bahu shrutaH |
anasuuyur anudraShTaa satkR^itaH te purohitaH || 2-100-11
வணக்கமுடையவரும் நற்குலத்தில்
பிறந்தவரும் பலபேரிடத்தில்
பல விசேஷார்த்தங்களைக்
கேட்டவரும் அஸூயையற்றவரும்
வஸிஷ்டர் உபதேசித்த
அர்த்தங்களை நன்குணர்ந்தவருமாகிய
உன் புரோஹிதரை (அல்லது
வஷிஷ்ட குமாரரான
ஸுயஜ்ஞரை) நன்கு பூஜித்து
வருகின்றாயா?
कच्चिद् अग्निषु ते युक्तो विधिज्नो मतिमान्
ऋजुः |
हुतम् च होष्यमाणम् च काले वेदयते सदा ||
२-१००-१२
kaccid agniShu te yukto vidhijno matimaan R^ijuH |
hutam ca hoShyamaaNam ca kaale vedayate sadaa || 2-100-12
சாஸ்ரங்களை யுணர்ந்தவரும்
மிகுந்த மதியமைந்தவரும்
கபடமறியாதவரும் அக்னிஹோத்ர
கார்யங்களில் ஏற்பட்டவருமாகிய
உன் புரோஹிதர்
அந்தந்தக் காலங்களில்
நடத்தின ஹோமங்களையும்
நடத்தவேண்டிய ஹோமங்களையும்
எப்போதும் உனக்குத்
தெரிவிக்கின்றரா?
कच्चिद्देवान्पित्रून् मातृ़र्गुरून्पितृसमानपि।
वृद्धांश्च तात वैद्यांश्च ब्राह्मणांश्चाभिमन्यसे || २-१००-१३
वृद्धांश्च तात वैद्यांश्च ब्राह्मणांश्चाभिमन्यसे || २-१००-१३
kachchiddevaan pitR^uun bhR^itvaanguruun pitR^isamaanapi |
vR^iddhaaMshcha taata vaidyaaMshcha
braahmaNaaMshchaabhimanyase || 2-100-13
அப்பா! நீ தேவதைகளையும்
தாய்தந்தையர்களையும் ஆசார்யர்களையும்
தந்தையைப்போன்ற பந்துக்களையும்
மூப்பினர்களையும் பண்டிதர்களையும்
ப்ராஹ்மணர்களையும் அவரவர்க்குரியபடி
நடந்து பூஜித்து
வருகின்றாயல்லவா?
इषु
अस्त्र वर सम्पन्नम् अर्थ शास्त्र विशारदम् |
सुधन्वानम्
उपाध्यायम् कच्चित् त्वम् तात मन्यसे || २-१००-१४
iShu astra vara sampannam artha shaastra vishaaradam |
sudhanvaanam upaadhyaayam kaccit tvam taata manyase ||
2-100-14
அப்பா! மந்த்ரமில்லாத
உயர்ந்த பாணங்களும்
மந்த்ரத்துடன் கூடிய
திவ்யாஸ்த்ரங்களும் நீதி
சாஸ்த்ரத்தில் வல்லமையும்
அமைந்த ஸுதந்வரென்னும்
உபாத்யாயரையும் வெகுமானிக்கிறாயா?
कच्चिद् आत्म समाः शूराः श्रुतवन्तो जित
इन्द्रियाः |
कुलीनाः च इन्गितज्नाः च कृताः ते तात
मन्त्रिणः || २-१००-१५
kaccid aatma samaaH shuuraaH shrutavanto jita indriyaaH |
kuliinaaH ca ingitajnaaH ca kR^itaaH te taata mantriNaH ||
2-100-15
உனக்கு நிகரானவர்களும்
சூரர்களும் நூல்களையுணர்ந்தவர்களும்
புலன்களை வென்றவர்களும்
நற்குலத்தில் பிறந்தவர்களும்
முகத்தைப் பார்த்தவுடனே
மனக்கருத்தையறியுந் திறமுடையவர்களுமான புருஷர்களை
மந்த்ரிகளாக வைத்துக்கொண்டிருக்கிறயா?
मन्त्रो
विजय मूलम् हि राज्नाम् भवति राघव |
सुसम्वृतो
मन्त्र धरैर् अमात्यैः शास्त्र कोविदैः || २-१००-१६
mantro vijaya muulam hi raajnaam bhavati raaghava |
susamvR^ito mantra dharair amaatyaiH shaastra kovidaiH || 2-100-16
ரகுகுலகுமாரனே! நீதிசாஸ்த்ரத்தில்
வல்லவர்களும் ஆலோசித்த
விஷயத்தை வெளிவிடாமல்
மறைக்குந் தன்மையுடையவர்களுமான
மந்த்ரிகளுடன் ஏகாந்தத்தில்
செய்யப்பட்டதும் நன்கு
மறைக்கப்பட்டதுமான ஆலோசனையே
அரசர்களுக்கு வெற்றியைக்
கொடுப்பதல்லவா?
कच्चिन्
निद्रा वशम् न एषि कच्चित् काले विबुध्यसे |
कच्चिन्
च अपर रात्रिषु चिन्तयस्य् अर्थ नैपुणम् || २-१००-१७
kaccin nidraa vasham na eShi kaccit kaale vibudhyase |
kaccin ca apara raatriShu cintayasy artha naipuNam ||
2-100-17
நித்திரைக்குட்படாதிருக்கிறாயா? தகுந்த
காலத்தில் விழித்துக்கொள்கிறயா? மேலும்
அர்த்தராத்ரிகளில் ஏகாந்தமாகப்
பொருள் ஸம்பாதிக்குமுபாயங்களை
ஆலோசிக்கின்றனையா?
कच्चिन्
मन्त्रयसे न एकः कच्चिन् न बहुभिः सह |
कच्चित्
ते मन्त्रितो मन्त्रो राष्ट्रम् न परिधावति || २-१००-१८
kaccin mantrayase na ekaH kaccin na bahubhiH saha |
kaccit te mantrito mantro raaShTram na paridhaavati ||
2-100-18
நீ தனியே ஆலோசனை
செய்யாமலும் பலருடன்
கலந்து ஆலோசனை
செய்யாமலும் தக்க
மந்த்ரிகளுடன் மாத்ரங்
கலந்து மந்த்ராலோசனை
செய்கின்றனையா? நீ
ஆலோசனை செய்த
விஷயம் ராஜ்யமெங்கும்
பரம்பி எல்லோர்க்கும்
தெரியாமல் வெளிப்படாதிருக்கின்றதா?
कच्चिद्
अर्थम् विनिश्चित्य लघु मूलम् महा उदयम् |
क्षिप्रम्
आरभसे कर्तुम् न दीर्घयसि राघव || २-१००-१९
kaccid artham vinishcitya laghu muulam mahaa udayam |
kShipram aarabhase kartum na diirghayasi raaghava ||
2-100-19
ரகுகுலகுமாரனே! அற்பமுயற்சியால்
ஸித்திக்கத்தக்கதும் மிக்கபொருள்
விளையத் தக்கதுமாகிய
ஒருகார்யத்தைச் செய்ய
நிச்சயித்துத் தாமஸிக்காமல்
சீக்ரமாகவே அதைச்
செய்து முடிக்கத்
தொடங்குகின்றாயா?
कच्चित्
तु सुकृतान्य् एव कृत रूपाणि वा पुनः |
विदुः
ते सर्व कार्याणि न कर्तव्यानि पार्थिवाः || २-१००-२०
kaccit tu sukR^itaany eva kR^ita ruupaaNi vaa punaH |
viduH te sarva kaaryaaNi na kartavyaani paarthivaaH ||
2-100-20
உன் பகைமன்னர்களுக்கு
நீ ஆலோசித்த
கார்யங்களெல்லாம், அவை
நன்றாக முடிந்து
நிறைவேறின பின்பாவது
ஏறக்குறைய முடிந்து
பயன்பெறும் ஸமயத்திலாவது
மாத்ரமேயன்றிச் செய்து
முடிப்பதற்குமுன்பே எள்ளளவும்
தெரியாதிருக்கின்றனவா?
कच्चिन्
न तर्कैर् युक्त्वा वा ये च अप्य् अपरिकीर्तिताः |
त्वया
वा तव वा अमात्यैर् बुध्यते तात मन्त्रितम् || २-१००-२१
kaccin na tarkair yuktvaa vaa ye ca apy aparikiirtitaaH |
tvayaa vaa tava vaa amaatyair budhyate taata mantritam ||
2-100-21
அப்பனே! நீயாவது உன்
மந்த்ரிகளாவது ஆலோசித்த
கார்யங்களைப் பிறர்
ஊஹத்தாலாவது யுக்தியாலாவது
இங்கிதம் முதலிய
மற்றக் காரணங்களாலாவது
சிறிதும் அறியாதிருக்கிறர்களா?
कच्चित्
सहस्रान् मूर्खाणाम् एकम् इग्च्छसि पण्डितम् |
पण्डितो
ह्य् अर्थ कृग्च्छ्रेषु कुर्यान् निह्श्रेयसम् महत् || २-१००-२२
kaccit sahasraan muurkhaaNaam ekam igcchhasi paNDitam |
paNDito hy artha kR^igcchhreShu kuryaan nihshreyasam mahat
|| 2-100-22
நீ மூர்க்கர்கள் ஆயிரம்
பேர்களைத் துறந்தாயினும்
நன்கு ஆலோசித்துச்
செய்யும் பண்டிதனொருவனையே
விரும்புகிறயா? கார்ய
ஸங்கடங்களில் பண்டிதனன்றோ
நன்காராய்ந்து பெருநலம்
விளையுமாறு செய்வான்.
सहस्राण्य्
अपि मूर्खाणाम् यद्य् उपास्ते मही पतिः |
अथ
वा अप्य् अयुतान्य् एव न अस्ति तेषु सहायता || २-१००-२३
sahasraaNy api muurkhaaNaam yady upaaste mahii patiH |
atha vaa apy ayutaany eva na asti teShu sahaayataa ||
2-100-23
அரசன் மூர்க்கர்களை ஆயிரம்
பேர்களையாவது பதினாயிரம்
பேர்களையாவது அடுத்திருப்பானாயினும்
அவர்களால் அவனுக்கு
மந்த்ரோபாயங்களில் ஸஹாயஞ்
சிறிதுமுண்டாகாது.
एको
अप्य् अमात्यो मेधावी शूरो दक्षो विचक्षणः |
राजानम्
राज मात्रम् वा प्रापयेन् महतीम् श्रियम् || २-१००-२४
eko apy amaatyo medhaavii shuuro dakSho vicakShaNaH |
raajaanam raaja maatram vaa praapayen mahatiim shriyam ||
2-100-24
பிறர் சொன்ன அர்த்தங்களை
உடனே அறியுந்
திறமுடையவனும் நிலைநின்ற
புத்தியுடையவனும் விசாரத்தில்
ஸமர்த்தனும் நீதிசாஸ்த்ரங்களில்
தீர்ந்தவனுமான மந்த்ரி
ஒருவன் உளனாயினும்
ராஜனுக்காவது ராஜனைப்
போன்றவனுக்காவது மிகுந்த
ஐஶ்வர்யத்தை விளைப்பான்.
कच्चिन्
मुख्या महत्सु एव मध्यमेषु च मध्यमाः |
जघन्याः
च जघन्येषु भृत्याः कर्मसु योजिताः || २-१००-२५
kaccin mukhyaa mahatsu eva madhyameShu ca madhyamaaH |
jaghanyaaH ca jaghanyeShu bhR^ityaaH karmasu yojitaaH ||
2-100-25
சிறந்த ப்ருத்யர்களைச்
சமையல் முதலிய
சிறந்த கார்யங்களிலும், நடுத்தரமானவர்களைப்
படுக்கை போடுவது
முதலிய நடுத்தரமான
கார்யங்களிலும், கடையானவர்களைக்
காலலம்புவது முதலிய
கடையாயுள்ள கார்யங்களிலும்
ஏவுகின்றனையா?
अमात्यान्
उपधा अतीतान् पितृ पैतामहान् शुचीन् |
श्रेष्ठान्
श्रेष्ठेषु कच्चित् त्वम् नियोजयसि कर्मसु || २-१००-२६
amaatyaan upadhaa atiitaan pitR^i paitaamahaan shuciin |
shreShThaan shreShTheShu kaccit tvam niyojayasi karmasu ||
2-100-26
நன்கு பரீக்ஷிக்கப்பட்டவர்களும்
கபடமற்றவர்களும் தகப்பன்
பாட்டன் பரம்பரையில்
வந்தவர்களும் பரிசுத்தர்களுமான
மந்த்ரிகளையே சிறந்த
கார்யங்களில் ஏவுகின்றனையா?
कच्चिन्नोग्रेण दण्डेन भृशमुद्वेजितप्रजम् |
राज्यं तवानुजानन्ति मन्त्रिणः कैकयीसुत ||
२-१००-२७
kaccinnogreNa daNDena bhR^ishamudvejitaprajam |
raajyaM tavaanujaananti mantriNaH kaikayiisuta || 2-100-27
கைகேயியின் குமாரனே! நீ
ப்ரஜைகளுக்கு உக்ரமான
தண்டனைகளைச் செய்து
ராஜ்யத்தைப் பீடிப்பாயாயின், உன்
மந்த்ரிகள் அதற்கு
ஸம்மதிக்காமல் உன்னைத்
தடுக்கின்றார்களா?
कच्चित् त्वाम् न अवजानन्ति याजकाः पतितम्
यथा |
उग्र प्रतिग्रहीतारम् कामयानम् इव स्त्रियः ||
२-१००-२८
kaccit tvaam na avajaananti yaajakaaH patitam yathaa |
ugra pratigrahiitaaram kaamayaanam iva striyaH || 2-100-28
துர்தானங்களை வாங்கிப்
பணம் ஸம்பாதித்து
யாகஞ்செய்ய விரும்புகின்றவனை
ருத்விக்குகள் நிந்திப்பதுபோலவும், பலாத்காரஞ்செய்து
அனுபவிக்க விரும்புங்
காமுகனை ஸ்த்ரீகள்
தூஷிப்பதுபோலவும், க்ரூரமான
கார்யங்களை விதித்துப்
பணம் ஸம்பாதிக்கிறானிவனென்று
உன்னை ப்ரஜைகள்
அவமதியாதிருக்கிறார்களா?
उपाय कुशलम् वैद्यम् भृत्य संदूषणे रतम् |
शूरम् ऐश्वर्य कामम् च यो न हन्ति स वध्यते ||
२-१००-२९
upaaya kushalam vaidyam bhR^itya sanduuShaNe ratam |
shuuram aishvarya kaamam ca yo na hanti sa vadhyate ||
2-100-29
ஸாமம் முதலான
உபாயங்களில் ஸமர்த்தனும்
குடிலநீதிகளை நன்கறிந்தவனும்
அந்தரங்கப்ருத்யர்கள்மேல் இல்லாத
தோஷங்களைச் சொல்லி
அவர்களைத் தொலையச்
செய்பவனும் ராஜதண்டனைக்கும்
பயப்படாத சூரனும்
அரசனும் ப்ரபுத்வத்தையே
அபஹரிக்க விரும்புபவனுமாகிய
புருஷனை அரசன்
கொல்லாதிருப்பானாயின் அவன்
அரசனைத் தப்பாமல்
கொன்றுவிடுவான். அப்படிப்பட்டவன்
உன்னிடத்தில் இல்லையன்றோ?
कच्चिद्द् हृष्टः च शूरः च धृतिमान् मतिमान्
शुचिः |
कुलीनः च अनुरक्तः च दक्षः सेना पतिः कृतः ||
२-१००-३०
kaccidd hR^iShTaH ca shuuraH ca dhR^itimaan matimaan shuciH
|
kuliinaH ca anuraktaH ca dakShaH senaa patiH kR^itaH ||
2-100-30
ராஜா ஸத்கார்யங்களுக்கு
ஸந்தோஷிப்பவனும், வ்யவஹாரங்களில்
கைதேர்ந்த சூரனும்
அந்தந்த ஸமயங்களுக்குத்
தகுந்தபடி தன்ஸைன்யங்களைச்
சேர்க்கவும் பிறர்
ஸைன்யத்தைப் பிரிக்கவும்
போதுமான புத்தியுடையவனும்
ஆபத்காலங்களில் தையம்
மிகுந்திருக்கப் பெற்றவனும்
உள்ளும் வெளியு
மொக்கப் பரிசுத்தனாயிருப்பவனும்
தன் ஸ்வாமியிடத்தில்
நம்பிக்கை யுடையவனும்
நற்குலத்தில் பிறந்தவனும்
தன்னிடத்தில் மிகுந்த
ப்ரீதியுடையவனும் கார்யத்தில்
வல்லவனுமான புஷனை
ஸேனாபதியாகச் செய்திருக்கின்றனையா?
बलवन्तः च कच्चित् ते मुख्या युद्ध विशारदाः |
दृष्ट अपदाना विक्रान्ताः त्वया सत्कृत्य
मानिताः || २-१००-३१
balavantaH ca kaccit te mukhyaa yuddha vishaaradaaH |
dR^iShTa apadaanaa vikraantaaH tvayaa satkR^itya maanitaaH
|| 2-100-31
மிகுந்த பலசாலிகளும்
யுத்தத்தில் பலமுறை
வெற்றி கொண்டவர்களும்
யாவர்க்கும் ப்ரயக்ஷமான
பௌருஷச் செய்கையுடையவர்களும்
சூரர்களுமான முக்ய
புருஷர்களுக்கு உரிய
வெகுமதிகளால் மர்யாதை
செய்கின்றனையா?
कचिद् बलस्य भक्तम् च वेतनम् च यथा उचितम् |
सम्प्राप्त कालम् दातव्यम् ददासि न विलम्बसे ||
२-१००-३२
kacid balasya bhaktam ca vetanam ca yathaa ucitam |
sampraapta kaalam daatavyam dadaasi na vilambase || 2-100-32
ஸேனாஜனங்களுக்கு அந்தந்தக்
காலங்களில் கொடுக்கவேண்டிய
உணவையும், சம்பளத்தையும்
காலந்தவறாமல் அவரவர்க்குத்
தகுந்தபடி கொடுக்கின்றனையா?
काल अतिक्रमणे ह्य् एव भक्त वेतनयोर् भृताः |
भर्तुः कुप्यन्ति दुष्यन्ति सो अनर्थः
सुमहान् स्मृतः || २-१००-३३
kaala atikramaNe hy eva bhakta vetanayor bhR^itaaH |
bhartuH kupyanti duShyanti so anarthaH sumahaan smR^itaH ||
2-100-33
படர்கள், நாம்
கொடுக்குமுணவுகளையும் சம்பளத்தையுங்கொண்டு
ஜீவிப்பவர்களகையால் கொடுக்கவேண்டிய
காலத்தை அதிக்ரமிக்கும்பக்ஷத்தில்
ப்ரபுவின்மேல் கோபங்கொண்டு
கெடுதியைச் செய்ய
முயல்வார்கள். அதைப்
பெரும் அனர்த்தமாகப்
பெரியோர்கள் கூறுகின்றனர்.
कच्चित् सर्वे अनुरक्ताः त्वाम् कुल पुत्राः
प्रधानतः |
कच्चित् प्राणामः तव अर्थेषु सम्त्यजन्ति
समाहिताः || २-१००-३४
kaccit sarve anuraktaaH tvaam kula putraaH pradhaanataH |
kaccit praaNaamH tava artheShu samtyajanti samaahitaaH ||
2-100-34
ப்ரதானமான க்ஷத்ரிய
குலத்திற் பிறந்தவர்கள்
அனைவரும் உன்னோடு
ப்ரீதியோடி ருக்கின்றார்களா? அவர்கள்
மனப்பூர்வகமாக உன்
விஷயத்தில் தமது
ப்ராணன்களை யாயினும்
துறந்து உதவி
செய்ய ஸித்தமா
யிருக்கிறார்களா?
कच्चिज् जानपदो विद्वान् दक्षिणः
प्रतिभानवान् |
यथा उक्त वादी दूतः ते कृतो भरत पण्डितः ||
२-१००-३५
kaccij jaanapado vidvaan dakShiNaH pratibhaanavaan |
yathaa ukta vaadii duutaH te kR^ito bharata paNDitaH ||
2-100-35
பரதா! உன்
தேசத்திலேயே பிறந்தவனும், பிறரது
அபிப்ராயங்களை அறியுந்
திறமுடையவனும், அப்பொழுதைக்கப்பொழுது
மேன்மேலும் புதிது
புதிதாகத் தோற்றங்
கொள்கின்ற புத்தியுடையவனும், தன்னிடஞ்
சொன்னவற்றை சிறிதுந்
தவறாமல் செய்து
நிர்வஹிப்பவனும், யுக்தாயுக்தங்களை
யறிந்து சொல்லத்
தெரிந்தவனுமாகிய புருஷனைத்
தூதனாக வைத்துக்கொண்டிருக்கின்றனையா?
कच्चिद् अष्टादशान्य् एषु स्व पक्षे दश पन्च
च |
त्रिभिः त्रिभिर् अविज्नातैर् वेत्सि
तीर्थानि चारकैः || २-१००-३६
kaccid aShTaadashaany eShu sva pakShe dasha panca ca |
tribhiH tribhir avijnaatair vetsi tiirthaani caarakaiH ||
2-100-36
நீ உன்
சத்ரு பக்ஷத்திலுள்ள
மந்த்ரி முதலிய
பதினெட்டுத் தீர்த்தங்களையும், ஒவ்வொருவர்க்கும்
மும்மூன்று சாரர்களாக
ஒருவருக்கொருவர் முகமறியாதவர்களை
அனுப்பி அவரது
ரஹஸ்யங்களைத் தெரிந்து
கொள்கின்றனையா? அப்படியே
உன் பக்ஷத்திலும்
எப்பொழுதும் உன்னெதிரிலேயே
யிருக்கிற மந்த்ரி
புரோஹித யுவராஜர்களென்னும்
மூவரைத் தவிர
மற்றைப் பதினைந்து
தீர்த்தங்களையும் அப்படியே
மும்மூன்று முகமறியாத
சாரர்களை வைத்து
அவரது ரஹஸ்யங்களை
அறிகின்றனையா?
कच्चिद् व्यपास्तान् अहितान् प्रतियातामः च
सर्वदा |
दुर्बलान् अनवज्नाय वर्तसे रिपु सूदन ||
२-१००-३७
kaccid vyapaastaan ahitaan pratiyaataamH ca sarvadaa |
durbalaan anavajnaaya vartase ripu suudana || 2-100-37
சத்ருக்களைத் தொலைப்பவனே! உன்னால்
துரத்தப்பட்ட சத்ருக்கள்
சிலகாலங் கழித்துத்
திரும்பி வரும்பொழுது
துர்ப்பலர்களென்று அவர்களை
லக்ஷ்யஞ் செய்யமலிருப்பது
தவிர்ந்து எப்பொழுதும்
அவர்களிடத்தில் மனவூக்கத்துட
னிருக்கின்றனையா?
कच्चिन् न लोकायतिकान् ब्राह्मणामः तात सेवसे
|
अनर्थ कुशला ह्य् एते बालाः पण्डित मानिनः ||
२-१००-३८
kaccin na lokaayatikaan braahmaNaamH taata sevase |
anartha kushalaa hy ete baalaaH paNDita maaninaH || 2-100-38
அப்பா! நாஸ்திகரான
ப்ராஹ்மணர்களை அருகில்
சேரவொட்டாமல் உபேக்ஷை
செய்கின்றனையா? இவர்கள்
மூர்க்கர்களாயினும் தம்மைப்
பண்டிதர்களாகத்தாமே நினைத்துக்கொண்டிருப்பவர். ஆகையால்
துர்ப்போதனை செய்து
தர்மலோபம் அதர்மாசரணம்
முதலிய பல
அனர்த்தங்களை விளைப்பதில்
வல்லவர்.
धर्म शास्त्रेषु मुख्येषु विद्यमानेषु
दुर्बुधाः |
बुद्धिमान् वीक्षिकीम् प्राप्य निरर्थम्
प्रवदन्ति ते || २-१००-३९
dharma shaastreShu mukhyeShu vidyamaaneShu durbudhaaH |
buddhimaan viikShikiim praapya nirartham pravadanti te ||
2-100-39
துர்ப்புத்திகளான அந்நாஸ்திகர்கள்
ஸாத்விகர்களாகிய மஹர்ஷிகள்
செய்ததும் ஸஜ்ஜனங்கள்
ஆதரிக்கையால் முக்யங்களுமான
தர்மஶாஸ்த்ரங்கள் இருக்கையில்
அவைகளை விட்டு
நிலைநில்லாததான கேவல
தர்க்க யுக்திகளைக்
கொண்டு பயன்
சிறிதுமின்றிப் பலவாகப்
பேசுவார்கள்.
वीरैर्
अध्युषिताम् पूर्वम् अस्माकम् तात पूर्वकैः |
सत्य
नामाम् दृढ द्वाराम् हस्त्य् अश्व रथ सम्कुलाम् || २-१००-४०
ब्राह्मणैः
क्षत्रियैर् वैश्यैः स्व कर्म निरतैः सदा |
जित
इन्द्रियैर् महा उत्साहैर् वृत अमात्यैः सहस्रशः || २-१००-४१
प्रासादैर्
विविध आकारैर् वृताम् वैद्य जन आकुलाम् |
कच्चित्
समुदिताम् स्फीताम् अयोध्याम् परिरक्षसि || २-१००-४२
viirair adhyuShitaam puurvam asmaakam taata puurvakaiH |
satya naamaam dR^iDha dvaaraam hasty ashva ratha samkulaam
|| 2-100-40
braahmaNaiH kShatriyair vaishyaiH sva karma nirataiH sadaa |
jita indriyair mahaa utsaahair vR^ita amaatyaiH sahasrashaH
|| 2-100-41
praasaadair vividha aakaarair vR^itaam vaidya jana aakulaam
|
kaccit samuditaam sphiitaam ayodhyaam parirakShasi ||
2-100-42
என்னப்பா! அயோத்யை
பராக்ரமசாலிகளான நம்பூர்வர்கள்
வஸித்திருந்த நகரம். ஆகையால்
உண்மையான பேருடன்
சத்ருக்களுக்குச் சிறிதும்
புகக்கூடாதது. அதன்
வெளிப்புறத்து வாசற்படிகள்
மிகவும் திடமாயிருப்பவை. மேலும்
அது ரத
கஜ துரகங்கள்
நிறைந்திருக்கப் பெற்றது. தந்தமது
கர்மங்களில் மனவூக்கங்
கொண்டு ஜிதேந்த்ரியர்களும்
உத்ஸாஹமுடையவர்களும் பூஜ்யர்களுமாகிய
ப்ராஹ்மணர்களும் பலவாயிரம்பேர்
வாஸஞ்செய்யப் பெற்றது. நானாவித
உப்பரிகைகளினால் சூழப்பட்டது. வித்வத்ஜனங்களால்
விளக்கமுற்றது. மனக்களிப்புற்ற
ஜனங்களுடையது. ஸகல
ஸம்பத்ஸம்ருத்தியும் நிரம்பப்
பெற்றது. அவ்வயோத்யாபுரத்தை
பத்ரமாகப் பரிபாலித்து
வருகின்றாயா?
कच्चिच्
चैत्य शतैर् जुष्टः सुनिविष्ट जन आकुलः |
देव
स्थानैः प्रपाभिः च तडागैः च उपशोभितः || २-१००-४३
प्रहृष्ट
नर नारीकः समाज उत्सव शोभितः |
सुकृष्ट
सीमा पशुमान् हिंसाभिर् अभिवर्जितः || २-१००-४४
अदेव
मातृको रम्यः श्वा पदैः परिवर्जितः |
परित्यक्तो
भयैः सर्वैः खनिभिश्चोपशोभितः २-१००-४५
विवर्जितो
नरैः पापैर्मम पूर्वैः सुरक्षितः |
कच्चिज्
जन पदः स्फीतः सुखम् वसति राघव || २-१००-४६
kaccic caitya shatair juShTaH suniviShTa jana aakulaH |
deva sthaanaiH prapaabhiH ca taDaagaiH ca upashobhitaH ||
2-100-43
prahR^iShTa nara naariikaH samaaja utsava shobhitaH |
sukR^iShTa siimaa pashumaan hi.nsaabhir abhivarjitaH ||
2-100-44
adeva maatR^iko ramyaH shvaa padaiH parivarjitaH |
parityakto bhayaiH sarvaiH khanibhishchopashobhitaH 2-100-45
vivarjito naraiH paapairmama puurvaiH surakShitaH |
kaccij jana padaH sphiitaH sukham vasati raaghava || 2-100-46
நமது தேசம்
அஶ்வமேதம் முதலிய
மஹா யாகம்
நடத்தின ப்ரதேசங்களோடு
கூடியதும் நல்ல
அரசாட்சி மழை
ஆரோக்யம் முதலிய
குணங்களைப் பற்றித்
தேசாந்தரத்தை நெஞ்சிலும்
நினைக்க நேராத
ஜனங்கள் நிரம்பியதும்
தேவாலயங்களும் தண்ணீர்ப்
பந்தல்களும் தடாகங்களும்
விளங்கப்பெற்றதும் என்றும்
ஸந்தோஷமுற்ற ஸ்த்ரீபுருஷர்களையுடையதும்
ஜனங்கள் கூட்டங்கூடி
நடத்தும் உத்ஸவங்களால்
ப்ரகாசிப்பதும் நன்கு
உழப்பட்ட நிலங்கள்
பொருந்தியதும் மிக்க
பசுநிரை யுடையதும்
ஹிம்ஸையென்பது சிறிதுமில்லாததும்
மழையை எதிர்பார்த்தே
ஆகவேண்டிய நிர்ப்பந்தமின்றி
ஆற்றுநீர்ப் பாய்ச்சலுடையதும்
தோட்டம் முதலியவற்றால்
அழகாயிருப்பதும் வ்யாக்ரம்
முதலிய கொடிய
ஜந்துக்களற்றதும் தன்னைச்
சுற்றி நாற்புறத்திலுங்கூடத்
திருடு முதலிய
ஸகல பயங்களும்
நீங்கியது. ஸ்வர்ணம் ரத்னம்
முதலியன விளையுமிடங்கள்
நிறைந்ததும் பாபிஷ்ட
ஜனங்களில்லாததும் நமது
பூர்விகர்களால் பாதுகாக்கப்பட்டதுமாகி
ப்ரகாசித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட
அத்தேசம் முழுவதும்
ஸம்பத்ஸம்ருத்தியுடன் ஸுகமாயிருக்கின்றதா?
कच्चित् ते दयिताः सर्वे कृषि गो रक्ष जीविनः
|
वार्तायाम् संश्रितः तात लोको हि सुखम् एधते ||
२-१००-४७
kaccit te dayitaaH sarve kR^iShi go rakSha jiivinaH |
vaartaayaam sanshritaH taata loko hi sukham edhate ||
2-100-47
அப்பனே! பயிசெய்தல்
பசு ஸம்ரக்ஷணம்
முதலியவற்றால் ஜீவிப்பவர்களகிய
வைஶ்யர்கள் அனைவரும்
உன்னிஷ்டப்படி நடக்கின்றார்களா! வ்யாபாரம்
நன்கு வளர்ந்து
வருமாயின், உன்னைப் பற்றின
ஜனங்களுக்கு ஸுகம்
மேன்மேலும் பெருகிவரும்.
तेषाम् गुप्ति परीहारैः कच्चित् ते भरणम्
कृतम् |
रक्ष्या हि राज्ना धर्मेण सर्वे विषय वासिनः ||
२-१००-४८
teShaam gupti pariihaaraiH kaccit te bharaNam kR^itam |
rakShyaa hi raajnaa dharmeNa sarve viShaya vaasinaH ||
2-100-48
நீ அந்த
வைஶ்யர்களுக்கு அபீஷ்டங்களைக்
கொடுத்துக் காத்தும்
அநிஷ்டங்களைப் போக்கியும்
அவர்களைப் போஷித்து
வருகின்றாயா? அரசன்
தர்மத்தில் நிலைநின்று
தன்தேசத்து ஜனங்களெல்லோரையும்
தப்பாமல் காக்க
வேண்டுமல்லவா?
कच्चित् स्त्रियः सान्त्वयसि कच्चित् ताः च
सुरक्षिताः |
कच्चिन् न श्रद्दधास्य आसाम् कच्चिद् गुह्यम्
न भाषसे || २-१००-४९
kaccit striyaH saantvayasi kaccit taaH ca surakShitaaH |
kaccin na shraddadhaasya aasaam kaccid guhyam na bhaaShase
|| 2-100-49
நீ உன்
மனைவிகளை நல்வார்த்தைகளால்
மனக்களிப்புறச் செய்து
அவர்க்கு அனுகூலமாயிருக்கின்றனையா? அவர்களுக்கு
பரபுருஷ ஸம்பாஷணாதிகள்
நேராதபடி மிகவும்
பத்ரமாக அவர்களைக்
காக்கின்றனையா? அவர்களிடம்
நம்பிக்கையில்லாமல் ரஹஸ்யங்களைச்
சொல்லாதிருக்கின்றனையா?
कच्चिन्नागवनं गुप्तं कच्चित्ते सन्ति
धेनुकाः |
कचिन्न गणिकाश्वानां कुञ्जराणां च तृप्यसि ||
२-१००-५०
kaccinnaagavanaM guptaM kaccitte santi dhenukaaH |
kachinna gaNikaashvaanaaM kuJNjaraaNaaM cha tR^ipyasi ||
2-100-50
யானைகளுக்கு
ஊத்பத்தி ஸ்தானமாகிய
வனத்தை நன்கு
ரக்ஷிக்கின்றனையா? காட்டு
யானைகளை வசப்படுத்திப்
பிடிக்கவல்ல பெண்
யானைகள் உன்னிட
மிருக்கின்றவா? பின்னும்
பெண் யானைகளையும்
யானைகளையும் குதிரைகளையும்
ஸங்க்ரஹிப்பதில் இது
போதுமென்னும் த்ருப்தி
உண்டாகப் பெறாதிருக்கின்றனையா?
कच्चिद् दर्शयसे नित्यम् मनुष्याणाम्
विभूषितम् |
उत्थाय उत्थाय पूर्व अह्णे राज पुत्रो महा
पथे || २-१००-५१
kaccid darshayase nityam manuShyaaNaam vibhuuShitam |
utthaaya utthaaya puurva ahNe raaja putro mahaa pathe ||
2-100-51
ராஜகுமாரனே! நீ
ப்ரதிதினமும் விடியற்காலையில்
எழுந்திருந்து அலங்காரஞ்
செய்துகொண்டு ஸபையில்
ஜனங்களுக்கு தர்சனங்
கொடுக்கின்றனையா? வேலைக்காரர்ளெல்லாரும்
பயமின்றி உன்னெதிரில்
வாராதிருக்கின்றார்களா?
कच्चिन्न सर्वे कर्मान्ताः
प्रत्यक्षास्तेऽविशङ्कया ।
सर्वे वा पुनरुत्सृष्टा मध्यमे वात्र कारणम् ॥
२-१००-५२
kaccinna sarve karmaantaaH pratyakShaaste.avishaN^kayaa |
sarve vaa punarutsR^iShTaa madhyame vaatra kaaraNam 2-100-52
ஆனால் அவர்களுக்கு
அடியோடு தர்சனங்
கொடாதிராமலும் அடிக்கடி
தர்சனங் கொடுக்காமலும்
அவர்கள் கார்யத்தை
விசாரிக்குமளவே தர்சனங்
கொடுத்து மர்யாதை
குன்றாமல் பெருமதிப்புடனிருக்கின்றாயா? நடுத்தரமாயிருப்பதே
கார்ய ஸித்தியை
விளைக்க வல்லது.
कच्चित् सर्वाणि दुर्गाणि धन धान्य आयुध
उदकैः |
यन्त्रैः च परिपूर्णानि तथा शिल्पि धनुर्
धरैः || २-१००-५३
kaccit sarvaaNi durgaaNi dhana dhaanya aayudha udakaiH |
yantraiH ca paripuurNaani tathaa shilpi dhanur dharaiH ||
2-100-53
உனது
கோட்டைகளெல்லாம் தனதான்யங்களலும்
ஜலத்தினாலும் பலவகை
ஆயுதங்களாலும் யந்த்ரங்களலும்
ஸம்பூர்ணமாகிச் சிற்பிகளும்
வில்லாளிகளும் நிறையப்
பெற்றிருக்கின்றனவா?
आयः ते विपुलः कच्चित् कच्चिद् अल्पतरो व्ययः
|
अपात्रेषु न ते कच्चित् कोशो गग्च्छति राघव ||
२-१००-५४
aayaH te vipulaH kaccit kaccid alpataro vyayaH |
apaatreShu na te kaccit kosho gagcchhati raaghava ||
2-100-54
ரகுகுலகுமாரனே! உனக்கு வரவு அதிகமாகவும் செலவு மிகக் குறைவாகவு மிருக்கின்றதா? ராகவா! நடர் விடர் காயகர் முதலிய அபாத்ரங்களில் உன் பொக்கிஷம் போய்ச் சேராதிருக்கின்றதா?
देवता अर्थे च पित्र् अर्थे ब्राह्मण
अभ्यागतेषु च |
योधेषु मित्र वर्गेषु कच्चिद् गग्च्छति ते
व्ययः || २-१००-५५
devataa arthe ca pitr arthe braahmaNa abhyaagateShu ca |
yodheShu mitra vargeShu kaccid gagcchhati te vyayaH ||
2-100-55
உன்
செலவு தேவதைகள்
பித்ருதேவதைகள் ப்ராஹ்மணர்கள்
அதிதிகள் படர்கள்
நண்பர்கள் ஆகிய
இவர்கள் விஷயத்தில்
உபயோகப்பட்டு வருகின்றதா?
कच्चिद् आर्यो विशुद्ध आत्मा क्षारितः चोर
कर्मणा |
अपृष्टः शास्त्र कुशलैर् न लोभाद् बध्यते
शुचिः || २-१००-५६
kaccid aaryo vishuddha aatmaa kShaaritaH cora karmaNaa |
apR^iShTaH shaastra kushalair na lobhaad badhyate shuciH ||
2-100-56
பரிசுத்தமான
ஸ்வபாவமுடையவனும் மனோவாக்காயங்களென்னும்
மூன்று கரணங்களும்
சுத்தமாயிருக்கப்பெற்ற பூஜ்யனுமாகிய
புருஷன் தெய்வாதீனமாகக்
களவு செய்ததாகக்
குற்றம் சார்த்தப்பட்டு
எதிரில் கொண்டுவரப்படுவானாயின், அவனை
நீதி சாஸ்த்ரங்களுணர்ந்த
பண்டிதர்களைக்கொண்டு கேட்பித்து
நன்கு விசாரணை
செய்யாமல் பொருளாசையால்
தண்டனை செய்யாதிருக்கின்றனையா?
गृहीतः चैव पृष्टः च काले दृष्टः सकारणः |
कच्चिन् न मुच्यते चोरो धन लोभान् नर ऋषभ ||
२-१००-५७
gR^ihiitaH caiva pR^iShTaH ca kaale dR^iShTaH sakaaraNaH |
kaccin na mucyate coro dhana lobhaan nara R^iShabha ||
2-100-57
புருஷஶ்ரேஷ்டனே! ஒருவன்
திருடிவிட்டு ஓடிப்போவானாயினும்
தகுந்த காலத்தில்
பார்த்துத் திருடின
வஸ்துவுடன் பிடித்துப்
பண்டிதர்களால் விசாரிக்கப்பட்டுத்
திருடனே இவனென்று
நிச்சயிக்கப்பட்டவனையும் அவனிடம்
பணம் வாங்கிக்கொண்டு
பணத்தாசையால் அவனை
விட்டுவிடாமல் தண்டனைசெய்கின்ற
னையா?
व्यसने कच्चिद् आढ्यस्य दुगतस्य च राघव |
अर्थम् विरागाः पश्यन्ति तव अमात्या बहु
श्रुताः || २-१००-५८
vyasane kaccid aaDhyasya dugatasya ca raaghava |
artham viraagaaH pashyanti tava amaatyaa bahu shrutaaH ||
2-100-58
ரகுவம்சத்திற் பிறந்தவனே! மிகவும்
அறிஞர்களாகிய உன்
மந்த்ரிகள் பனக்காரனுக்கும்
ஏழைக்கும் விவாதம்
வருகையில் பனத்திலாசையில்லாமல்
அவர்களது வ்யவஹாரத்தைப்
பக்ஷபாதமின்றிப் பரீக்ஷிக்கிறார்களா?
यानि मिथ्या अभिशस्तानाम् पतन्त्य् अस्राणि
राघव |
तानि पुत्र पशून् घ्नन्ति प्रीत्य् अर्थम्
अनुशासतः || २-१००-५९
yaani mithyaa abhishastaanaam patanty asraaNi raaghava |
taani putra pashuun ghnanti priity artham anushaasataH ||
2-100-59
ராகவா! ஒருவன்
தனது போகபாக்யங்களை
மேலாக எண்ணி
வ்யவஹாரங்களை நன்கு
விசாரணை செய்யாமல்
ஒருவனிடம் பொய்யான
குற்றம் சார்த்தித்
தண்டனை விதிப்பானாயின், அவ்வாறு
தண்டனைக்குட்பட்டவன் மனவருத்தமுற்றுப்
பெருக்கும் கண்ணீர்
தண்டித்தவனது புத்ரன்
பசுமுதலிய எல்லாவற்றையும்
அழித்துவிடும்.
कच्चिद् वृधामः च बालामः च वैद्य मुख्यामः च
राघव |
दानेन मनसा वाचा त्रिभिर् एतैर् बुभूषसे ||
२-१००-६०
kaccid vR^idhaamH ca baalaamH ca vaidya mukhyaamH ca
raaghava |
daanena manasaa vaacaa tribhir etair bubhuuShase || 2-100-60
ரகுகுலத்திற் பிறந்தவனே! மூப்பினர்களையும்
பாலர்களையும் பண்டித
சிகாமணிகளையும் தனாதிகளைக்
கொடுத்தும் நட்பைக்காட்டியும்
நல்வார்த்தைகளைச் சொல்லியும்
இம்மூன்று உபாயங்களாலும்
கைவசப்படுத்துகின்றனையா?
कच्चिद् गुरूमः च वृद्धामः च तापसान् देवता
अतिथीन् |
चैत्यामः च सर्वान् सिद्ध अर्थान्
ब्राह्मणामः च नमस्यसि || २-१००-६१
kaccid guruumH ca vR^iddhaamH ca taapasaan devataa atithiin
|
caityaamH ca sarvaan siddha arthaan braahmaNaamH ca
namasyasi || 2-100-61
ஆசார்யர்களையும்
வயது சென்றவர்களையும்
தாபஸர்களையும் தேவதைகளையும்
அதிதிகளையும் நாற்சந்தி
வீதிகளில் தெய்வங்களுக்கிருப்பிடமான
மஹா வ்ருக்ஷங்களையும்
யோகாப்யாஸம் முதலியவற்றால்
க்ருதார்த்தர்களான ப்ராஹ்மணர்களையும்
வணங்குகின்றனையா?
कच्चिद् अर्थेन वा धर्मम् धर्मम् धर्मेण वा
पुनः |
उभौ वा प्रीति लोभेन कामेन न विबाधसे ||
२-१००-६२
kaccid arthena vaa dharmam dharmam dharmeNa vaa punaH |
ubhau vaa priiti lobhena kaamena na vibaadhase || 2-100-62
பொருளாசை
கொண்டு தர்மத்தையும், தர்மத்திலாசை
கொண்டு பொருளையும், ஸுகத்திலும்
காமத்திலும் ஆசை
கொண்டு தர்மார்த்தங்களிரண்டையும்
அழிவுறச் செய்யாதிருக்கின்றனையா?
कच्चिद् अर्थम् च धर्मम् च कामम् च जयताम् वर
|
विभज्य काले कालज्न सर्वान् भरत सेवसे ||
२-१००-६३
kaccid artham ca dharmam ca kaamam ca jayataam vara |
vibhajya kaale kaalajna sarvaan bharata sevase || 2-100-63
ஜயசீலர்களில் தலைவனே! நீ
அந்தந்தக் காலங்களை
யறிந்தவன்; ஆகையால் தர்மார்த்தகாமங்கல்
மூன்றையும் பிரித்து
அவ்வவற்றுக்குத் தகுந்த
காலத்தில் தவறாமல்
க்ரமமாய் அநுஷ்டித்து
வருகின்றனையா?
कच्चित् ते ब्राह्मणाः शर्म सर्व शास्त्र
अर्थ कोविदः |
आशंसन्ते महा प्राज्न पौर जानपदैः सह ||
२-१००-६४
kaccit te braahmaNaaH sharma sarva shaastra artha kovidaH |
aashansante mahaa praajna paura jaanapadaiH saha || 2-100-64
எல்லாமுணர்ந்தவனே! ஸகல
சாஸ்த்ரங்களையுமறிந்த ப்ராஹ்மணர்களும்
பட்டனத்து ஜனங்களும்
பள்ளிப்பட்டு ஜனங்களும்
உன் ஸுகத்தை
விரும்புகின்றார்களா?
नास्तिक्यम्
अनृतम् क्रोधम् प्रमादम् दीर्घ सूत्रताम् |
अदर्शनम्
ज्नानवताम् आलस्यम् पन्च वृत्तिताम् || २-१००-६५
एक
चिन्तनम् अर्थानाम् अनर्थज्नैः च मन्त्रणम् |
निश्चितानाम्
अनारम्भम् मन्त्रस्य अपरिलक्षणम् || २-१००-६६
मन्गलस्य
अप्रयोगम् च प्रत्युत्थानम् च सर्वशः |
कच्चित्
त्वम् वर्जयस्य् एतान् राज दोषामः चतुर् दश || २-१००-६७
naastikyam anR^itam krodham pramaadam diirgha suutrataam |
adarshanam jnaanavataam aalasyam panca vR^ittitaam ||
2-100-65
eka cintanam arthaanaam anarthajnaiH ca mantraNam |
nishcitaanaam anaarambham mantrasya aparilakShaNam ||
2-100-66
mangalasya aprayogam ca pratyutthaanam ca sarvashaH |
kaccit tvam varjayasy etaan raaja doShaamH catur dasha ||
2-100-67
தெய்வமும் பரலோகமுமில்லையென்றிருக்கை, பொய்பேசுகை, மிகச்சின
முறுகை, மனவூக்கமற்றிருக்கை, ஆலஸ்யங்கொண்டு
கார்யங்களை நிறைவேற்றாமை, பெரியோர்களைத்
தர்சனஞ் செய்யாமல்
இறுமாந்திருக்கை, மத்யம்
முதலியவற்றைக் குடித்து
மதம் பிடித்துத்
திரிகை, ஐப்புலன்களையும்
அடக்காமல் அவற்றின்
வழியே செல்லுகை, மந்த்ரிகள்
வேண்டாமென்று தானொருவனே
கார்யாலோசனை செய்கை, நன்மையுணராத
மூடர்களோடாராய்கை, ஆலோசித்து
நிச்சயஞ் செய்த
விஷயத்தைச் செய்யாமல்
தாமஸஞ் செய்கை, தாம்
செய்த ஆலோசனையை
மறைக்காமல் வெளிப்படுத்துகை, விடியற்காலத்தில்
கண்ணாடி பார்த்தல்
முதலிய மங்கலப்ரயோகங்
களைச் செய்யாதிருக்கை, ஒரே
காலத்தில் பல
சத்ருக்களோடு யுத்தஞ்
செய்யப்போகை ஆகிய
இப்பதினாறு ராஜதோஷங்களையும்
நீ கைவிட்டிருக்கின்றனையா?
दशपंचचतुर्वर्गान् सप्तवर्गं च तत्त्वतः ।
अष्टवर्गम् त्रिवर्गं च विद्यास्तिस्रश्च
राघव ॥
२-१००-६८
इन्द्न्द्रियाणां जयं बुद्ध्यं षाड्गुण्यं
दैवमानुषम् ।
कृत्यं विंशतिवर्गं च तथा प्रकृतिमण्डलं ॥
२-१००-६९
यात्रादण्डविधानं च द्वियोनी संधिविग्रहौ ।
कच्छिदेतान् महाप्राज्ञ यथावदनुमन्यसे ॥२-१००-७०
dashapaMchachaturvargaan saptavargaM cha tattvataH |
aShTavargam trivargaM cha vidyaastisrashcha raaghava
2-100-68
indndriyaaNaaM jayaM buddhyaM ShaaDguNyaM daivamaanuSham |
kR^ityaM viMshativargaM cha tathaa prakR^itimaNDalaM ||
2-100-69
yaatraadaNDavidhaanaM cha dviyonii saMdhivigrahau |
kachchhidetaan mahaapraajJNa yathaavadanumanyase 2-100-70
தசவர்க்கம், பஞ்சவர்க்கம், சதுர்வர்க்கம், ஸப்தவர்க்கம், அஷ்டவர்க்கம், த்ரிவர்க்கம், மூன்று
வித்தைகள் என்னும்
இந்த்ரியவசீகரணம், ஆறு
குணங்கள், தெய்வத்தால் வருந்துன்பங்கள், பேதஞ்செய்தல், விம்சதிவர்க்கம், ப்ரக்ருதிமண்டலம், தண்டயாத்ரை, தண்டவிதானம், இருவகைப்பட்ட
ஸந்திவிக்ரஹங்கள் ஆகிய
இவைகளை விதிப்படி
நன்காராய்ந்து விடவேண்டியவற்றை
விட்டும் அனுஷ்டிக்க
வேண்டியவற்றை அனுஷ்டித்தும்
வருகின்றனையா?
मन्त्रिभिस्त्वं
यथोद्दिष्टैश्चतुर्भिस्त्रिभिरेव वा |
कच्चित्समस्तैर्व्यस्तैश्च मन्त्रं मन्त्रयसे
मिथः || २-१००-७१
mantribhistvaM yathoddiShTaishchaturbhistribhireva vaa |
kachchitsamastairvyastaishcha mantraM mantrayase mithaH ||
2-100-71
சாஸ்த்ரங்களில் சொல்லிய
லக்ஷணங்கள் பொருந்திய
மந்த்ரிகள் மூவரை
யாவது நால்வரையாவது
ஏற்படுத்திக்கொண்டு ரஹஸ்யமாக
அவர்களெல்லாரையும் உட்காரவைத்துக்கொண்டாவது
அல்லது ஒவ்வொருத்தரோடு
தனித்தனியேயாவது கலந்து
ஆலோசனை செய்கின்றனையா?
कच्चित्ते सफला वेदाः कच्चित्ते सफलाः
क्रियाः |
कच्चित्ते सफला दाराः कच्चित्ते सफलं श्रुतम्
|| २-१००-७२
kachchitte saphalaa vedaaH kachchitte saphalaaH kriyaaH |
kaccitte saphalaa daaraaH kachchitte saphalaM shrutam ||
2-100-72
நீ ஓதியுணர்ந்த
வேதங்கள், அக்னிஹோத்ரம் முதலிய
அனுஷ்டானங்களால் பயன்
பெற்றிருக்கின்றனவா? நீ
ஸம்பாதித்த பணங்கள்
தானபோகங்களால் ஸபலமாகின்றனவா? உன்
மனைவியர்கள் ஸம்போகஸுகத்தைக்
கொடுப்பதனாலும் நற்பிள்ளையைப்
பெறுவதனாலும் பயன்
படைத்திருக்கின்றனர்களா? நீ
கேட்ட சாஸ்த்ரங்கள்
உனக்கு நல்வழியைக்
காட்டிப் பயன்
பெறுகின்றனவா?
कच्चिदेषैव ते बुद्धिर्यथोक्ता मम राघा |
आयुष्या च यशस्या च धर्मकामार्थसंहिता ||
२-१००-७३
kachchideShaiva te buddhiryathoktaa mama raaghaa |
aayuShyaa cha yashasyaa cha dharmakaamaarthasaMhitaa ||
2-100-73
பரதா! வளர்ந்த
வாழ்நாளைக் கொடுப்பதும்
சிறந்த கீர்த்தியை
விளைப்பதும் தர்மார்த்த
காமங்களை அளிப்பதுமாகிய
புத்தியை உனக்கு
இப்பொழுது நான்
சொல்லினன்.
यां वृत्तिं वर्तते रातो यां चनः प्रपितामहाः
।
तां वृत्तिं वर्तसे कच्चिद्याच सत्पथगा शुभा ॥२-१००-७४
yaaM vR^ittiM vartate raato yaaM chanaH prapitaamahaaH |
taaM vR^ittiM vartase kachchidyaacha satpathagaa shubhaa
2-100-74
அது எனக்கு
எப்படியோ அப்படியே
உனக்கும் இருக்கின்றதா? நந்
தந்தை தசரதர்
எவ்வண்ணம் நடக்கின்றாரோ, நமது
முன்னோர்களான பாட்டன்மார்களும்
எவ்வண்ணம் நடந்தனர்களோ, எது
ஸன்மார்க்கத்திற்கிணங்கியும் நிந்தைக்கிடமன்றியுமிருக்குமோ, அப்படிப்பட்ட
நீதியைத் துறக்காமல்
நீயும் நடந்துவருகின்றனையா?
कच्चित् स्वादु कृतं भोज्यमेको नाश्नासि राघव
।
कच्चिदाशंसमानेभ्यो मित्रेभ्यः सम्प्रयच्छसि ॥
२-१००-७५
kachchit svaadu kR^itaM bhojyameko naashnaasi raaghava |
kachchidaashaMsamaanebhyo mitrebhyaH samprayachchhasi
2-100-75
ரகுவம்சத்திற் பிறந்தவனே! அறுசுவையும்
பொருந்தி நன்கு
அமைக்கப்பட்ட நல்லுணவை
நீ யொருவனே
உண்ணாமல் மித்ரர்களுக்கும்
கொடுக்கின்றனையா? நண்பர்கள்
வேண்டிய தனம்
முதலியவற்றைக் கொடுக்கின்றனையா?
अवाप्य कृत्स्नां वसुधां यथाव ।
दितश्छ्युतः स्वर्गमुपैति विद्वान् ॥
२-१००-७६
avaapya kR^itsnaaM vasudhaaM yathaava |
ditashchhyutaH svargamupaiti
vidvaan || 2-100-76
அரசனாயிருப்பவன் இவ்வாறு தர்மந்தவறாமல் உரிய தண்டனை செலுத்தி ப்ரஜைகளைப் பரிபாலனஞ்
செய்வானாயின், அவன் இம்மையில் ஸமஸ்த பூமண்டலத்திற்கும் அதிபதியாகி
மிகவும் ஆநந்தத்திலிருந்து சரீராத்மஜ்ஞாநம் பெற்றுக் கடைசியில் இந்த லோகத்தைவிட்டுப்
பூர்விக ராஜர்களைப்போல் ஸ்வர்க்கஞ் செல்வான்.
நூறவது ஸர்க்கம்
முற்றிற்று.
No comments:
Post a Comment